ஒன்பது வயதில் ஏதாவது ஒரு விளையாட்டில் சேர்த்து விடலாம்னு, அப்பா, அம்மா யோசித்த போது, அப்பாவின் நண்பர் மகள் ஸ்குவாஷ் ஆடுவதைப் பார்த்து, என்னை இந்த விளையாட்டில் சேர்த்து விட்டனர். நானும் ஆர்வமுடன் விளையாடி, தமிழக அளவில், மகளிர் ஸ்குவாஷ் அணியில் முதல் அல்லது இரண்டாவது இடத்தை தொடர்ந்து தக்க வைத்திருக்கிறேன். சமீபத்தில் உலகம் முழுக்க இருந்து, 25 நாட்டு ஸ்குவாஷ் வீரர்கள் போட்டியில் பங்கேற்றனர். அங்கு நடந்த, ஜூனியர் ஓபன் போட்டியில், கடுமையான உழைப்பைக் கொடுக்க வேண்டியிருந்தது; கடைசி வரை அசராமல், ஈடு கொடுத்து விளையாடினேன். இறுதியில், தனிநபர் பிரிவில் சாம்பியன் பட்டம் பெற்றேன்.அதே போல், கடந்த ஆண்டு இறுதியில், ஜோர்டன் நாட்டில் நடந்த, "ஏஷியன் ஜூனியர்ஷிப்' போட்டியில், வெள்ளிப் பதக்கம் பெற்றேன்.பினாங், மலேசியா, சுவிஸ், ஜெர்மனி என பல நாடுகளில் நடந்த, ஸ்குவாஷ் போட்டிகளில், இந்திய மகளிர் அணி சார்பாக விளையாடி, தங்கம், வெள்ளியென்று பல பதக்கங்கள் பெற்றேன்.என் ரோல் மாடல் நிகோஷ் டேவிட் தான்.கடந்த ஆறு ஆண்டில் முதல் இடத்தில் உள்ள, பெண்மணி நான் தான்.நம் ஊர் மக்களுக்கு, ஸ்குவாஷ்னு ஒரு விளையாட்டு இருப்பதே தெரியாது. சர்வதேச அளவில், சென்னையில் ஒரு விளையாட்டு நடந்தால், எங்களை உற்சாகப்படுத்த யாரும் இல்லை. இந்த நிலைமை மாற வேண்டும்.என்ன தான் பெரிய, பெரிய விருதுகளை வாங்கினாலும், நம் மக்கள் வந்து கைதட்டி எங்களை உற்சாகம் செய்தால் தான், உண்மையான சந்தோஷம் கிடைக்கும்.இந்த விளையாட்டில், இளைஞர்கள் அதிகளவில் பங்கேற்க வேண்டும். ஸ்குவாஷ் விளையாட்டிற்குண்டான, பணக்கார அடையாளம், சில ஆண்டுகளில் மாறிவிடும்.
வியாழன், 9 பிப்ரவரி, 2012
Squash champion aparajita :மென்பந்தாட்ட வீராங்கனை அபரசிதா

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக