செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

Understanding is necessary : புரிதல் அவசியம்!

சொல்கிறார்கள்                                                                                                                                



உளவியல் நிபுணர் சுஜிதா: மூன்று உறவு வட்டங்கள், ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் தவிர்க்க முடியாதவை. முதலாவது காதலர்கள், தம்பதிகள் இவர்களுக்கு இடையே உணரப்படுவது; இரண்டாவது பெற்றோர், உடன் பிறப்புகள் உள்ளிட்ட குடும்ப அங்கத்தினர்கள் இடம் பெறுவர். மூன்றாவது நண்பர்கள், உறவினர்கள் இடம் பெறுவர். இந்த வட்டங்களின் வேறுபாடு, யாரை, எங்கே வைப்பது என்பதில், நமக்கு உள்ள தெளிவே, நம் முதிர்ச்சியின் வெளிப்பாடாகிறது.சில சமயங்களில், வெளி வட்டத்திலிருக்கும் ஒருவர், அதற்கடுத்த உள் வட்டத்திற்குள் நுழைய நேரிடலாம். உதாரணத்திற்கு, நட்பு வட்டத்தில் இருக்கும் ஒருவர் மிக நெருக்கமான நண்பராவது. அதேபோல், எதிர்ப்பால், நண்பர் ஒருவர் மீதான ஈர்ப்பு, நேசமாக உருவெடுப்பது போன்ற தருணங்களில், அவர்களை அந்த உறவு வட்டத்திற்குள் நுழைய அனுமதிப்பதில், நிதானமும், கவனமும் அவசியம்.தெளிவாகச் சொன்னால், பயங்கரவாதிகள் வசம் நீண்ட நாட்களுக்குப் பிணைக் கைதிகளாக இருப்பவர்கள், அதிலிருந்து விடுவிக்கப்பட்ட பின், அந்த தீவிரவாதிகளின் அருகாமையில் ஈர்க்கப்பட்டதன் அடிப்படையில் அவர்களின் அனுதாபிகளாகி விடுவர். போதிய மனப்பக்குவம் அவர்களின் வளர்ப்பு முறையில், கிடைக்காததன் கோளாறு மற்றும் வெகுளித்தனத்தின் வெளிப்பாடு தான் இது.இந்த மனநிலையிலிருந்து நாம் மீண்டு வர, எண்ணங்களை மறு சீரமைக்கும் உத்தியை மேற்கொள்ளலாம். நம்மால் மறந்தாக வேண்டிய, ஆனால், மறக்க முடியாத நபரைப் பற்றிய, அவருடனான நினைவுகளை திரும்பச் சீரமைக்கலாம். இதற்கு தீர்வாய் ஒரு குறிக்கோள், நல்ல புத்தகங்கள், விளையாட்டு, பொழுதுபோக்கு போன்றவை உதவியாக இருக்கும். நம்மை எப்போதும் பிசியாக வைத்துக் கொள்ள வேண்டும். இது போன்ற மன ரீதியான பாதிப்பில் இருப்பவர்களை, குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்காமல், புரிதலுடன் அணுக வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக