ஒன்றை எதிர்க்கும் முன் அது குறித்து முழுமையும் அறிந்து எதிர்க்க
வேண்டும். சிறுபான்மையருக்கான தேசிய ஆணையச்சட்டம், 1992 பிரிவு 2 (சி) இன் கீழ் இசுலாம், கிறித்துவம், புத்தம், சீக்கியம்,
பார்சியம் ஆகிய சமயங்களைச்
சார்ந்தவர்களுக்ககுக் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
கல்வி ஆராய்ச்சி பயிற்சி மாநிலக் குழு (SCERT) சார்பில் சமய வேறுபாடின்றி அனைவருக்கும் உதவித் தொகை
வழங்கப்படுகிறது. இதன் கீழ் இந்து மாணாக்கர்கள் உதவித்தொகை பெற விழிப்புணர்வை
ஏற்படுத்தலாம்.
ஆனால், பிற சமய
மாணாக்கர்களுக்கு வங்கி மூலம் உரூ பா 2000 அளவில் உதவித் தொகை வழங்கப்படுகிறது.இத்தொகை எவ்வாறு யார் மூலம்
வழங்கப்படுகிறது என அறிந்து அதனை எதிர்க்கலாம். சட்டம் தரும் சலுகையை எதிர்க்க
வேண்டா. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக்
காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/
இந்து மாணவர்களுக்கு உதவித்தொகை தில்லியில் போராட்டம் நடைபெறும்: பொன் இராதாகிருட்டிணன் அறிவிப்பு
இந்த
கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவிலில் ஜூலை போராட்டம் நடைபெற்றது. மாவட்ட
இளைஞரணி தலைவர் சேகர் தலைமை வகித்தார். முன்னாள் மாநில தலைவர் சி.பி.
ராதாகிருஷ்ணன், மாநில செயலாளர் வானதி ஸ்ரீனிவசான், செயற்குழு உறுப்பினர்
எம்.ஆர்.காந்தி உட்பட பலர் பேசினார்கள். இதில் பொன் ராதாகிருஷ்ணன்
பேசியதாவது:
கடந்த ஒரு ஆண்டில் இந்து இயக்க
நிர்வாகிகள் ஆறு பேர் கொல்லப்பட்டனர். கடந்த ஒன்பது மாதங்களில் நான்கு பேர்
கொல்லப்பட்டனர். 19 கொலை முயற்சி சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இந்த
படுகொலைகளுக்கு விளக்கமளித்து டிஜிபி அறிக்கை வெளியிடும் போது, இந்த
கொலைகள் அனைத்தும் தனிப்பட்ட காரணங்களுக்காகவே நடந்துள்ளதாக கூறியுள்ளார்.
ஆடிட்டர்
ரமேஷ் கொலை செய்யப்பட்டதும் பா.ஜ., தலைவர் ராஜ்நாத்சிங் உடனடியாக மூன்று
எம்.பி.க்கள் கொண்ட குழுவை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். அந்த
குழுவும் விசாரணை நடத்திய பின்னர் காவல்துறை தலைவர், தலைமை செயலர், உள்துறை
செயலர் என மூன்று பேரை சந்திக்க அனுமதி கோரினோம். ஆனால் உள்துறை செயலர்
மட்டுமே சந்தித்தார். இந்த சந்திப்புக்கு முன்னரே டிஜிபி அறிக்கை
கொடுக்கிறார். டிஜிபி-யின் அறிக்கையை தமிழக பா.ஜ., நிராகரிக்கிறது.
தமிழ்நாட்டில்
பா.ஜ.,வின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் அதன் தலைவர்களை குறிவைத்து கொலை
செய்கின்றனர். அண்மையில் சில "டிவி'க்கள் நடத்திய கருத்துக்கணிப்பில்
தமிழ்நாட்டில் பா.ஜ., பத்து சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது என்றும், இரண்டு
தொகுதிகளில் தனிப்பட்ட செல்வாக்கில் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளது
இதை 15 சதவீத வளர்ச்சியாக மாற்றநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்து
இயக்க தலைவர்களை கொன்று பா.ஜ.,வையும் ஆயுதம் எடுக்க வைக்க
முயற்சிக்கின்றனர். அது நடக்காது. நான் வெட்டப்பட்டால் கூட அது நடக்காது.
தமிழ்நாட்டில்
ஒரு நாள் பா.ஜ., ஆட்சியை பிடிக்கும். பிற மத குழந்தைகளுக்கு கல்வி
உதவித்தொகை வழங்க வேண்டாம் என்று பா.ஜ., கூறவில்லை. மாறாக இந்து
குழந்தைகளுக்கும் அந்த உதவித்தொகையை வழங்குங்கள் என்றுதான் கோருகிறோம்.
இதற்காக விரைவில் டில்லியிலும் ஒரு போராட்டம் நடத்த திட்டமிடப்படுள்ளது.
நரேந்திர மோடி பிரதமரானதும் அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி உதவித்தொகை
வழங்கும் உத்தரவில் கையெழுத்திடுவார். டாக்டர் அம்பேத்கார் கண்ட கனவுகளை
நனவாக்குவோம். இவ்வாறு அவர் கூறினார். போராட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள்
கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக