சனி, 7 ஆகஸ்ட், 2010

தோத்திர கல்வெட்டு திறப்பு



காஞ்சிபுரம், ஆக. 6: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் சங்கராச்சாரிய  ஜயேந்திர  எழுதிய அம்மன் தோத்திரக் கல்வெட்டு வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள காமாட்சி அம்மனை பிரார்த்திக்கும் விதமாக சரஸ்வதி சுவாமிகள் 5 தோத்திரங்களை உருவாக்கியுள்ளார். இந்த தோத்திரத்துடன் ஆதிசங்கரரை பூஜிக்கும் 2 ஸ்தோத்திரங்களையும் படைத்துள்ளார். இவை கல்வெட்டில் பொறிக்கப்பட்டு காமாட்சி அம்மன் ஆலயத்தில் பதிக்கப்பட்டுள்ளன. இதனை சரஸ்வதி சுவாமிகள் திறந்து வைத்தார். அதற்கு முன் அவர் காமாட்சி அம்மன் ஆலயத்துக்குள் சென்று அம்மனை பூஜித்தார். ஆலயத்தில் பூர்ணகும்ப மரியாதை அளித்து அவரை வரவேற்றனர்.
கருத்துக்கள்

மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் சிறு மாற்றத்திற்குக் கூட இசைவு தராமல் பழைமையைப் பேணுகிறார்கள். எனவேதான், தஞ்சாவூர் பெரிய கோயிலில் அதனை எழுப்பிய இராசஇராச சோழனின் திருவுருவப் படிமத்திற்கு இசைவு தரவில்லை. அதைப்போல் தமிழக அரசும் கோயில்களின் பழமைக்கு முரணாகக் கொலைக் குற்றாளிகள் உட்பட யாராக இருந்தாலும் புதிய கல்வெட்டைப் பதிக்க இசைவு தரக்கூடாது. உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். கோவிலின் தூய்மை (புனிதம்) காப்பாற்றப்படவேண்டும். இறையன்ப்ர்களின் மனததைப் புண்படுத்தும் இத்தகைய செயல்களை அரசு ஊக்குவிக்கக் கூடாது. 
இறைநெறிமன்றம் சார்பில்
இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/7/2010 4:38:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக