புதன், 6 மார்ச், 2013

பெண்களால் முடியும்!








பெண்களால் முடியும்!

இந்துத்தான், யூனிலிவர் நிறுவனத்தின், 16,500 ஊழியர்களை வழிநடத்தும், மனித வளத் துறை இயக்குநராக ப் பணியாற்றும், லீனா நாயர்:

நான், மகாராஷ்டிர மாநிலத்தில், மிகவும் சாதாரண, நடுத்தர வகுப்பைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்தவள். அப்பா கார்த்திகேயன், கோலாபூர் நகரத்தில், தொழில் செய்து வந்தார். பெண்களுக்கு, படிப்பு மிகவும் அவசியம் என, சிறு வயதிலிருந்தே சொல்லி வளர்த்ததால், படிப்பில் அதீத ஆர்வம்.

பள்ளிப் படிப்பு முடிந்ததும், கல்லூரியில், "எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்' பிரிவை தேர்ந்தெடுத்து படித்தேன். 3,000 ஆண்கள் படித்த எங்கள் கல்லூரியில் வெறும், 18பெண்களே படித்தோம். ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த இவ்வுலகில், எனக்கான பெண்களின் பயணத்தைஎப்படி அமைப்பது என்ற தெளிவு, என்கல்லூரி வாழ்க்கையில் இருந்து தான், கிடைக்க துவங்கியது.


கல்லூரியில், இளநிலை படிப்பு முடிந்ததும், வணிக மேலாண்மையில் முதுநிலைப் பட்டம் பெற ஆசை. மேல் படிப்பிற்கு, பெற்றோர் சம்மதிக்கவில்லை. உறுதியாக போராடி, எம்.பி.ஏ., படித்து, அதிக மதிப்பெண்ணில், தங்க பதக்கமும் வாங்கினேன். இந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனத்தில், சாதாரண, "டிரெயினி'யாக வேலையில்சேர்ந்தேன்.

மகாராஷ்டிரா, கோல்கட்டா, சென்னையில் உள்ள அம்பத்தூர் என, இந்தியாவின் பல நகரங்களில் உள்ள கிளை அலுவலகங்களில் வேலை செய்ய,அதிகாரிகள் கட்டளையிட்டனர். சில கிளை அலுவலகங்களில் பெண்களுக்கு என, தனியாக கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல், மிகவும் கஷ்டப்பட்டேன். இன்று பலகஷ்டங்களையும் தாண்டி, 16,500 ஊழியர்களை வழிநடத்தும், மனித வளத்துறையின் இயக்குனராக அந்நிறுவனத்தில்பணியாற்றுகிறேன்.

இந்தியாவில், செல்வந்தர்கள் மட்டுமே, தொழில் அதிபர்களாக வர முடியும் என்பதில், எனக்கு நம்பிக்கை இல்லை. திறமை உள்ள எந்த பெண்களும், உறுதியுடன் போராடினால் வெற்றி நிச்சயம். குடும்ப சூழ்நிலையால், பலபெண்கள் வேலையை ராஜினாமா செய்தாலும், பகுதி நேர வேலைகள் செய்வதில் அக்கறை காட்ட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக