பெண்களின் காலம்!
மகளிர், தொழில் முனைவோருக்கான பயிற்சியாளர் மற்றும் சமூக ஆர்வலர், வி.ஷீலா
ராபர்ட்: இன்றைய பெண்களுக்கு, வீட்டில் இருந்தபடியே, சுய தொழில் செய்யும்
வாய்ப்புகள் அதிகம். அதிலும், நகரங்களை விட கிராமங்கள் மற்றும் அதை
சுற்றியுள்ள பகுதிகளில் தான், தொழில் முனைவோருக்கான வாய்ப்புகள் கொட்டிக்
கிடக்கின்றன. அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகளின், பயிற்சி மற்றும் நிதி
உதவிகள் என அனைத்தும், கிராமத்தை நோக்கியே வருகின்றன.நபார்டு மற்றும்
ஐ.ஓ.பி., போன்ற அரசு சார்ந்த வங்கிகள், கிராமப்புற பெண்களின்
மேம்பாட்டுக்கு என, தனி திட்டங்கள் வைத்திருக்கின்றன. இவற்றின் கீழ்,
ஒவ்வொரு மாவட்டத்திலும், "கிராமப்புற சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம்'
என்ற பெயரில், பெண்களுக்கு தேவையான பயிற்சிகளை, மதிய உணவுடன் இலவசமாக
வழங்குகிறது.தமிழக அரசின், "புது வாழ்வு' திட்டத்தின் கீழ் ஆண், பெண் என,
இருபாலருக்குமான சுய வேலைவாய்ப்பு பயிற்சிகளை, மாநில அரசு வழங்குகிறது.
இதற்கு, மாவட்ட திட்ட அலுவலகத்திற்கு சென்றால், நமக்குத் தேவையான தொழில்
பற்றிய பயிற்சி வகுப்புகள் மற்றும் அது பற்றிய கவுன்சிலிங்கும், இலவசமாக
கற்றுத் தருகின்றனர்.கிராமப்புற விவசாயக் குடும்பத்தில் உள்ள இளையோர்,
கிராம விவசாயக் குழுவில் சேர்ந்தால், விவசாய தொழில் சார்ந்த தோட்டக் கலை,
காய்கறி மற்றும் பூந்தோட்ட பராமரிப்புக்கு பயிற்சி, மானியம், நிதி உதவி என,
அனைத்தும் இலவசமாகக் கிடைக்கும்.கிராமப் பெண்கள், குழுவாக ஒன்றிணைந்து,
ஒரு தொழிலை தேர்ந்தெடுத்து, அந்த குழுவின் மூலம் பயிற்சி வகுப்புகளுக்கு
கோரிக்கை வைத்தால், சம்பந்தப்பட்ட குழுவிற்கு, சிறப்பு பயிற்சி வகுப்புகளை
ஏற்படுத்தி தருகின்றனர்.அரசு சார்ந்த, இலவச பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி
பெற்ற பின், தொழில் துவங்குவதற்கு தேவையான நிதி உதவிகளை, நபார்டு மற்றும்
அரசு வங்கிகள் மூலம், அவர்களே வாங்கித் தருகின்றனர். அதிக தொழில்
வாய்ப்புகளால், இனி வரும் காலம், பெண்களின் காலமாக மாறலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக