வைகோவிடம் மத்தியப்பிரதேச முதலமைச்சர் பேச்சு

சிந்துலாரா,
செப்., 20 : மத்தியப்பிரதேச மாநிலம் சாஞ்சியில் நடைபெறும் நிகழ்ச்சியில்
கலந்து கொள்ள வரும் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டம் நடத்த
சென்னையில் இருந்து கிளம்பிய வைகோ உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மதிமுகவினர்
சென்ற வாகனத்தை சிந்துலாரா மாவட்டம் பந்துர்ணா என்ற இடத்தில் அம்மாநில
போலிஸார் தடுத்து நிறுத்தினர்.கடந்த 17ம் தேதி சென்னையில்
இருந்து பல்வேறு வாகனங்களில் புறப்பட்ட மதிமுகவினர், நேற்று இரவு பந்துர்ணா
என்ற இடத்தை அடைந்தனர். அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய
காவல்துறையினர், போராட்டத்தைக் கைவிட்டு திரும்பிச் செல்லுமாறு கூறினர்.இதனை
ஏற்காத வைகோ, அங்கேயே உட்கார்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார். இரவு
அங்கேயே சமைத்து சாப்பிட்டு, சாலையோரத்தில் படுத்துறங்கினர். இன்று
காலையும் உயர் அதிகாரிகள் வந்து வைகோவை சந்தித்து பேச்சுவார்த்தை
நடத்தினர். ஆனால் வைகோ திரும்பிச் செல்வதில்லை என்று தெளிவாக கூறிவிட்டார்.இதற்கிடையே
மத்தியப்பிரதேச முதலமைச்சர் ஷிவ்ராஜ் சிங் சௌஹான், மதிமுக பொதுச் செயலாளர்
வைகோவை தொடர்பு கொண்டு, போராட்ட முடிவைக் கைவிட்டு திரும்பிச் செல்லுமாறு
கோரிக்கை வைத்தார். மேலும், இது முழுக்க முழுக்க அரசியல் விவகாரமாகும்,
ஆசிய நாடுகளுடன் இந்தியா நட்புணர்வை மேம்படுத்தவே விரும்புகிறது என்று
குறிப்பிட்டார்.தற்போது சாஞ்சிக்கு செல்லும் அனைத்து
வழிகளும் அடைக்கப்பட்டுள்ளன. பலத்த சோதனைக்குப் பிறகே வாகனங்கள்
அனுமதிக்கப்படுகின்றன. சுமார் 11 ரயில்கள் நாளைக்கு போபாலில் இருந்து
விதிஷா வரை எங்கும் நிற்காமல் செல்ல ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
கருத்துகள்


By
SARAVANAN
9/20/2012 7:21:00 PM
9/20/2012 7:21:00 PM


By
ஸ்ரீதர்
9/20/2012 7:20:00 PM
9/20/2012 7:20:00 PM


By
rajeshkanna
9/20/2012 6:59:00 PM
9/20/2012 6:59:00 PM


By
BALA
9/20/2012 6:41:00 PM
9/20/2012 6:41:00 PM


By
முஹைதீன் ,shenkai
9/20/2012 6:11:00 PM
9/20/2012 6:11:00 PM


By
Thevan
9/20/2012 6:09:00 PM
9/20/2012 6:09:00 PM


By
MADURA
9/20/2012 6:08:00 PM
9/20/2012 6:08:00 PM


By
மறவன்
9/20/2012 6:02:00 PM
9/20/2012 6:02:00 PM


By
P .Padmanaabhan
9/20/2012 5:51:00 PM
9/20/2012 5:51:00 PM


By
P .Padmanaabhan
9/20/2012 5:51:00 PM
9/20/2012 5:51:00 PM


By
KM
9/20/2012 5:32:00 PM
9/20/2012 5:32:00 PM


By
siva
9/20/2012 5:31:00 PM
9/20/2012 5:31:00 PM


By
ஸ்ரீனிவாசன்
9/20/2012 5:09:00 PM
9/20/2012 5:09:00 PM


By
tamilarsu
9/20/2012 5:06:00 PM
9/20/2012 5:06:00 PM


By
Paris EJILAN
9/20/2012 4:45:00 PM
9/20/2012 4:45:00 PM


By
prema
9/20/2012 4:22:00 PM
9/20/2012 4:22:00 PM


By
murugesan
9/20/2012 4:20:00 PM
9/20/2012 4:20:00 PM


By
மீனாக்ஷி சுந்தரம்
9/20/2012 4:15:00 PM
9/20/2012 4:15:00 PM


By
SESHASAYEE
9/20/2012 3:35:00 PM
9/20/2012 3:35:00 PM


By
bala
9/20/2012 3:14:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *9/20/2012 3:14:00 PM
VAIKO IS FIGHTING FOR TRUTH,SAFETY,FREEDOM AND JUSTICE OF TAMILS IN SRILANKA!
பதிலளிநீக்கு