வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

அணு ஆயுதங்களை அழிக்க ஐ.நா. பொதுச் செயலர் வேண்டுகோள்


நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் உயிர் தப்பிய சுமித்ரூ தானிக்சியை சந்தித்துப் பேசுகிறார் ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூன்.
நாகசாகி, ஆக. 5: அணு ஆயுதங்களை முழுமையாக அழிக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  ஜப்பானின் ஹிரோசிமா, நாகசாகி நகரங்கள் மீது அணுகுண்டு வீசப்பட்டதன் 65-வது ஆண்டு நினைவு தினம் ஹிரோசிமாவில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 6) நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பான் கி- மூன் ஜப்பான் சென்றுள்ளார். நாகசாகி நகரில் உள்ள அணு குண்டு தாக்குதல் நினைவு அருங்காட்சியகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், 1945-ம் ஆண்டு தாக்குதலில் உயிர் தப்பியவர்களை சந்தித்துப் பேசினார்.  அப்போது பேசிய அவர், உலகில் எந்தப் பகுதியிலும் மீண்டும் அணுகுண்டு தாக்குதல் நடைபெறக்கூடாது, அதற்கு அணு ஆயுதங்களே இல்லை என்ற நிலை உருவாக வேண்டும் என்றார்.  உலக நாடுகள் அனைத்தும் அணு ஆயுதங்களை முழுமையாக அழிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
கருத்துக்கள்

ஈழத்தில் கொத்தணிக் குண்டுகளை வீசிப் பேரினப் படுகொலை நடந்தததை வேடிக்கை பார்த்தவருக்கு அணுக்குண்டு ஒழிப்பு பற்றிப் பேச அருகதை உள்ளதா? 
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/6/2010 3:47:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
We should not blame only America. They will not attack without any reason, do you know this IRAQ and AFGHAN has been attacked by America. Because twin tower attacked by 9 persons from Iraq,5 persons from Afghanistan and 3 from Pakistan. Financial supported from Iraq.(17 guys went there for higher studies, you have to know americans have conscience and good heart - they are helping more than 50% orphange center all over the world). Japan also attacked because of Pearl harbour attacked by Japan. With out reason they will not do anything.
By binu
8/7/2010 10:26:00 AM
உலகின் ஜனநாயகத்தின் பாதுகாவலன் என்று தன்னைத்தானே கூறிக்கொள்ளும் அமெரிக்காவின் கடந்துவந்த பாதைகளை கண்ணுற்றால் அவை அந்நாட்டின் கோரமுகத்தை காட்டும் கண்ணாடியாக விளங்குவதை காணமுடியும். இராண்டாம் உலகப் போரின்போது ஜப்பான் நகரங்களான ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அணு ஆயுத குண்டுகளை வீசி அழித்தது. அமெரிக்காவின் இந்த அணுஆயுத தாக்குதலில் முதலில் ஹிரோஷிமா மீது வீசப்பட்ட 'லிட்டில் பாய்' என்ற குண்டின் மூலம் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பேர் உயிரிழந்தனர். பல்லாயிரம் பேர் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டனர். இரண்டாவதாக நாகசாகி மீது 'பேட்மேன்' என்ற அணுகுண்டை அமெரிக்கா வீசியதில் அந்த நகர் நிர்மூலமாக்கப்பட்டதோடு, கதிர்வீச்சால் சுமார் இரண்டு லட்சத்து முப்பதாயிரம் பேர் மாண்டதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் அத்தகைய மோசமான மனிதப்படுகொலையின் நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. அன்று அமெரிக்காவுக்கு ஒரு ஹிரோஷிமா- நாகசாகி; இன்று ஒரு ஈராக்-ஆப்கானிஸ்தான். அமெரிக்க பயங்கரவாதத்தின் முடிவு நாள் எப்போது....? வேண்டாம் அணு ஆயுதம்; வேண்டும் அன்பு எனும் ஆயுதம்.
By nilal
8/7/2010 12:05:00 AM
வணக்கம் இலக்குவனாரே...... பான் கீ மூனை அருகதையற்றவர் என்று தாக்குகிரீரே... சரி...... இலங்கையில் மனித உரிமை மீறலை விசாரிக்க அமைத்த குழுவை உங்களது மாஆஆஆஆஆஆஆன்புமிகு கருணாநிதி ஆதரிக்கவில்லையே அது உங்களுக்கு நியாயமாக ப்டுகிறதா?
By மானங்கெட்ட தமிழன்
8/6/2010 7:08:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக