புதன், 19 செப்டம்பர், 2012

தனித்தமிழ் கணிதம் - ௧

    தனித்தமிழ் கணிதம் - ௧

 - இராசுகுமார்


எண்கள் உயிரும் உயிர்மெய்யுமாம் 
மாறிலிகள் மெய்களாம்
முதல் உயிர்மெய் ஒன்றாம்
உகரம் இரண்டாம் 
ஙகரத்தின் கடைக்கோடு தேய மூன்றாம்
சகரத்தின் கடையில் சிறுகோடு மேல்நோக்க நான்காம் 
இரகர உகரம் ஐந்தாம் 
சகரத்தின் உகரக் கொம்பிரட்ட ஆறாம் 
எகரம் ஏழாம் 
அகரம் எட்டாம் 
ககரக் கொம்பிரட்ட தொன்பதாம் 
சுழித்தல் இன்மையான சுழியமாம் 

தமிழ் கணிதத்திற்கு வேர்களாக இருக்கும் எண்களை தெளிவு படுத்திக்கொள்வது நன்று என்பதனாலும், இக்காலத்தில் தமிழ் எண்கள் பயன்பாட்டில் இல்லை என்பதனாலும், எதிர்கால தமிழர்களுக்கு பயன்படும் என்பதாலும் மேலுள்ளவற்றை படைத்தேன் என்று கொள்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக