ஞாயிறு, 28 ஜூலை, 2013

அமெரிக்காவில் 1000 ஆண்டுகள் சிறைத் தண்டனை - கிறுக்குத்தனம்



இப்படிப்பட்ட கிறுக்குத்தனமான தண்டனைகள் வழங்குவது அமெரிக்காவின் வழக்கமாக உள்ளது. மனிதர்கள் வாழக்கூடிய காலத்திற்கும் மிகுதியாகச் சிறைத்தண்டனை விதிப்பதன் மூலம்  என்ன பயன் உள்ளது? ஆயுள் தண்டனைக்குப் பின் 1000 ஆண்டுகள் தண்டனை என்றால் கேலிககூத்தாக இல்லையா? நீதிபதியின் கணக்குப்படி 1000 ஆண்டுகள் வாழ்வதாகக் கொள்வோம்! அதுவும் ஆயுளில் அடங்கும் அலலவா? அப்படி இருக்க ஆயுள் தண்டனைக்குப் பின் எனக்கூறி யாரை முட்டாளாக்குகிறார்கள். அமரெரிக்கர்கள், அமெரிக்க நீதிபதிகளிடம் அறிவுக்குப் பொருந்திய வகையில் தண்டனை வழங்க அறிவுறுத்த வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/


அமெரிக்காவில் பலாத்கார குற்றவாளிக்கு 1000 ஆண்டுகள் சிறைத் தண்டனை

அமெரிக்காவில் க்லிவ்லாந்து பகுதியில் 3 பெண்களை கடத்திச் சென்று பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனையும், அதன் பிறகு 1000 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்துள்ளது.
கடந்த 2002ஆம் ஆண்டு காஸ்ட்ரோ என்பவன், 3 பெண்களை கடத்திச் சென்து தனது வீட்டில் அடைத்துவைத்து, பாலியல் பலாத்காரம் செய்து, தப்பிச் செல்ல முயன்றால், மிகக் கொடூரமாக தாக்கி துன்புறுத்தி வந்தான். இவனது காவலில் இருந்து இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு பெண் தப்பி வந்து காவல்நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து அவனை கைது செய்த காவல்துறையினர், பெண்களை மீட்டனர்.
இது குறித்து வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், காஸ்ட்ரோவுக்கு ஆயுள் தண்டனையும், அது முடிந்த பிறகு 1000 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக