ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

Black Day of Thamizhar nation: தமிழர் தேசத்தின் கரிநாள் !

சிங்கள தேசத்தின் சுதந்திர நாள் ! தமிழர் தேசத்தின் கரிநாள் ! கனேடிய தமிழர்களின் ஒன்றுகூடல்

பதிவு செய்த நாள் : 03/02/2012

இலங்கைதீவில் இரு தேசங்கள் என்ற நிலையில், சுதந்திர தமிழீழத்துக்காக போராடி வருகின்ற ஈழத்தமிழர்கள், சிங்கள தேசத்தின் சுதந்திரநாளை கரிநாளாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
தமிழர் தேசத்தை வல்வளைப்புச் செய்த வெற்றிக்களிப்பில் இருக்கும் சிங்கள தேசமானது, தனது சுதந்திரநாளை சிறிலங்காவில் மட்டுமல்ல, வெளியேயும் பெருமெடுப்பில் முன்னெடுக்கின்றது.
இந்நிலையில் புலம்பெயர் தமிழர்கள், சிறிலங்காவின் சுதந்திர நாளை கரிநாளாக வெளிப்படுத்துவதோடு, இலங்கைத்தீவில் சுதந்திரத்துக்காக பேராடிவருகின்ற இனமான, ஈழத்தமிழினம் உள்ளதென்பதனையும் சர்வதேசத்திற்கு உறுதியாக எடுத்துரைக்க உறுதிபூண்டுள்ளனர்.
இதனொரு அங்கமாக, கனாவில் உள்ள சிறிலங்காத் தூதரகம், தனது சுதந்திரநாள் கொண்டாட்டத்தினை பெருமெடுப்பில் முன்னெடுக்க விளைந்துள்ள சமவேளை, சிறிலங்காத் தூதரக்குத்துக்கு முன்னால் அணிதிரண்டு சிங்கள தேசத்தின் சுதந்திர நாள் ! தமிழர் தேசத்தின் கரிநாள் ! என முழக்கமிடவுள்ளனர்.
பெப்ரவரி 4ம் நாள் சனிக்கிழமை, பி.ப 4:30 மணிக்கு : 401 / Islington சந்திப்புக்கு அருகிலுள்ள Don Bosco மண்டபம் 2 St. Andrew Blvd., Etobicoke, M9R 1V8 எனும் இடத்தில் இந்த ஒன்றுகூடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நாளில் அனைவரையும் அணிதிரளுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிகழ்வு ஏற்பாட்டுக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக