விக்கினேசுவரன் அவர்களை த் தமிழக த் தமிழர்களிடம் மன்னிப்பு கோரவேண்டுகிறது ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு
| |||||
சமீபத்தில்
ஹிந்துஸ்தான் டைம்ஸ் ( Hindustan Times.) இற்கு திரு விக்கினேஸ்வரன்
அவர்கள் ஒரு பிரத்தியேக பேட்டி கொடுத்திருந்தார். அதில் அவர்
குறிப்பிட்டிருந்த சில விடையங்கள் தமிழ் மக்களை கவலை கொள்ள வைத்துள்ளது.
அதனை கீழே குறிப்பிட்டுள்ளோம்.
1.
திரு விக்னேஸ்வரன் கூறுகையில் ஒரு விடையத்தை தெழிவாக கூறியுள்ளார். அது
என்னவெனில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தான் தீர்வென்றும் அதனை நாமே
தீர்த்துக்கொள்வோம் என்றும் பிறர் தலையீடு தேவையில்லை என்றும், குறிப்பாக
தமிழக தலைவர்கள் யாரும் அதில் தலையிட வேண்டாம் என்றும் கூறியுள்ளர். இது
இலங்கையின் ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்கள் சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கு சொல்லும்
கருத்தின் பாணியில் அமைந்துள்ளது.
2.
நமது தொப்பிள் கொடி உறவான தமிழக தமிழர்கள் எமக்கு விடுதலை வேண்டியும் நீதி
வேண்டியும் எவ்வாறெல்லாம் உதவினார்கள். எமக்காக தீக்குழித்து மாண்டு
போனவர்கள் எத்தனைபேர், எந்த விதங்களில் போராட முடியுமோ அந்த விதங்களில்;
எல்லாம் போராடியவர்கள், தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்களே நேரடியாக
சட்டசபையில் தமிழீழம் ஒன்றே தமிழர்களுக்கு சரியான தீர்வு, அதனை
பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று தீர்மானத்தனை நிறைவேற்றியவர், அத்துடன்
முன்னாள் அமெரிக்கா ராஜாங்க செயலளார் ஹிலாரி அவர்களை சென்னையில் வைத்து
சந்தித்து பேசியபோது கூட எமக்கு நீதி கிடைக்க வேண்டும், இனப்படுகொலை
செய்தவர்களை கட்டிப்பாக தண்டிக்கவேண்டும், போன்ற விடையத்தை வலியுத்தி
கூறியமையும்; அதன் பின்னரான அமெரிக்காவின் தொடர்
நடவடிக்கையுமே UNHRC மூலம் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரவும்
அழுத்தத்தினை ஏற்படுத்தவும் உதவியது. இதனை அமெரிக்கா ராஜாங்க உதவிச்
செயலாளர் பிளேக் அவர்கள் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்புடனான சந்தித்த போது
கூறியுள்ளார்.
3.
இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி பெற கடுமையான அழுத்தினை தமிழக அரசு
மற்;றும் தமிழக கட்சிகள், எல்லாவற்றுக்கும் மேலாக மாணவர்கள் பொமக்கள் என
அனைவரும் திரண்டெழுந்து எமக்காக வீதியில் இறங்கிப் போராடியதின் மூலமே
அமெரிக்காவின் தீர்மானத்திற்கு இந்திய அரசு ஆதரவு கொடுக்க முன்வந்தது.
தமிழகம் தான் எமது பலம.; அதனை அவமானப்படும் வகையில் கருத்துக்களை
வெளியிட்டமைக்கு முதலில் மன்னிப்பு கோரவேண்டும்.
4
திரு விக்னேஸ்வரன் கொடுத்த பேட்டியில், சிங்களவர்களை முழுமையாக கொண்ட
இலங்கை இராணுவத்ததை, குறிப்பாக எமது இனத்தை இலட்சக்கணக்கில் கொன்றொழித்து
பெண்களை கற்பழித்து, எமது இனத்தை கருவறுத்த இராணுவம் மற்றும் கடற்படையை
எமது இராணுவம், எமது கடற்படை என்று கூறியுள்ளார். இது போரில் பலரை இழந்த
எமது மக்களுக்கு மிகுந்த கோபத்தினை ஏற்படுத்தி உள்ளது.
5.
திரு விக்னேஸ்வரன் அவர்கள் கொழும்பில் வளர்ந்துதவர் அங்கேயே நிரந்தரமாக
வாழ்பவர். தமிழ் மண்ணின் இருப்பிற்காகவும், மண்ணை மீட்புக்காகவும்,
மக்களின் உரிமைகளை நிலை நாட்டவும், பல உயர்களை கொடுத்த மக்களின் உணர்வுகளை
எப்படி புரிந்து கொள்ள முடியும்?. முதல்வராக முன்னரே சர்ச்சையான தமிழ்
மக்களுக்கு எதிரான தன்மை கொண்ட கருத்தை தெருவிக்கும் ஒரு நபர், முதலமைச்சர்
ஆகி விட்டால் என்ன ஆகும் என்றே தெரியவில்லை.
எனவே
தமிழ் தேசியக் கூட்டமைப்பு திரு விக்னேஸ்வரனின் தெரிவை நீக்கிவிட்டு
வடகிழக்கு மாகாணத்தில் இருந்து மண்ணையும் மக்களையும் நேசிக்கக்கூடிய ஒருவரை
முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் எனபதே தமிழ் மக்களின்
விருப்பமாக உள்ளது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக