திங்கள், 6 பிப்ரவரி, 2012

solkirarkal - I love challenges : அறைகூவல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்

"சவால்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்!' ஆசியாவில் சிறந்த மார்க்கெட்டிங் மேனேஜ்மென்ட் பேராசிரியருக்கான விருது பெற்ற ஜெயஸ்ரீ: ஐதராபாத் உஸ்மேனியா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ., படிப்பை முடித்தேன். பின், அகமதாபாத் ஐ.ஐ.எம்., கல் வி நிறுவனத்தில், "ரிசர்ச் அசிஸ்டெண்ட்டாக' பணியை துவக்கினேன். பிஎச்.டி., படிப்பை முடிக்காமல், ஆசிரியப் பணியைச் செய்ய இயலாது என்பதால், குஜராத் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி., படிப்பை முடித்தேன்.ஐ.ஐ.எம்.,மில் பணியாற்றியபோது, அலகாபாத் வங்கியில் அதிகாரியாகப் பணியாற்றும் வாய்ப்பு தேடி வந்தது. அதில் சேர முடிவெடுத்த நேரத்தில், என் துறை தலைவர், இங்கேயே உயர் பதவிக்கான வாய்ப்புகள் இருப்பதை எடுத்துச் சொன்னதும், வங்கிப் பணியை உதறினேன். பத்தாண்டுகள் ஐ.ஐ. எம்.,மில் பணி, இடையில் திருமணம், குழந்தைகள் என குடும்ப வாழ்க்கை நகர்ந்தது.சவால்கள் என்றால், எனக்கு மிகவும் பிடிக்கும்... ஐ.ஐ.எம் ., மில் பணிபுரியும் போதே, சொந்தமாக ஒரு தொழில் நிறுவனத்தையும் துவக்கி நடத்தினேன்; அங்கு பெட்ஷீட்டுகள், தலையணை உறைகளைத் தயாரித்து மார்க்கெட்டிங் செய்தேன்.அப்போது, சென்னை எம்.ஓ.பி., வைஷ்ணவா கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரியும் வாய்ப்பும் கிடைத்து. அந்த கல்லூரியில் பி.பி.ஏ., துறை ஏற்படுத்தியதில் எனக்கு முக்கிய பங்கு உண்டு. பின், கடந்த 2003ம் ஆண்டு முதல் எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழகத்தின், "ஸ்கூல் ஆப் மேனேஜ்மெண்ட்டில் டீனாகப்' பணியாற்றி வருகிறேன்.ஒவ்வொரு மனித உயிருக்குள்ளும் ஆற்றல் நிறைந்துள்ளது. சரியான வாய்ப்புக் கிடைத்தால், அனைவராலும் சாதிக்க முடியும்; பாசிட்டிவான சிந்தனைகள் மட்டுமே ஒருவரை உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்லும்; ஆர்வமும், அர்ப்பணிப்பு உணர்வும் இருந்தால், ஆசிரியர் தொழில் மட்டுமில்லாமல் எல்லாத் துறையிலும் வெற்றி வாய்ப்புகள் நிச்சயம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக