. திருக்குறளை இந்தி முதலான அனைத்து மொழிகளிலும் வெளியிட வேண்டும்! – அரித்துவாரத்தில் திருவள்ளுவர் சிலைக்கு அடிக்கல் நாட்டி ஆளுநர் உரை
உத்தரகாண்டு மாநிலத்தில் உள்ள அரித்துவாரத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்படுகிறது. தமிழார்வலரான நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விசய்
முயற்சியின் பேரில் இந்தச் சிலை அமைக்கப்படுகிறது. இதற்காக அவர், தொகுதி
வளர்ச்சி நிதியில் இருந்து உரூ.200 ஆயிரம் (இரண்டு இலட்சம்) வழங்கி
உள்ளார்.
சிலை அமைப்புக்கான அடிக்கல் நாட்டு விழா தலைநகர் தேராதூனில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. அந்த மாநில ஆளுநர் கே.கே.பால்
விழாவில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். அவர் பேசுகையில், “தமிழ்ப்
புலவர் திருவள்ளுவர், வருங்காலப் பல தலைமுறை மக்களுக்கும் நல்வழி காட்டி
உள்ளார். இஃது, இந்திய மக்கள் அனைவருக்கும் ஏற்றதாக அமைந்துள்ளது. இந்திய ஒருமைப்பாட்டுக்காகத், திருக்குறளை இந்தி முதலான அனைத்து மொழிகளிலும் வெளியிட வேண்டும்” என்றார்.
படம்: நன்றி காலைமலர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக