ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

கண்ணியமும் பேரறிஞர் குடும்பமும் இணைந்து நடத்திய அண்ணா பிறந்தநாள் – விருது வழங்கும் விழா!

கண்ணியமும் பேரறிஞர் குடும்பமும் இணைந்து நடத்திய அண்ணா பிறந்தநாள் – விருது வழங்கும் விழா!

நட்பு - பதிவு செய்த நாள் : 16/09/2012

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அண்ணா இல்லத்தில் தமிழ் உணர்வாளர் 70 பேருக்கு விருது வழங்கப்பட்டது.முனைவர் பொற்கோ உள்பட அறிஞர்கள் வாழ்த்திப் பேசினர். அறிஞர் அண்ணாவின் 104 ஆவது பிறந்த நாள் நேற்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அண்ணாவின் இல்லத்தில், கண்ணியம் இதழ் ஆசிரியர் குலோத்துங்கனும், அண்ணா குடும்பத்தினரும் இணைந்து அண்ணாவின் பிறந்த நாளைக் கொண்டாடினர். இல்லத்தின் முகப்பில் உள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து தமிழ் உணர்வாளர்கள் 70 பேருக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்குச் சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் பொற்கோ தலைமை தாங்கினார். அண்ணாவின் பேரன் மலர்வண்ணன் வரவேற்றுப் பேசினார். மற்றொரு பேரன் சௌமியன் முன்னிலை வகித்தார். கவிக்கொண்டல் செங்குட்டுவன், முன்னாள் மேயர் சா.கணேசன், கந்தன், தமிழறிஞர் திருவள்ளுவன், கிருட்டிணமூர்த்தி உட்பட 70 மொழி இன உணர்வாளர்களுக்கு பொற்கோ விரிதுகள் வழங்கிக் கௌரவித்தார்.


செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனப் பொறுப்பு அலுவலர் முனைவர் இராமசாமி, தமிழறிஞர் மறைமலையான், முனைவர் மதிவாணன் வாழ்த்திப் பேசினர். தமிழறிஞர் கண்ணியம் ஆ.கோ.குலோத்துங்கன் நன்றி கூறினார்.

அண்ணாவின் பேரன் மலர்வண்ணன்,பேரன் சௌமியன், பேத்தி மு.இளவரசி, செயசிறீ மலர்வண்ணன், சரளா சௌமியன் உட்பட அண்ணாவின் குடும்பத்தினர், அண்ணாவின் பற்றாளர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

~நன்றி: மாலைமுரசு
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக