பெவர்லி:அமெரிக்காவை சேர்ந்த பிரட் பட்லர்,
பள்ளிப்படிப்பை தனது 106 ஆவது வயதில் படித்து முடித்துள்ளார். பிரட்
பட்லர், தாய் மற்றும் உடன்பிறந்த 5 பேருடன் வசித்து வந்தபோது தனது பள்ளி
படிப்பை தொடர முடியாமல் போனது. ஆனால் அவரது மனதில் பள்ளி படிப்பை முடிக்க
வேண்டும் என வைராக்கியம் இருந்தது.பின்னர் ராணுவத்தில் சேர்ந்து
பணியாற்றினார். தனது 41 வயதில் திருமணம் செய்துகொண்டார்.65 ஆண்டு திருமண
வாழ்க்கையில் 5 குழந்தைகளுக்கு தந்தையானார். தொடர்ந்து தனது 106 வது
வயதில் பள்ளி இறுதிப்படிப்பை முடித்தார். மசாசூசெட்ஸில் உள்ள பெவர்லி
பள்ளியில் சேர்ந்து படித்து தேர்ச்சி பெற்றார். இந்நிலையில் அப்பள்ளியில்
நேற்று நடந்த பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் அவருக்கு பாராட்டு
தெரிவிக்கப்பட்டு பட்டமளிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக