செவ்வாய், 9 ஜூலை, 2013

நீரிலும், நிலத்திலும் இயங்கும் மிதிவண்டி

நீரிலும், நிலத்திலும் இயங்கும் மிதிவண்டி

பரீதாபாத்து : நீரிலும், நிலத்திலும் ஓடும் சைக்கிளை, பரீதாபாத்தில் உள்ள, சர்வதேச பல்கலை கழக மாணவர்கள் தயாரித்து உள்ளனர்.அரியானா மாநிலம், பரீதாபாத்தில் உள்ளது, மானவ் ரச்சனா சர்வதேச பல்கலை கழகம். இங்கு, மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில், இணை பேராசிரியராக பணியாற்றும், சஞ்சய் தனேஜா மேற்பார்வையில், அவரது துறை மாணவர்கள் ஐந்து பேர் சேர்ந்து, இந்த சைக்கிளை தயாரித்துள்ளனர்.

சாதாரணை சைக்கிளின் இருபுறங்களிலும், தண்ணீர் நிரம்பிய கேன்களை, எவர்சில்வர் பிரேம்களால் இணைத்துள்ளனர். எவர்சில்வர் பிரேம்கள் மற்றும், 20 லிட்டர் கொள்ளளவு உள்ள, தண்ணீர் கேன்கள், இதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. 75 கிலோ எடையை தாங்கும் திறன் கொண்ட, இந்த சைக்கிளின் சோதனை ஓட்டம், மாநில அரசின் விளையாட்டுத் துறைக்கு சொந்தமான, நீச்சல் குளம் ஒன்றில், சமீபத்தில், நடைபெற்றது.எவர்சில்வர் பிரேம்கள் மற்றும் தண்ணீர் கேன்களுடன் தண்ணீரிலும், அவற்றை அகற்றி விட்டு நிலத்திலும், இந்த சைக்கிளை ஓட்டலாம். "வெள்ள பாதிப்பு பகுதிகளில், மீட்புப் பணிகளை மேற்கொள்ள, இந்த சைக்கிளை பயன்படுத்தலாம்' என, அதை வடிவமைத்த மாணவர்கள் கூறியுள்ளனர். மேலும், சூரிய சக்தியில் இயங்கும், புல் வெட்டும் கருவியையும், இதே பல்கலை கழக மாணவர்கள் தயாரித்து உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக