பள்ளி க் குழந்தைகளை க் காவு வாங்கும் கொடூரம் ஓயவில்லை: பள்ளி ஊர்தி மோதி 2 சிறுவர்கள் பலி
திருச்சி: திருச்சி மாவட்டத்தில், பள்ளி வேன் டிரைவர்களின் கவனக்
குறைவு காரணமாக, நேற்று ஒரே நாளில், இரண்டு மாணவர்கள் பரிதாபமாக
உயிரிழந்தனர்.
சென்னை, மவுன்ட் சீயோன் பள்ளி மாணவி ஸ்ருதி, பள்ளி பஸ்சுக்குள்
இருந்த ஓட்டையில் விழுந்து இறந்த பின் தான், பள்ளி வாகனங்களுக்கு
வழங்கப்படும் அனுமதியில், மிகப் பெரிய ஓட்டை இருந்தது அம்பலமானது. சென்னை
உயர்நீதிமன்றம், தானாக முன்வந்து வழக்குப் பதிந்து, தமிழக அரசையும்,
போக்குவரத்து துறையையும் கேள்வி எழுப்பியபோது, அதிகாரிகளால் பதில் சொல்ல
முடியவில்லை. எனினும், போர்க்கால அடிப்படையில், பள்ளி வேன், பஸ்களை,
மீண்டும் ஒருமுறை, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு
செய்தனர். பெயரளவில் நடவடிக்கை எடுத்து, பிரச்னையை முடிவுக்கு கொண்டு
வந்தனர்.
நான்கரை வயது:
மாணவர்களை வாகனங்கள் பலி கொள்ளும் கொடூரம், சென்னையில் இருந்து நகர்ந்து,
மத்திய மண்டலமான திருச்சியில் நேற்று மையம் கொண்டதால், ஒரே நாளில், இரண்டு
மாணவர்கள் பள்ளி வேன்கள் மோதி இறந்தனர். திருச்சி மாவட்டம், துறையூர் அருகே
சிக்கத்தம்பூர் பாளையத்தைச் சேர்ந்தவர், சுரேஷ்குமார், 35; "டாஸ்மாக்'
பார் மேற்பார்வையாளர்; மனைவி அமுதா. இவர்களுக்கு, நான்கரை வயது நிரம்பிய,
கி÷ஷார், உட்பட, மூன்று மகன்கள் உள்ளனர். கி÷ஷார், ஸ்ரீ விக்னேச வித்யாலயா
நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில், யூ.கே.ஜி., படித்து வந்தான். பள்ளிக்கு
சொந்தமாக இரண்டு வேன்கள் உள்ளன. நேற்று காலை, 8:20 மணிக்கு, சிக்கத்தம்பூர்
பாளையத்தில், 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் வேனில் ஏற்றப்பட்டனர். வேன்
டிரைவர் அருகில் உள்ள, கிளீனர் சீட்டில், கி÷ஷாரும், மற்றொரு மாணவர்
விக்னேசும் உட்கார வைக்கப்பட்டனர். வேன் புறப்பட்ட, 100 அடி தூரத்தில்,
பக்கவாட்டு கதவு தானாகவே திறந்து, கி÷ஷார் கீழே விழுந்தான். தார்ச்சாலையில்
தலைக்குப்புற விழுந்த, கி÷ஷாருக்கு, தலை, காது, மூக்கில் இருந்து, ரத்தம்
கொட்டியது. அவரசகால ஆம்புலன்ஸ் மூலம், துறையூர் பாலாஜி மருத்துவமனைக்கு
கொண்டுச் செல்லப்பட்ட வழியில், கி÷ஷார், பரிதாபமாக இறந்தான்.
கவனக் குறைவு:
விக்னேச வித்யாலயா பள்ளி, தாளாளர் மற்றும் முதல்வர், ராமராஜ், 45;
எம்.காம்., பட்டதாரி. புதியதாக கட்டப்பட்ட கட்டடத்தில், 2012ம் ஆண்டு மே
மாதம் முதல், பள்ளி செயல்பட்டு வருகிறது. அதற்குரிய ஒப்புதல் கேட்டு, மே
மாதம், ராமராஜ் விண்ணப்பம் அனுப்பியும், இதுவரை பள்ளிக்கு ஒப்புதல்
வழங்கப்படவில்லை. பள்ளி வேனில், கிளீனர் சீட் கதவு, எப்போதும்
பூட்டப்பட்டு, வழக்கமான நடுபக்க கதவு வழியாக, மாணவர்களை ஆயா ஏற்றி,
முன்பக்கம் உள்ள, கிளீனர் சீட்டுக்கு அனுப்பி வைப்பார். நேற்று முன்பக்க
கதவை, சரியாகப் பூட்ட முடியாததால், ஓடும் வேனில் இருந்து கி÷ஷார், கீழே
விழுந்து இறந்தான். அருகில் இருந்த விக்னேஷ் உயிர் தப்பினான். போலீசார்,
வழக்குப் பதிந்து விசாரித்தனர். வேன் டிரைவர் காலை, மாலை மட்டும்,
பள்ளியில் வேன் ஓட்டுவது; மற்ற நேரங்களில், வயல்களில் டிராக்டர் ஓட்டுவது
உள்ளிட்ட, விவசாயப் பணிகளை செய்து வருகிறார். விபத்துக்கு காரணமான,
மகிந்திரா வேன், 2001ம் ஆண்டு வாங்கப்பட்டது. 2012ம் ஆண்டு எப்.சி.,
பெறப்பட்டுள்ளது; 2013ம் ஆண்டு வரை இயக்க அனுமதி உள்ளது. மாணவன்
இறந்ததுக்கு முழு காரணம், பள்ளி தாளாளர், வேன் டிரைவர் மற்றும் ஆயா
ஆகியோரின் கவனக் குறைவு தான் என்பது, தெரிய வந்துள்ளது. அதையடுத்து, பள்ளி
தாளாளர் ராமராஜ், வேன் டிரைவர் சிக்கத்தம்பூர் பாளையத்தை சேர்ந்த
வேலுச்சாமி, 42, ஆயா கிரேசி, 50, ஆகியோரை, போலீசார் கைது செய்தனர்.
மற்றொரு காவு:
திருச்சியை அடுத்த துப்பாக்கி தொழிற்சாலை குடியிருப்பைச் சேர்ந்தவர்
கருணாகரன். துப்பாக்கி தொழிற்சாலையில், டெக்னீஷியனாகப் பணியாற்றுகிறார்.
இவரது மகன் மிதுன், 13; வாய் பேச, காது கேட்க இயலாதவர். "பெல்' வளாகத்தில்
உள்ள, "அறிவாலயம்' என்ற, மாற்றுத் திறனாளிக்கான சிறப்புப் பள்ளியில்,
ஆறாவது குரூப் படித்தார். கான்ட்ராக்ட் அடிப்படையில், பள்ளிக்கு அழைத்துச்
செல்லும் தனியார், மகிந்திரா டூரிஸ்டர் வேன் மூலம், நேற்று காலை, 8:30
மணிக்கு, பள்ளி முன், மிதுன் இறங்கினார். முன் பக்கக் கதவு வழியாக, மிதுன்
இறங்கியதை கவனிக்காத டிரைவர், வேகமாக வேனை எடுத்ததால், மிதுன் மீது வேனின்
டயர், ஏறி இறங்கியது. இதில் படுகாயமடைந்த மிதுன், "பெல்' மருத்துவ மனையில்
அனுமதிக்கப்பட்டு இறந்தார். இதுகுறித்து, "பெல்' போலீசார் வழக்குப்
பதிந்து, காட்டூர் எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த வேன் டிரைவர் செந்திலை, 30,
கைது செய்தனர்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
துறையூர், செப். 18-
திருச்சி அருகே பள்ளி வேனின் கதவு சரியாக மூடாததால் அதிலிருந்து தவறி விழுந்த எல்.கே.ஜி. மாணவன் பலியானான். திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள சிக்கத் தம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். டாஸ்மாக் அரசு மதுபானக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அமுதா. இந்த தம்பதிக்கு 3 மகன்கன் இருந்தனர். இதில் மூத்த மகன் கிஷோர் (வயத 5).
துறையூரை அடுத்த பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நர்சரி பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தான். வீட்டில் இருந்து சுமார் 2 கி.மீ. தூரத்தில் உள்ள பள்ளிக்கு தினமும் அவன் பள்ளி வேனிலேயே சென்று வந்தான். இன்று காலை வழக்கம்போல் அவனை பெற்றோர் தயார்படுத்தி பள்ளிக்கு வேனில் அனுப்பி வைத்தனர். மாணவர்களை ஏற்றி, இறக்கும் பணியில் பெண் ஒருவர் நியமிக்கப்பட்டு இருந்தார். அவர் மாணவன் கிஷோர் ஏறியதும் கதவை அடைத்தார். தொடர்ந்து வேன் அங்கிருந்து புறப்பட்டு அருகில் உள்ள மற்றொரு கிராமமான ஒட்டம்பட்டி நோக்கி சென்றது. வேன் புறப்பட்ட ஒருசில நிமிடங்களில் எதிர்பாராத விதமாக வேனின் கதவு திடீரென திறந்து கொண்டது. இதில் கதவோரமாக அமர்ந்திருந்த மாணவன் கிஷோர் தவறி கீழே விழுந்தான். இதில் அவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து உயிருக்கு போராடிய மாணவன் கிஷோரை துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர்.
மேலும் அவனது பெற்றோருக்கும் தகவல் அளித்தனர். இதைக் கேட்ட பெற்றோர் பதறிய டித்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். ஆனால் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட மாணவன் கிஷோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான். அவனது உடலைப் பார்த்து பெற்றோர் கதறித் துடித்தனர்.
இதுகுறித்து துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
திருவெறும்பூர், செப்.18-
திருவெறும்பூரில் பள்ளி கூட வாசல் முன்பு இன்று காலை வேன் சக்கரத்தில் சிக்கி மாணவன் நசுங்கி பலியான சம்பவம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே துப்பாக்கி தொழிற்சாலையில் பணியாற்றி வருபவர் கருணாகரன். இவரது மகன் மிதுன் (வயது 12). இவன் தொழிற்சாலை அருகில் உள்ள அறிவாலயம் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். தினமும் வீட்டில் இருந்து பள்ளி கூடத்துக்கு தனியார் வேனில் சென்று வந்தான். இன்று காலை வழக்கம் போல பள்ளிக்கூடத்துக்கு புறப்பட்டான்.
அவனுக்கு காலை டிபன் கொடுத்து விட்டு வேனில் பெற்றோர் அனுப்பி வைத்தனர். அந்த வேனை திரு வெறும்பூரை சேர்ந்த செந்தில் ஓட்டிச்சென்றார். அந்த வேன் பள்ளி கூடம் முன்பு வந்து நின்றது. வேனில் அமர்ந்து இருந்த மிதுன் உள்பட மாணவர்கள் இறங்கினார்கள். பின்னர் பைகளை தூக்கி கொண்டு பள்ளிக்குள் சென்றனர். இதில் மிதுன் கீழே இறங்கியதும் பையை தூக்கி கொண்டு இருந்தான். அப்போது திடீரென அந்த வேன் பின்நோக்கி நகர்ந்தது. இதனை கண்டதும் அங்கு நின்ற ஆசிரியர்கள், மாணவர்கள் சத்தம் போட்டனர். ஆனால் இதை சற்றும் பொருட்படுத்தாமல் டிரைவர் செந்தில் வேனை பின் பக்கம் ஓட்டினார்.
அங்கு நின்று கொண்டு இருந்த மிதுன் வேனின் பின் சக்கரத்தில் சிக்கி கொண்டான். கண் இமைக்கும் நேரத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக பள்ளிக்கூட வாசல் முன்பு இறந்து போனான். இந்த சம்பவத்தால் பள்ளி கூடமே அதிர்ச்சி அடைந்தது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் பாய்லர் ஆலை போலீஸ் இன்ஸ்பெக்டர் காவேரியம்மாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மிதுன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். டிரைவர் செந்திலை கைது செய்தனர்.
மகன் இறந்த தகவல் அறிந்து விரைந்து வந்த பெற்றோர். அவனது உடலை பார்த்து கதறி அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக