சனி, 11 பிப்ரவரி, 2012

No respect for us : ‘எங்களுக்கு மரியாதை இல்லை!'


‘எங்களுக்கு மரியாதை இல்லை!' 


ஜல்லிக்கட்டு வீரர் ஸ்ரீதர்: என் ஊர் அலங்காநல்லூர், ஜல்லிக்கட்டுக்கு உலகப் புகழ் பெற்றது. முதன் முதலாக, நான் மாடு பிடிக்கும் போது, என் வயது 16, இப்ப 40 வயது. அன்று முதல் இன்று வரைக்கும் ஜல்லிக்கட்டு எங்கு நடந்தாலும், மாடு பிடிக்கப் போயிடுவேன். முன்பெல்லாம், பரிசு சின்ன துண்டு தான்; முரட்டுக் காளையை அடக்கினால், ஒரு வேட்டி பரிசு. காலப்போக்கில், மாடு பிடிக்க மவுசு கூடி, பரிசாக தங்கக் காசு, பீரோ, கட்டில், சைக்கிள் என்று அறிவிப்பு செய்தனர். முதன்முதலாக தஞ்சை ஜல்லிக்கட்டில் தங்கக் காசு பரிசாக வாங்கினேன். அதன் பின், நூற்றுக்கணக்கில் தங்கக் காசு பரிசாகக் கிடைத்தது. மாடு குத்தினால், பரிசாகக் கிடைத்த காசை விற்று, மருத்துவச் செலவுக்கு வைத்துக் கொள்வோம்; காயம்பட்டாலும் வீட்டிற்கு சொல்ல மாட்டோம். நடக்க தெம்பு இருந்தா போதும், மாடு பிடிக்க, மனசும், தெம்பும் தான் வேணும். இதில் ஒரு சிலர், மாட்டின் கொம்புகளில், விஷத்தை தடவி விடுவர். இப்போதெல்லாம், விஷம் தடவுவது, மாட்டிற்கு சாராயம் ஊற்றுவது கிடையாது. அதில் அரசு மிகவும் கண்டிப்பாக உள்ளது. எனக்கு திருமணத்திற்கு நிறைய பெண் பார்த்தனர். மாடு பிடிப்பவன் என்று பெண் தர மறுத்தனர். யாராவது மாப்பிள்ளை பார்க்க வந்தா, மாடு குத்தி கட்டுப் போட்டு இருப்பேன். இதனாலேயே திருமணம் தள்ளிப்போனது. கடைசியில், மாடு பிடிக்கும் விஷயத்தை சொல்லாமலேயே திருமணம் செய்து கொண்டேன். நான் வாங்காத பரிசு இல்லை, பாராட்டு இல்லை; அதனால், இப்போது ஒரு நன்மையும் இல்லை. ஜல்லிக்கட்டுக்காக நிறைய சொத்துக்களை அழித்து விட்டேன். இப்போது, வறுமையில் இருக்கிறேன். இன்று மாட்டிற்கு உள்ள மரியாதை கூட எங்கள மாதிரி வீரர்களுக்கு கிடைப்பதில்லை. வீர விளையாட்டின், வீரர்களை மதித்து, பராம்பரிய ஜல்லிக்கட்டை வளர்க்க வேண்டும்! தொடர்புக்கு: 95009 38760


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக