உடும்பை ச் சாப்பிட்ட இராசநாகம்...
துறையில், எல்லோருக்கும், எதிர்பார்க்கும் எல்லாமே எப்போதுமே கிடைத்துவிடாது, அந்த
வகையில் ஒரு ஐம்பது வருட தேடுதலுக்கு பிறகு கிடைத்த ஒரு அபூர்வ படம் பற்றிய
பதிவு இது.
இராசேசு பேடி.டில்லியை சேர்ந்தவர், வைல்டு லைப் போட்டோகிராபியில் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகாலமாக இருப்பவர், சர்வதேச புகழ் பெற்றவர்.
உத்தர்கண்ட் மாநிலத்தில் உள்ள கார்பெட் நேஷனல் பார்க்கிற்கு கடந்த ஜூன் மாதம் சென்றிருந்தார். இவர் போனபோது கடுமையான மழை. மழை பெய்தால் எந்த மிருகமும் வெளியில் வராது என்பதுடன் புகைப்படம் எடுப்பதும் சிரமம் என்பதால் அறையிலேயே இருந்தார். இரண்டாவது நாளும், மூன்றாவது நாளும் கூட மழை நின்றபாடில்லை.
எவ்வளவு நேரம்தான் ரூமிலேயே அடைபட்டு கிடப்பது, மிருகங்கள் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் பராவாயில்லை என்ற எண்ணத்துடன் பலர் காட்டுக்குள் புகைப்படக் கருவியுடன் சென்றுவிட்டனர்.
நிச்சயம் மிருகங்கள் கிடைக்கப்போவது இல்லை என்ன செய்யலாம் என ராஜேஷ் பேடி அங்கு இருந்த கிராம மக்களிடம் பேசிக்கொண்டிருந்தார், அப்போதுதான் அவர்கள் ஒரு விஷயத்தை சொன்னார்கள்.
இவ்வளவு மழை பெய்தால் ராஜநாகம் வெளியே வரும் என்பதுதான் அந்த தகவல்.
உலகிலேயே மிக நீளமானதும் (12 அடி), கொடிய விஷம் கொண்டதுமான ராஜநாகம் சிறிது தொலைவில் இருக்கிறது என்பது தெரிந்ததும் சரி ராஜநாகத்தை படம் எடுப்போம் என்று முடிவு செய்து குறிப்பிட்ட இடத்திற்கு போய் மறைவில் காத்திருந்தார்.
நீண்ட நேரமாகியும் ராஜநாகம் கிடைக்கவில்லை.
பிறகு மறுநாளும் சென்றார், அப்போதும் நீண்ட நேரம் காத்திருப்பு தொடர்ந்தது, ராஜநாகம் வரவில்லை, பொறுமையை கைவிடாமல் மீண்டும் காத்திருந்தார்.
அந்த நேரம் உடும்பு ஒன்று அந்த பகுதியில் ஊர்ந்து வந்தது, அதே நேரம் எதிர்திசையில் திடீர் சல, சலப்பு பார்த்தால் ராஜநாகம்.
சரி ஏதோ ஒரு பெரிய விஷயம் நடக்கப்போகிறது என்பதை எதிர்பார்த்து மூச்சுவிடும் சத்தம் கூட கேட்காமல் கேமிராவை ஆன் செய்து காத்திருந்தார்.
ராஜநாகம்
எதிராளியை எந்த இடத்தில் கடித்தாலும், அல்லது கொத்தினாலும் சில வினாடிகளில்
அதன் விஷம் மூளை நரம்பை தாக்கி இதயத்தை செயலிழக்கச் செய்துவிடும், அடுத்த
சில விநாடியில் மரணம் சம்பவித்துவிடும்.
இந்த நிலையில் ராஜநாகம் சடாரென தனது விஸ்வரூப பாய்ச்சலை காண்பித்து உடும்பின் இடுப்பில் கொத்தியது, ஆனால் உடும்பிற்கு எதுவும் நடக்கவில்லை, இது உடும்பின் கனத்த தோலின் காரணமாககூட இருக்கலாம், ஆனால் அடுத்த நொடியே உடும்பு தப்பிவிடாதபடி நேர் எதிரே நின்று சட்டென்று தனது வாயால் உடும்பின் தலையை முழுமையாக கவ்வியது. உடும்பு எவ்வளவோ பேராடிப்பார்த்ததும் தப்ப முடியவில்லை, சில விநாடிகள்தான் இந்த முறை விஷம் சரியாக பாய்ச்சப்பட்டது போலும் உடும்பின் துடிப்பு அடங்கியது.
உடும்பின் உடலோடு பின் மறைவிடத்திற்கு ராஜநாகம் சென்றுவிட்டது.
மறைவிடத்தில் இருந்து வெளியே வந்த ராஜேஷ் பேடி தனது கேமிராவின் மானிட்டரை இயக்கிப் பார்த்தபோது காட்சிகள் பலவும் தத்ரூபமாக கேமிராவில் பதிவாகியிருந்தது.
ராஜநாகத்தை படமெடுக்க வந்து சற்றும் எதிர்பாராதவிதமாக ராஜநாகம் உடும்பை கொல்லும் காட்சியை படமெடுத்த நிலையில், எடுத்த படத்தை அங்குள்ள வார்டன் பிஜேந்திர சிங்கிடம் போட்டுக் காண்பித்தார், அவர் இது உண்மையிலேயே அபூர்வமான படம் என்று சொல்லி பாராட்டியுள்ளார்.
ராஜநாகத்தை படமெடுக்க வேண்டும் என்ற கடந்த ஐம்பது வருட கனவு கூடுதல் சிறப்புடன் நனவான மகிழ்ச்சியில் தற்போது ராஜேஷ் பேடி உள்ளார். அவரது துணிச்சலும், பொறுமையும் நிச்சயம் பாராட்டுதலுக்கு உரியதுதான்.
இவர் எடுத்த ராஜநாகம் தொடர்பான மேலும் சில படங்களை பார்வையிட சிவப்பு பட்டையில் உள்ள போட்டோ கேலரி பகுதியை கிளிக் செய்யவும்.

- எல்.முருகராசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக