புதன், 8 பிப்ரவரி, 2012

சொல்கிறார்கள்








சிலம்பாட்டத்தில் உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ள சூரிய சேகரன்: நான் ஆறாம் வகுப்பு படிக்கிறேன். ஒரு முறை, எங்கள் பள்ளியில் நடந்த சிலம்ப விளையாட்டுப் போட்டியில், நான் கொம்பு சுத்தியதைப் பார்த்த எங்கள் விளையாட்டு ஆசிரியர், அதில் பயிற்சி கொடுக்க ஆரம்பித்தார். ஒற்றைக் கொம்பு, வாள், சுருள் வாள் வீச்சு என கடுமையான பயிற்சியளித்தார். அதில் பயம் தெளிந்து, சிலம்பம் மீது, அதிக ஆர்வம் ஏற்பட்டது.பள்ளியில், கிரிக்கெட், கால்பந்து, வாலிபால் என, விளையாட்டுக்கள் பிரபலமாக இருக்கும் போது, நான் சிலம்பம் விளையாடுவதை பார்த்த சக மாணவர்கள், என்னை பார்த்து பயந்தனர். பின், நான் சாம்பியன் பட்டம் பெற்ற போது, அதே மாணவர்கள் என்னை பாராட்டினர்.மலேசியத் தலைநகர் கேலாலம்பூரில் நடந்த, உலக சிலம்ப போட்டியில், பதினோரு வயதினர் பிரிவில், நானும் ஒருவனாக பங்கேற்றேன். இந்தியா, ஈராக், ஈரான், சிங்கப்பூர், மலேசியா, நேபாளம், இந்தோனேசியா உள்ளிட்ட, ஏழு நாடுகளிலிருந்து, 30 பேர் இந்த போட்டியில் பங்கேற்றனர். சிலம்பாட்டத்தின் அடிப்படையே, கவனம் சிதறக் கூடாது என்பது தான். என் அம்மா அருகில் இருந்த தைரியத்தில், நான் நம்பிக்கையுடன் விளையாடி, கோப்பையை ஜெயித்தேன். என் பெற்றோரும், ஆசிரியர்களும் தரும் உற்சாகத்தில் தான், என்னால் வெற்றி பெற முடிகிறது.நம்ம ஊரில் தான், சிலம்பாட்டம் தேய்ந்து வரும் கலையாக உள்ளது. ஆனால், தென்கிழக்கு ஆசிய நாடுகளில், இந்த விளையாட்டிற்கு நல்ல வரவேற்பு உள்ளது. இங்குள்ளவர்களுக்கும், இந்த கலையின் மீது, ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும்.ஒலிம்பிக் போட்டியில், சிலம்பாட்டத்தை சேர்க்கப் போகின்றனர். அதில் தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்பது தான் என் லட்சியம், கனவு எல்லாமே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக