தொழில் வளம் இல்லையெனில் பயம் வேண்டா!
அழகிய மரச் சிற்பங்களை ச் செதுக்கி, வெளிநாடு களுக்கு ஏற்றுமதி செய்யும், சகுந்தலா நடராஜன்: எனக்கு
பிறந்த ஊரும், புகுந்த ஊரும் கள்ளக்குறிச்சி தான். இங்கு விவசாயமும்,
தொழில் வளமும்இல்லாததால், மூன்று தலைமுறைகளாகவே, மரச்சிற்பங்கள்
செய்கிறோம். மரச்சிற்பங்களுக்கு உயிர் இல்லை என்பது தெரியாமல், அப்பா
செதுக்கி வைத்திருந்த, புல்லாங்குழல் வாசிக்கும் கிருஷ்ணரிடம் தினம் தினம்
பேசி, சிறிய வயதில் விளையாடுவேன். அந்த ஆர்வம், இன்று அச்சிற்பங்களுக்கு
உயிர் கொடுக்கும் அளவிற்கு, முன்னேறி இருக்கிறது.ஒரு முறை, சொந்த வேலை
காரணமாக, கணவர் வெளியூர் சென்றிருந்தார். அச்சமயத்தில், "தாமரை விநாயகர்'
உருவ மர சிற்பம் வேண்டும் என, வாடிக்கையாளர் வந்திருந்தனர். கணவர் வெளியூர்
சென்றிருக்கிறார் என, அவர்களை திருப்பி அனுப்ப மனமில்லை. ஏனெனில்,
அச்சிற்பத்தில், 75 சதவீத வேலை முடிந்திருந்தது. மிக முக்கியமான, "பினிஷிங்
டச்'மட்டுமே பாக்கி.என்னால் முடியும் என்ற நம்பிக்கையில், தாமரை விநாயகர்
மர சிற்பத்திற்கு, "பினிஷிங் டச்' தந்து, விற்றேன். இச்சிற்பம் செய்ததில்
ஏற்பட்ட மனதிருப்தியால், மேலும் ஊக்கம் பெற்று ஆஸ்திரேலியா, அமெரிக்கா,
ஆப்ரிக்கா என, பல நாடுகளுக்கு என் கைவண்ணத்தால் ஆன, மர சிற்பங்களை ஏற்றுமதி
செய்து, லாபம் ஈட்டுகிறேன்.ஆண்களே பிரதான மாக செய்து வந்த இக்கலைத்
தொழிலில், என்னை போன்ற வீட்டுப் பெண்களும் ஒன்றிணைந்து, ஒரு குழுவாக
முன்னெடுத்து செல்வது, மகிழ்ச்சியாக உள்ளது. நம் கலாசாரம் மற்றும்
பண்பாட்டுக்கு, வெளிநாட்டவர் கொடுக்கும் முக்கியத்துவத்தை, நாம் கொடுக்க
தவறி விட்டதால், மறைந்து போகும் பண்பாட்டு விஷயங்களில், மரச்சிற்பங்கள்
செய்வதும் சேர்ந்துள்ளது.இதனால், இக்கலையின் சிறப்பு மற்றும் பெருமைகளை
சொல்லியே, என் குழந்தைகளை வளர்ப்பதுடன், பயிற்சியும் தருகிறேன். எங்களின்
அடுத்த தலைமுறையினர், மருத்துவர், இன்ஜினியர் ஆவதை விட, புகழ்பெற்ற
சிற்பியாக மாறுவதையே,விரும்புகிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக