வெள்ளி, 12 ஜூலை, 2013

தோல் பாதுகாப்பு தேவை!

தோல் பாதுகாப்பு அவசியம்!

 
தோலில் ஏற்படும் நோய்களும், அதற்கான காரணத்தையும் கூறும், சரும நல மருத்துவர், ஏ.பாலசுப்ரமணி: நான், சரும நோய் சிறப்பு மருத்துவராக, திருச்சியில் பணியாற்றுகிறேன். சிலருக்கு தலைமுடி மற்றும் சருமம் வறண்டும்; சிலருக்கு தலை மற்றும் நெற்றியில், செதில் செதிலாக தோல் உதிர்வதும்; சிலர் மாநிறமாக இருந்தாலும், வெயில் படக்கூடிய மற்ற பாகங்களை விட, முகம் மட்டும் அதிக கறுமையுடன் காணப்படுவதற்கும், முக்கிய காரணம், தைராய்டு சுரப்பி.
தைராய்டு சுரப்பி, இயல்பான அளவை விட அதிகமாகவோ, குறைவாகவோ சுரப்பதால், தோலில் வறட்சி, அரிப்பு, உதிர்தல் என, அதிகமான சரும பாதிப்புகள் வருகின்றன. தைராய்டால், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு பாதிக்கப்பட்டு, தலை முடியும் அதிகமாக உதிர்கிறது. மருத்துவரின் பரிந்துரைப்படி, தைராய்டு பரிசோதனை செய்வதன் மூலம், இந்நோய்களுக்கு தீர்வு காணலாம்.
தைராய்டு நோயை தவிர்த்து, மற்ற சில பிரச்னைகளாலும், இவை வருகின்றன. தோலில், செதில் செதிலாக வருவதற்கு, "இச்தியோசிஸ்' என்ற பரம்பரை பிரச்னையும், "செபோரிக் டெர்மடைடிஸ்' என்ற பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்றும் காரணமாக அமைகின்றன. இது, நாளடைவில் தலை, நெற்றி, புருவம் அருகிலும், காதுக்கு பின்புறம், தாடை, மார்பு என, தோலை சிறிது சிறிதாக, உதிரச் செய்கிறது.
முகம் மட்டும் கறுப்பதற்கு, வரைமுறையற்ற அதிகப்படியான அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவதும்; அதிகமான சூரிய ஒளியில், மாசடைந்த சூழலில் இருப்பதும்; தலை முடிக்கு செயற்கையான,"ஹேர் கலரிங்' செய்வதாலும்; சிலர் முகத்தின் பொலிவை மீட்பதற்காக, இரவில் பூசுவதற்கான கிரீம்களை பகலிலும் பூசுவதால், அவை சூரிய ஒளியில் வினைபுரிவதாலும், முகத்தில் கறுமை நிறம் படர்கிறது.
டி.எப்.எம்., 75 சதவீதத்திற்கும் அதிகமுள்ள குளியல் சோப்புகளை பயன்படுத்தினால், சருமத்திற்கு தேவையான எண்ணெய் மற்றும் ஈரத்தன்மையைப் பெற முடியும். போதிய நீர் அருந்தினாலும், தோல் வறட்சியடையாமல் பாதுகாக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக