நிற வகைகள்
புதிய அறிவியல் - செவ்வாய்க் கிழமை, புரட்டாசி 2, 2043 12:03 இதிநேTuesday, September 18, 2012 12:03 IST
பால் போல் வெண்ணிறம் கொண்டவனைப் பால்வண்ணன் என்றும் முத்துபோல் வெண்ணிறம்
கொண்டவனை முத்து வண்ணன் என்றும் சொல்வது பழந்தமிழர் வழக்கம். மலர்களின்,
விலங்குகளின் வண்ண அடிப்படையிலும் நிறங்களைக் குறிப்பிட்டுள்ளனர்.
இன்றைக்கு நாம் வெள்ளை, சிவப்பு, கருப்பு, மஞ்சள், பச்சை, நீலம் நிறங்கள்
தவிரப் பிறவற்றைத் தமிழில் குறிப்பதில்லை. இந்நிறங்களையும் தமிழில்
குறிப்பது அருகி விட்டது. நிறங்களுக்கான பெயர்கள் தமிழில் இல்லை என்பதால்
குறிப்பிடவில்லை என்று சொல்வோருக்காக நிறங்களின் பட்டியல்
அளிக்கப்படுகிறது. வணிக நோக்கில் ஒரே வகையைச் சேர்ந்த அழுத்தமான அல்லது
மங்கலான நிறங்களை எல்லாம் சிவப்பு 1, சிவப்பு 2 என்பன போன்று எண்களிட்டு
அழைப்பது வழக்கம். தேவைப்படும் இடங்களில் நாமும் அவ்வாறே குறிக்கலாம்.
இனி, பட்டியலைப் பார்ப்போம்.
(நிறம் / colour எனக் குறிப்பிடாத இடங்களிலும் அவை உட் பொருளாக உள்ளன.)
- அடர் சிவப்பு – cramoisy
- அடர் நீலம் - perse / smalt
- அடர் மஞ்சள் - gamboge
- அயிரை/ அசரை - sandy colour
- அரத்த(ம்) (நிறம்) - heliotrope / haematic
- அருணம் - bright red, colour of the dawn;
- அவுரி(நிறம்) - indigo
- அழல் நிறம் – reddish colour of fire
- ஆழ் சிவப்பு - cinnabar
- ஆழ் செந்நீலம் (ஊதா) - claret
- ஆழ் பழுப்பு - brunneous
- ஆழ் பைம்மஞ்சள் - citrine
- ஆழ்சிவப்பு - cramoisy
- ஆழ்நீலச் சிவப்பு – aubergine
- இடலை (ஆலிவ்வு) (நிறம்) – olivaceous
- இருள் சிவப்பு - puccoon
- இருள்சாம்பல் - slate
- இள மஞ்சள் - flavescent / primrose
- ஈய(ம்) (நிறம்) - plumbeous
- ஈரல்நிறம் - Dark red colour, purple colour
- உறைபால்(நிறம்) – whey
- எண்ணெய்க்கறுப்பு – dark black colour
- எலுமிச்சை ம் - citreous
- ஒண்சிவப்பு - cardinal
- ஒளிர் செஞ்சிவப்பு - phoeniceous
- ஒளிர் செம்மை - coccineous
- ஒளிர் வெண்கலம் – aeneous
- ஒளிர் வெண்கலம் (நிறம்) - aeneous
- ஒளிர்சிவப்பு - puniceous
- ஒளிர்மஞ்சள் - sulphureous / vitellary
- கசகசாச் சிவப்பு - ponceau
- கடல்(நிறம்) – sea blue colour
- கடல்நீல (நிறம்) - ultramarine
- கடற்பச்சை - cerulean
- கத்தரிநீலம் - periwinkle நித்திய கல்யாணி
- கபிலை / புகர்நிறம் - Tawny, brown or swarthy colour;
- கரு (நிறம்) - sable
- கருஞ்சிவப்பு - porphyrous/purpureal
- கரும்பச்சை – corbeau
- கருமை - nigricant / nigrine
- காயாம்பூ (நிறம்) - purple colour
- காளிமம் - black colour
- கிளிச்சிறை - Gold resembling the parrot's wing in colour
- குங்குமச் சிவப்பு- vermeil
- குங்குமப்பூ(நிறம்) - croceate / saffron
- குரால் - Dim, tawny colour;
- குருதிச்சிவப்பு - erythraean / sanguineous / incarnadine
- குருதிச்செம்மை - vermilion
- கோதுமை (நிறம்) - wheaten
- கொடிமுந்திரி(நிறம்) - vinous
- கோமேதக(நிறம்) -topaz
- சருகிலை (நிறம்) - filemot
- சாம்பல் – cinerious
- சாம்பல் பச்சை - caesious / sage
- சாம்பல் மஞ்சள - isabelline
- சுடர் (நிறம்) – flammeous
- சுடுமண்(நிறம்) - terracotta
- சுதை வெண்மை - cretaceous
- செக்கர் – reddish sky
- செங் கருநீல(நிறம்) - violet / violaceous
- செங்கருப்பு - piceous
- செங்கல்மங்கல் - Dim red colour
- செங்கற்சிவப்பு - lateritious / testaceous
- செந்தீவண்ணம் - colour of glowing fire
- செந்தூரச்சிவப்பு – minium
- செப்புநிறம் - Dark-red colour
- செம்பட்டை - Brown colour of hair
- செம்பவளம் - deep red colour;. Crimson colour; மிகு சிவப்பு
- செம்பழுப்பு - sinopia/ sorrel
- செம்பு - Copper colour;.
- செம்பூச்சி - kermes
- செம்பொன் - titian
- செம்மஞ்சள் -jacinthe
- செவ்வல் (செந்நிறம்) - Redness;
- சோணம் - Red colour, crimson colour
- தசை (நிறம்) - sarcoline
- தவிட்டுநிறம் - Brown, dun colour
- திமிரம் – Colour ofDarkness
- தும்பை நிறம் - pure white colour
- துமிரம் - Deep red colour .
- துரு (நிறம்) – ferruginous
- துருச் சிவப்பு - rubiginous
- துவர் (சிவப்பு) - Scarlet Red colour,
- துவரி (காவிநிறம்) - Salmon colour
- தூயபழுப்பு - sepia
- தெள்ளுப்பூச்சி (நிறம்) - puce
- நட்டுச்சினைமண் - A kind of earth of the colour of crab's spawn
- நல்சிவப்பு – coquelicot
- நறுமஞ்சள் - lutescent
- நன்மஞ்சள் - luteolous
- நன்னிறம் - White colour
- நீல (நிறம்) – azuline
- நீல மணி - sapphire
- நீலச்சாம்பல் - glaucous / cesious / gridelin / lovat
- நீலச்சிவப்பு – amaranthine / solferino
- நீலப்பச்சை – turquoise / viridian
- பச்சை – chlorochrous
- பசுமை - virid
- பழுக்காய் - Yellowish, orange or gold with red colour, as of ripe areca-nut;
- பழுப்பு மஞ்சள் - fulvous
- பழுப்புச் சிவப்பு - castaneous / rufous / russet / umber
- பழுப்புச்சாம்பல் - greige / taupe
- பளீர்சிவப்பு - stammel
- பனிவெண்மை - niveous
- பாணிச்சாய் ( கள்போன்ற முத்துநிறம்.) - Colour of a class of pearls, resembling that of toddy
- பால்வண்ணம் – white colour
- புகர் நிறம் - tawny / tan
- புகைக்கரி – fuliginous
- புள்ளிச் சாம்பல் - liard grey
- புற்பச்சை - prasinous
- புறவு (நிற) - columbine
- பூஞ்சல் - Brown- ish colour; மங்கனிறம்
- பூஞ்சாயம்(அழுத்தமான சிவப்பு) - Deep, ruddy colour;
- பூவல்- Red colour
- பைந்நீல(நிறம்) - teal
- பைம்பொன் - chrysochlorous
- பொன் மஞ்சள் - goldenrod
- பொன்மஞ்சள் luteous
- பொன்மை – aurulent
- மகரம் - Pink colour
- மங்கல் பழுப்பு - fuscous
- மங்கல் பழுப்பு – khaki
- மங்கல்பச்சை - eau-de-nil
- மஞ்சள் – xanthic / icterine / icteritious
- மஞ்சள் பச்சை – chartreuse / zinnober
- மஞ்சள் பழுப்பு - lurid / ochre
- மஞ்சள்சிவப்பு - wallflower
- மணிச்சிவப்பு - rubious
- மணிநிறம் - Dark blue colour, as of sapphire;
- மயில்நீலம் - pavonated
- மரகதப்பச்சை - smaragdine
- மருப்பு (தந்தம்) - eburnean
- மல்லிகை மஞ்சள் – jessamy
- மாமை- dark-brown colour
- முக்கூட்டரத்தம் - Red colour produced by chewing betel, arecanut and lime
- முத்துச்சாம்பல் - griseous
- வளர்பச்சை - virescent
- வாதுமை (நிறம்) - ibis
- வான் நீலம் - cyaneous
- விண் நீலம் - celeste
- விழி வெண்மை – albugineous
- வெங்காயப் பச்சை - porraceous
- வெண்சாம்பல் - hoary
- வெண்மங்கல் - leucochroic
- வெண்மஞ்சள் - ochroleucous
- வெளிர் நீலம் - azure
- வெளிர் பச்சை - celado
- வெளிர் மஞ்சள் - nankeen
- வெளிர் மஞ்சள் பச்சை - tilleul
- வெளிர்நீலம் - watchet
- வெளிர்பழுப்பு - suede
- வெளுப்பு – albicant
- வைக்கோல் (நிறம்) – stramineous
தமிழ்நாட்டில் உள்ள இலை, மலர்களின் வண்ணங்களின் அடிப்படையில் தமிழ் மரபிற்கேற்ற வண்ணப்
பட்டியலை வெளியிட்டு அதனைக் கல்வித்துறையினரும் வணிகர்களும் மக்களும்
பின்பற்ற வேண்டும்.
http://www.newscience.in/articles/nira-vakaikal
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக