நுகர்வோருக்கு விழிப்புணர்வு தேவை!
வாடகை வீட்டில் குடியிருப்போருக்கு, விழிப்புணர்வை ஏற்படுத்தும், "கன்ஸ்யூமர்ஸ் அசோசியேஷன்
ஆப் இந்தியா' அமைப்பின் அறங்காவலர், நிர்மலா தேசிகன்: சென்னை போன்ற மெட்ரோ
நகரங்களில், சொந்த வீடு வாங்குவது குதிரை கொம்பாக உள்ளது. விண்ணை முட்டும்
விலைவாசி போன்றவற்றால், நடுத்தர மக்கள் சொந்த வீடு கட்ட முடியாமல், வாடகை
வீட்டிலேயே குடியேற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. வாடகை வீட்டில்
குடியேறினால், வீட்டின் உரிமையாளர் பல காரணம் கூறி, அதிக பணம் வசூலிப்பர்.
குறிப்பாக, மின்சாரத்திற்காக கட்ட வேண்டிய கட்டணமே, வீட்டின் வாடகையை
தாண்டி விடுகிறது. அர” வசூலிக்கும் மின் கட்டணத்திற்கு மேல், யாரும்
அதிகமாக வசூலிக்க கூடாது என்ற விதி உள்ளது. ஆனால், மின் மீட்டரின் யூனிட்
அளவை விட, கூடுதல் கட்டணம் வசூலிப்பர். கட்டணம் அதிகமாக இருக்கிறதே என,
வாடகைதாரர் கேள்வி கேட்டால், "இந்த ஆண்டு மின்சார வாரியத்திற்கு அதிக,
"டெபாசிட்' தொகை கட்ட வேண்டும். அதனால், டெபாசிட் தொகையை, சரி பாதியாக
அனைவருக்கும் பிரித்து தந்திருக்கிறேன்' என, காரணம் கூறுவார். இது
முற்றிலும் தவறு. ஏனெனில், டெபாசிட் தொகையை வீட்டின் உரிமையாளர் தான்,
முற்றிலும் கட்ட வேண்டும். வாடகைக்கு குடியிருப்போர், வெறும் நுகர்வோர்
மட்டுமே. வாடகைதாரர் தான் முற்றிலும் கட்ட வேண்டும் என, கட்டாயப்படுத்த
முடியாது. மீறினால், உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க,
வாடகைதாரருக்கு முழு உரிமை உள்ளது. இதற்கான புகாரை, "கன்ஸ்யூமர்ஸ்
அசோசியேஷன் ஆப் இந்தியா'வின் தொலைபேசி எண்ணான, 044-6633 4346க்கு தொடர்பு
கொண்டு, புகாரை பதிவு செய்யலாம். "ஹெல்ப் லைன்' எண்ணான, 044-2451 3191க்கு
தொடர்பு கொண்டு, தேவையான வழிகாட்டுதல்களை பெறலாம். இப்படி வீட்டின்
உரிமையாளர் மீது, வாடகைதாரர் புகார் செய்யும் பட்சத்தில், புகார் செய்த, 48
மணி நேரத்தில் இருந்து, ஏழு நாட்களுக்குள், புகாரின் மீது தக்க நடவடிக்கை
எடுக்கப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக