புதன், 6 மார்ச், 2013

சொத்து இருந்தால்தான் சொந்தமும் பந்தமும்





சென்னை: "சொத்துகளுடன் இருந்தால் சோறு, இல்லையேல், வீட்டை விட்டு வெளியேறு' என்பதாக தான், இன்றைய நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களில் வசிக்கும் முதியோரின் நிலை உள்ளது.
எழும்பூர் ஹால்ஸ் சாலை சந்திப்பில், ஒரு தம்பதியர், வாழ்வதற்கு பணம் மற்றும் வசதி இல்லாமல், நடைபாதையில் காலத்தை கடத்தி வருகின்றனர். அவரது பெயர் ராமதாஸ், 85. அவரது மனைவி கஸ்தூரி, 78. இவர்களின் ஒரே மகள் திருமணமாகி, பொழிச்சலூரில் வசிப்பதாக கூறப்படுகிறது. தச்சராக வேலை பார்த்து வந்த ராமதாஸ், செய்ய வேண்டிய கடமையான, மகளின் திருமணத்தை முடித்துவிட்டார். தனக்கென, எந்த சொத்தும் சேர்க்கவில்லை. தற்போதைய ஒரே சொத்து, மனைவியும், முதுகு வலியும் தான். மனைவிக்கு காது கேட்காது. மனைவியின் பேச்சு கணவருக்கு மட்டுமே புரிகிறது. கணவரின் செய்கை, மனைவிக்கு மட்டுமே புரிகிறது. மகளுக்கு தொந்தரவு தர கூடாது என்ற நினைப்போடு, முன் வேலை பார்த்த எழும்பூர் பகுதியில், தனக்கென யாராவது உதவுவர் என்ற நம்பிக்கையில், எழும்பூர் ஹால்ஸ் சாலை நடைபாதையில், ஒரு பாய், சில துணிமணிகளோடு வசித்து வருகின்றனர். பரிதாபப்பட்டு யாராவது தரும் உணவை சாப்பிட்டு விட்டு, வாழ்ந்து வரும் இவர்களுக்கு உள்ள ஒரே ஆறுதல், கணவனுக்கு மனைவியும், மனைவிக்கு கணவரும் இருப்பது தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக