புதன், 4 ஆகஸ்ட், 2010

திமுக ஆர்ப்பாட்டத்துக்கு எதிரான மனு தள்ளுபடி


மதுரை, ஆக. 3:    திமுக இளைஞர் அணி ஆர்ப்பாட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.  பழனி ஆயக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் சசிகுமார் தாக்கல் செய்த மனுவில், சொத்துக் குவிப்பு வழக்கில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாய்தா வாங்கி வழக்கைத் தாமதப்படுத்துவதாகக் கூறி, திமுக இளைஞர் அணியினர் ஆகஸ்ட் 4-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.  இது நீதிமன்ற அவமதிப்பாகும். மேலும் நீதிமன்றத்தை வெளியில் இருந்தே எச்சரிப்பதும் ஆகும். எனவே, திமுக இளைஞர் அணி ஆர்ப்பாட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.  இந்த மனு நீதிபதிகள் கே.சுகுணா, சி.எஸ்.கர்ணன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.  அப்போது ஆஜரான அட்வகேட் ஜெனரல் ராமசாமி, இந்த வழக்கு கர்நாடகத்தில் நடைபெறுகிறது. இங்கு நடைபெறும் ஆர்ப்பாட்டம் நீதிமன்றத்துக்கு எதிரானது அல்ல. வழக்கில் வாய்தா வாங்கி தாமதிப்பதை மக்களிடம் விளக்கவே திமுக இளைஞர் அணியினர் ஆர்ப்பாட்டத்தை நடத்துகின்றனர். எனவே, மனுதாரரின் மனுவில் பொதுநலன் எதுவும் இல்லை எனக் குறிப்பிட்டார்.  இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், பொதுநலன் மனு குறித்து உச்ச நீதிமன்றம் சில வழிகாட்டு நெறிகளை வழங்கி உள்ளது. அதற்கு முரணாக இந்த மனு உள்ளது. எனவே, மனுவைத் தள்ளுபடி செய்வதாக டிவிஷன் பெஞ்ச் தீர்ப்பு கூறியது.
கருத்துக்கள்

நீதி மன்றத்திற்குத் துணைநிற்கும் வகையில்தான் கோரிக்கை உள்ளது. எனினும் அதை ஏற்கும் துணிவு நீதி மன்றத்திற்கு இல்லை என்பது வெட்ட வெளிச்சமாகிறது. பேச்சிலும் எழுத்திலும் சுட்டிக்காட்ட வேண்டியவற்றை ஆர்ப்பாட்டம் மூலம் தட்டிக் கேட்பது நாளைக்கு நீதிமன்ற நடவடிக்கைகளை ஆர்ப்பாட்டங்கள் மூலம் திசை திருப்பும் நடைமுறைக்குக் கொண்டு செல்லலாம். நீதி மன்றங்களைக் கட்டுப்படுத்த முடியாத அரசு ஆளுங்கட்சி மூலம் மிரட்டுவதாகவும் அவப் பெயர் ஏற்படும். அரசு என்ன நினைக்கும் எனக் கவலைப்பாடாமல் நீதி என்ன சொல்கிறது என எண்ணி உரைப்பதே நீதிமன்றத்தின் கடமையாகும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/4/2010 3:13:00 AM
AMMAYAR VALHA!NATARAJAN ANNAN VALARHA!KALAIGER OLIHA!
By MGR MANDRUM,MADURAI
8/4/2010 12:27:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக