சனி, 7 ஆகஸ்ட், 2010

இரோசிமா நினைவு  நாள்: யு.எஸ். பிரதிநிதி பங்கேற்பு


ஹிரோஷிமா, ஆக. 6: ஜப்பானில் ஹிரோஷிமா நகர் மீது அணுகுண்டு வீசப்பட்டதன் 65-வது ஆண்டு நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதில், முதன்முறையாக அமெரிக்க பிரதிநிதி பங்கேற்றார்.இந்நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் நினைவு நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்று வருகின்றனர். ஆனால், ஒருமுறைகூட அமெரிக்க பிரதிநிதி பங்கேற்றது இல்லை.ஹிரோஷிமாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நினைவு நிகழ்ச்சியில் அமெரிக்க தூதர் ஜான் ரூஸ் கலந்து கொண்டார். இதேபோல், பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளின் தூதர்களும் முதன்முறையாக நினைவு தினத்தில் பங்கேற்றனர்.
கருத்துக்கள்

கொலைகாரர்கள் கூடிக் கொல்லப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் நாடகம் எப்போது நிற்கும்? உண்மையிலேயே இரங்கலைத் தெரிவிப்பதென்றால் கொல்லப்படும் நிகழ்வுகளை உடனே நிறுத்த வேண்டும். சப்பான் முதலான நாடுகள் ஈழத்தில் கொத்தணிக்குண்டுகளைப் பயன்படுத்திப் பேரினப் படுகொலை புரிந்ததற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும்.அதற்குக் காரணமான தலைவர்கள், அதிகாரிகள், படை யினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் இந்த நாடகததையாவது நிறுத்த வேண்டும். வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/7/2010 5:01:00 AM
உலகின் ஜனநாயகத்தின் பாதுகாவலன் என்று தன்னைத்தானே கூறிக்கொள்ளும் அமெரிக்காவின் கடந்துவந்த பாதைகளை கண்ணுற்றால் அவை அந்நாட்டின் கோரமுகத்தை காட்டும் கண்ணாடியாக விளங்குவதை காணமுடியும். இராண்டாம் உலகப் போரின்போது ஜப்பான் நகரங்களான ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அணு ஆயுத குண்டுகளை வீசி அழித்தது. அமெரிக்காவின் இந்த அணுஆயுத தாக்குதலில் முதலில் ஹிரோஷிமா மீது வீசப்பட்ட 'லிட்டில் பாய்' என்ற குண்டின் மூலம் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பேர் உயிரிழந்தனர். பல்லாயிரம் பேர் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டனர். இரண்டாவதாக நாகசாகி மீது 'பேட்மேன்' என்ற அணுகுண்டை அமெரிக்கா வீசியதில் அந்த நகர் நிர்மூலமாக்கப்பட்டதோடு, கதிர்வீச்சால் சுமார் இரண்டு லட்சத்து முப்பதாயிரம் பேர் மாண்டதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் அத்தகைய மோசமான மனிதப்படுகொலையின் நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. அன்று அமெரிக்காவுக்கு ஒரு ஹிரோஷிமா- நாகசாகி; இன்று ஒரு ஈராக்-ஆப்கானிஸ்தான். அமெரிக்க பயங்கரவாதத்தின் முடிவு நாள் எப்போது....? வேண்டாம் அணு ஆயுதம்; வேண்டும் அன்பு எனும் ஆயுதம்.
By nilal
8/7/2010 12:04:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக