செவ்வாய், 9 ஜூலை, 2013

சொந்த நாட்டிலேயே தமிழ் தெரியா அவல நிலை !


 சொந்த நாட்டிலேயே  தமிழ் தெரியா
 அவல நிலை !

ஒருவர்  காசுமீர் சென்றாராம் ;  சுற்றுலா சென்றவர்கள், அங்குள்ள அனைவரிடமும் இந்தியில் பேச முடியாமல் ஊமையைப் போல சைகையிலேயே பேசித் திரும்பினார்களாம் ; சொந்த நாட்டிலேயே பெரும்பாலான மக்கள் பேசும் மொழி தெரியாத நிலைமையாம்!  பிதற்றி இருந்தார். விரிவாக மறுப்பு தெரிவிக்க பின்னூட்டத்தில் வாய்ப்பில்னமையால், பின்வரும் கருத்தினைப் பதிந்துள்ளேன்: -

சுற்றுலா என்பது திடீரென்று போவது அல்ல. ஓரிடத்திற்குச் சுற்றுலா செல்ல திட்டமிடும் பொழுதே பார்க்க வேண்டிய இடங்களை அறிந்து கொண்டு அப்பகுதி மொழியில் சில அடிப்படை உரையாடல்களை அறிந்து கொள்ள வேண்டும். இது மிகவும் பயனுள்ளதாக அமையும்.  அண்மையில் உருசியா சென்று வந்த  நடிகை ஒருவர், உருசிய மொழி  மட்டுமே  அங்கு பேசப்பட்டதால் ஆங்கிலத்தினால் பயனின்மையைத் தெரிவித்தார். அதுபோல் செருமனி, பிரான்சு போன்ற நாடுகளில் தமிழ் பயன்  தரும் அளவிற்கு ஆங்கிலத்தால் பயனில்லை. சப்பான் போன்ற பிற நாடுகளிலும் இந்நிலைதான். இந்தியாவில் வட மேற்கு மாநிலங்களுக்குச் சென்றால் இது போன்ற  மொழிச்சிக்கல்தான். தமிழ் நாட்டில் அயல் மொழியினர் தமிழே  தெரியாமல் வாழும்  பொழுது சுற்றுலா செல்வதற்காக இந்தி படிக்க வேண்டும் என்பது அறியாமை. தனிப்பட்ட தேவை அடிப்படையில் இந்தி முதலான எந்த மொழியையும் படிக்கலாம். ஆனால், ஒரே மொழி, ஒரே நாடு என்ற சதி வலை அடிப்படையில்  இந்தித் திணிப்பை எதிர்த்து வருவதே சரியானதாகும். 
 (செயற்கையால் வந்த) சொந்த நாட்டிலேயே  (30 %   மக்கள் பேசும்) இந்தி தெரியாதது குறித்து வருந்துவதாகக் கூறுபவர்,  இயற்கையாய் அமைந்த சொந்த நாட்டிலேயே  தமிழ் தெரியா அவல நிலை குறித்து வருந்தினால் நன்று.  அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

1 கருத்து:

  1. தமிழை நாம் இன்று பெரிதுபடுத்தத் தேவையில்லை...

    தமிழ் தெரிந்தால்தான் எனக்கு வாழ்க்கை அல்லது பொருளாதாரம் ஈடுசெய்ய முடியும் என்று வரும்போது வேண்டுமானால் அவன் தமிழை நாடலாம்.

    என் கல்விக்கோ - நான் பின்னர் செய்கின்ற தொழிலுக்கோ - வேலைக்கோ தமிழ் தேவையற்றது என்று கருதும் போது அவன் தமிழை விடுத்து ஆங்கிலமோ அல்லது பிற மொழியையோ கற்றுக் கொண்டு அவன் பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ளப் போகிறான்.

    சுருக்கமாகச் சொன்னால் தமிழ் தேவை என்பவர் தமிழ் படிக்கட்டும் பேசட்டும்... வேண்டாம் என்பவர் பிடித்த மொழியை பேசட்டும் எழுதட்டும்...

    நான் தமிழ் இலக்கியம்தான் படித்துள்ளேன்... அதுதான் சோறு போடப்போகிறது...

    என் தம்பி ஆங்கிலம் படித்துள்ளான். அவனுக்கு ஆங்கிலம் - மேலைநாட்டு பணிதான் சோறு போடப்போகிறது.

    பதிலளிநீக்கு