இந்தியச்சேமவங்கி : R.B.I.building

சேம வங்கியின் (Reserve Bank) பெயரில் வரும்

மின்னஞ்சல்களை நம்பாதீர்கள்!

சேம வங்கி ஆளுநர் எச்சரிக்கை!

  “உங்களுக்குப் பத்துக் கோடி உரூபாய் பரிசு விழுந்திருக்கிறது”, “இத்தனை நூறாயிரம் (இலட்சம்) உரூபாய் குலுக்கலில் (lottery) உங்களுக்குக் கிடைத்திருக்கிறது” எனவெல்லாம் அன்றாடம் போலி மின்னஞ்சல்கள் வருவது வாடிக்கையானதுதான். ஆனால், அண்மையில் இது போல இந்தியச் சேம வங்கியின் (Reserve Bank of India) பெயரைப் பயன்படுத்திச் சிலருக்கு மின்னஞ்சல்கள் வந்திருந்தன. இது தொடர்பாகப் பேசிய சேம வங்கி ஆளுநர் இரகுராம் இராசன், “சேம வங்கி பெயரிலோ, எனது பெயரிலோ வரும் மின்னஞ்சல்களை நம்பிப் பொதுமக்கள் யாரும் பணத்தைப் பறிகொடுக்க வேண்டா! மக்களிடமிருந்து பணம் வாங்க வேண்டிய தேவை சேம வங்கிக்கு இல்லை” என்று கூறியுள்ளார்.
                       இரகுராம்இராசன் : raghuraman01 
தரவு:
பெயர்-இ.பு.ஞானப்பிரகாசன் : peyar_gnanaprakasan_peyar