தன்முன்னேற்றப் பயிலரங்கம், செ.வி. .உயர்நிலைப்பள்ளி, நாச்சியாபு ரம் 19.07.2013
சொ. வினைதீர்த்தான்
19.07.2013 அன்று சிவகங்கை மாவட்டம் நாச்சியாபுரம் ஜெயம்கொண்ட விநாயகர் உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவ மாணவியர் 80 பேருக்கு “வெற்றிக்கு அடிப்படை” என்ற தலைப்பில் தன்முன்னேற்றப் பயிலரங்கம் நடத்தும் வாய்ப்பு பள்ளிச் செயலர் திரு வயி.ச.இராமனாதன் முயற்சியால் எனக்கு வாய்த்தது.
மாணவ மாணவியரை அவர்களுடைய பலம், வாய்ப்புக்கள், குறைகள் களைதல், குறுகிய மற்றும் நீண்டகாலஇலக்கு நிர்ணயத்தலும் அடைதலும், நேரநிர்வாகம், ஒரு நாளைக்குக் கிடைக்கும் 86400 பொற்காசுகள் என்று பலவற்றை எண்ணிப்பார்க்கச்செய்யப் பயிற்சி உதவியது. குறள் வழியும் சிறு கதைகள், செய்முறைகள், நகைச்சுவை துணுக்குகள் மூலமும் பயிற்சி அமைந்தது.
பெற்ற தாய்க்கும், பிறந்த பொன்னாட்டிற்கும், பள்ளிக்கும், ஊருக்கும் ஆற்ற வேண்டிய பணிகளை உணர்த்த முடிந்தது. தலமை ஆசிரியை தேனம்மை, விஞ்ஞான ஆசிரியர் சேகர், ஆசிரியர் முத்துப்பழனியப்பன் உடனிருந்தனர். பல மாணவ மாணவியர் பயற்சியில் உணர்ந்ததை உரைத்து நன்றி கூறினர். மனநிறைவுடன்
பயிற்சி நிறைவுற்றது.
https://www.facebook.com/photo.php?fbid=624629444237799&set=a.624629330904477.1073741834.100000722463448&type=1&theater
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.
2.திரு வயி.ச.இராமனாதன் (பள்ளிச்செயலர்) கௌரவித்தல், ஜெ.வி.உயர் நிலைப்பள்ளி, நாச்சியாபுரம் 19.07.2013
4.பயிற்சியில் பங்கேற்ற மாணவ மாணவியர்
3.4.8.2013 அன்று திறப்புவிழாவுக்கு ஆயத்தமாகும் அருள்செல்வர் வயி.சண்முகம் செட்டியார் - சௌந்தரம் ஆச்சி கலையரங்கம். ஜெ.வி.உயர் நிலைப்பள்ளி, நாச்சியாபுரம்
https://www.facebook.com/photo.php?fbid=624632730904137&set=a.624629330904477.1073741834.100000722463448&type=1&theater
IMG_3611.JPG IMG_3611.JPG
2567K View Share Download
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக