காலிகள்
காலிகள்
Tuesday, September 18, 2012 12:03 IST
மூன்று
கால்கள் கொண்ட இருக்கையை முக்காலி என்றும் நான்கு கால்கள் கொண்ட இருக்கையை
நாற்காலி என்றும் நாம் சொல்கிறோம். அதைப்போல் உயிரினங்களையும் கால்களின்
எண்ணிக்கை அடிப்படையில் பெயரிட்டு வகைப்படுத்துவது அறிவியல். மிகுதியான
எண்ணிக்கையில் கால்கள் கொண்ட பூச்சியை ஆயிரங்கால் பூச்சி என்று சொல்வதுபோல்
பின்வரும் பெயர்களின் அடிப்படையில் அவற்றிற்கான விளக்கங்களை நாம்
அறிந்து கொள்ளலாம். எடுத்துக் காட்டாகச் சொல்வாதானால் பதின்காலி என்றால்
பத்து கால்களை உடைய உயிரி இழுநகக்காலி என்றால் இழுத்துக்கொள்கின்ற நகங்களை
உடைய கால்களைக் கொண்ட உயிரி எனலாம். இனி இத்தகைய உயிரிகளின்
வகைகளைப்பார்ப்போம்.
- அறுகாலி - hexapod
- ஆட்டுக்காலி - capriped
- ஆயிரங்காலி – millepede
- இணைப்புக் காலி – arthropod
- இருகாலி - biped
- இழுநகக்காலி - aeluropodous
- ஈரிரு காலி (நாற்காலி) – tetrapod
- உகைப்புக் காலி copepod
- எண்காலி – octopod
- ஏழிணைக்காலி – isopod
- ஒழுங்கிலி (விரற்) காலி - anomaliped
- ஒற்றைக்காலி - uniped
- குட்டைக்காலி - breviped
- கைபோல் காலி – brachiopod
- கோணற்காலி - taliped
- சாய்காலி – anglepod
- சிறகுக்காலி – pteropod
- சுணைக்காலி - chaetopod
- சுருள்காலி - cirriped
- தட்டைக்காலி - branchiopod
- தலைபோல்காலி - cephalopod
- தழைக்காலி - phyllopod
- துடுப்புக்காலி - pinniped
- நடைகாலி - Pereiopod
- நீந்துகாலி - Pleopod
- நுண்ணிழைக்காலி-Campodea
- நூறுகாலி - Chilopoda / centipede
- பதின்காலி – decapod
- பல காலி – polypod
- பற்பல காலி – myriapod/ myriopod
- பன்முகக்காலி – amphipod
- பாம்புவடிவக்காலி - anguiped
- பெருங்காலி - megapod, megapode
- முவ்விரல் காலி – ornithopod
- முன்விரல்காலி – aliped
- மெத்துக்காலி – tylopod
- வயிற்றுக்காலி - gasteropod
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக