செவ்வாய், 9 ஜூலை, 2013

இந்துசுதான் நிறுவனத்தில் பயிற்சி அதிகாரிகள் பணி

இந்துசுதான் கல்நெய்(பெட்ரோலிய) நிறுவனத்தில் பயிற்சி அதிகாரிகள் பணி

இந்தியாவில் இயங்கி வரும் பெட்ரோலிய நிறுவனங்களில் எச்.பி.சி.எல்., எனப்படும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் மிக முக்கிய நிறுவனமாகும். இந்த நிறுவனம் பார்சூன் 500 நிறுவனங்களுள் ஒன்றாகும். இந்த துறை சார்ந்த சந்தைப் பங்கில் 20 சதவீத பங்குகளை இந்த நிறுவனம் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தில் ஆபிசர் டிரெய்னிங் வகையிலான 2 பிரிவுகளில் உள்ள 39 காலி இடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ஆபிசர் டிரெய்னி, குவாலிடி கண்ட்ரோல்/ஆப்பரேஷன்ஸ், எச்.ஆர்., எனப்படும் மனிதவளம்
வயதுவரம்பு: 27-க்குள் இருத்தல் வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் வேறுபடும். இணையதளத்தைப் பார்க்கவும்.
கல்வித்தகுதி: குவாலிடி கன்ட்ரோல்/ஆப்பரேஷன்ஸ் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் எம்.எஸ்.சி., வேதியியலுக்கு இணையான முது நிலைப் படிப்பை அனலிடிகல், பிஸிக்கல், ஆர்கானிக் அல்லது இன்-ஆர்கானிக் கெமிஸ்ட்ரி ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் முடித்திருக்க வேண்டும்.
எச்.ஆர்., பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் எச்.ஆர்.,பி.எம்., அல்லது ஐ.ஆர்., போன்ற ஏதாவது ஒரு பிரிவில் 2 ஆண்டு முது நிலைப் பட்டப் படிப்பு அல்லது இதே பிரிவுகளில் சிறப்பு பெற்ற எம்.பி.ஏ., முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தின் மேற்கண்ட பயிற்சி அதிகாரி பணி இடங்கள் இரண்டு கட்ட எழுத்துத் தேர்வு, நேர்காணல், மருத்துவப் பரிசோதனை என்ற நிலைகளை வெற்றிகரமாகக் கடக்க வேண்டியிருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.535. இதனை ஏதாவது ஒரு பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் செலான் வாயிலாக 32315049001 என்ற HPCL Powerjyothi அக்கவுண்ட் எண்ணில் செலுத்த வேண்டும். இதன் பின்னர் ஆன்லைன் முறையில் கட்டணம் செலுத்திய விபரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் வயதுவரம்பு உள்ளிட்ட முழுமையான தகவல்களை அறிய www.hindustanpetroleum.com/Upload/En/UPdf/OOTHPCL.pdf என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.07.2013

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக