செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

மதுரை விமான நிலையத்திற்கு கண்ணகி பெயரிடக் கோரி ஆட்சியரிடம் வலியுறுத்தல்


மதுரை, ஆக.2:  மதுரை விமான நிலையத்திற்கு கண்ணகி பெயர் சூட்டக் கோரியும், மதுரையில் கண்ணகி கோயில் அமைக்கக் கோரியும் புரட்சிக் கண்ணகி பேரவையினர் திங்கள்கிழமை மதுரை மாவட்ட ஆட்சியர் சி.காமராஜிடம் மனு அளித்தனர்.இந்த அமைப்பைச் சேர்ந்த நிறுவனத் தலைவர் சுப்பிரமணியன், செயலர் எஸ்.சுப்பிரமணியன் உள்பட சிலர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.   அதில், சிலப்பதிகாரத்தின் காப்பிய நாயகியும், வாணியர் குலத்தின் பத்தினி தெய்வமான கண்ணகியின் பெயரை மதுரை விமான நிலையத்திற்குச் சூட்ட வேண்டும். மதுரையின் மையப் பகுதியில் தமிழக அரசு கண்ணகிக்கு சிலை எடுத்து கோயில் கட்ட வேண்டும். அவ்வாறு அமைக்கப்படும் கண்ணகி கோயிலை வரலாற்றுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.
கருத்துக்கள்

நல்ல கோரிக்கை. அரசு கருதிப் பார்த்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/3/2010 3:59:00 PM
நல்ல கோரிக்கை
By மடையன் மாந்தாளி
8/3/2010 3:11:00 PM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக