சனி, 23 ஏப்ரல், 2016

வட மாகாணக் கல்வி வளர்ச்சி அரங்கம் – கருத்தரங்கு, இலண்டன்




முத்திரை-வடமாகாணக்கல்விவளர்ச்சிஅரங்கு : muthirai_vadamaakaanakalvi_valarchiarangu

வட மாகாணக் கல்வி வளர்ச்சி அரங்கம்கருத்தரங்கு

சித்திரை 11, 2047 (24.4.2016) ஞாயிறு காலை 9:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை
உயர்வாசல் குன்று முருகன் ஆலயம்,
200-(A), வளைவுவழிச் சாலை, உயர்வாசல் குன்று, இலண்டன்,
என்6 5பிஏ.
[200A, Archway Road, Highgate Hill, London, N6 5BA].
அண்மைச் சுரங்க வழி: உயர்வாசல் அல்லது வளைவுவழி.
அன்புடையீர்,
வட மாகாணக் கல்வி வளர்ச்சி குறித்து மாநாடு ஒன்றினை நடத்த நாம் திட்டமிட்டிருந்ததை நீங்கள் அறிவீர்கள். இம்மாநாட்டில் இலங்கை வட மாகாணக் கல்வித்துறையைச் சார்ந்த அலுவலர்கள், தலைமையாளர்கள் கலந்து கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், எதிர்பாராவிதமாகச் சிலருக்கு பிரித்தானிய நுழைவாணை (visa) மறுக்கப்பட்டுள்ளது.
திரு.இராசா இரவிந்திரன் (கல்வி, பண்பாட்டு அலுவல்கள், விளையாட்டுத் துறை, இளைஞர் நல அமைச்சுச் செயலாளர், வடக்கு மாகாணம்) அவர்கள் வருகை தந்து கருத்தரங்கில் பங்கு கொள்ள இருக்கின்றார்.
இக்கருத்தரங்கில் தெரிவிக்கப்படும் கருத்துகளைத் தொகுத்து வட மாகாணக் கல்வி மேலாண்மையினரின் கவனத்திற்கு வழங்கத் திட்டமிட்டுள்ளோம். அதன் காரணமாகக் கருத்தரங்கினை ஐந்து பிரிவாக நடத்தவுள்ளோம்.
  1. எதிர்காலத்தில் அறிவியல், கணிதம், தகவல் தொழில்நுட்பம் முதலானவற்றை வளர்ப்பதற்கான திட்டங்கள்.
  2. ஆங்கிலக் கல்வி, சிங்களம், ஏனைய மொழி வளர்ச்சி குறித்த கலந்துரையாடல்கள்.
  3. தொலைநிலைக் கல்வி முறை (Distance Learning or Online Teaching) பற்றிய புதிய வழிமுறைகளை ஆராய்தல்.
  4. கணிதம், அறிவியல், ஆங்கிலம், தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களைக் கற்றலில் மாணவர்களின் இன்றைய நிலை – திரு.இராசா இரவிந்திரன்.
  5. வட மாகாணக் கல்வி வளர்ச்சி அரங்கம் ஊடாக நாம் என்ன செய்யலாம்?
தமிழ்க் குமுகம் (சமூகம்) போரினாலும் இயற்கைச் சீற்றங்களாலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு வகைகளில் பின்தங்கியுள்ளது. இக்குமுகம் வலுவான அடித்தளத்தோடு மீண்டும் முன்னைய பொலிவோடு விளங்க வேண்டுமெனில், கல்வியின் தரத்தை உயர்த்துவதன் மூலமே அது இயலும்.
அரசின் உதவி மட்டும் நம் மக்களின் கல்வித் தரத்தை உயர்த்தப் போதாது. நம்மவர்களின் உதவியும் தேவை. வெளிநாடுகளில் வாழும் நம் மக்கள் சிறிய உதவி புரிந்தால் கூடப் பாரிய மாற்றங்களை நாம் காண முடியும். அதற்கான வாய்ப்புகளைக் கண்டறியவே இம்மாநாட்டினைக் கூட்டத் திட்டமிட்டிருந்தோம். அதன் இன்னொரு பகுதியாகவே இக்கருத்தரங்கினைக் கூட்ட எண்ணியுள்ளோம்.
மிகச் சிறந்த கல்விக் குமுகமாக விளங்கும் புலம்பெயர் தமிழ்மக்கள் இப்பணிக்கு உதவ வேண்டுமென மிகவும் தாழ்மையோடு வேண்டுகிறோம்! அதன் அடிப்படையில் இக்கலந்துரையாடலில் கலந்து தங்கள் மேலான பங்கை வழங்குமாறு கோருகிறோம்!
நன்றியுடன்
இ.சேசுதாசன், வி.சிவலிங்கம்
(இணைச் செயலாளர்கள்)
(கருத்தரங்கில் உணவு மற்றும் சிற்றுண்டிகள் பரிமாறப்படும்.)
பெயர்-இ.பு.ஞானப்பிரகாசன் : peyar_gnanaprakasan_peyar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக