வெள்ளி, 8 மார்ச், 2013

இலங்கை விவகாரம் : மக்களவையில் டி.ஆர். பாலு நாடகம்

இனப்படுகொலைக்கு ஆளானவர்கள் எண்ணிக்கையைக் குறைத்துக் கூறுவதையும் இன அழிப்பு என்று சொல்லாமல் உள் நாட்டுப்போர் என்று சொல்வதையும் பார்க்கும் பொழுது இவ்வாறு பேசுவதாகச் சோனியாவிடமும் இராசபக்சேவிடமும் இசைவு பெற்று விட்டுத்தான் நாடகம் ஆடுகின்றனர் போலும்! கிழிந்த முகத்திரையுடன் நாடகம் ஆடிப் பயனில்லை! மனம் மாறிப் பாவத்திற்குக் கழுவாய் தேட விரும்பினால் போர்க்குற்றவாளிகளான சிங்கள , இந்திய ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் தண்டிக்கப்பட வேண்டும் என முழங்க வேண்டும்! இனப் படுகொலையாளர்களுக்குத் தண்டனை வழங்க வகை செய்ய வேண்டும்! பொழுது போகவில்லை என்று அவர்கள் வேண்டுமானால் நாடகமாடலாம்! பார்ப்பதற்கு மனித நேயர்களுக்கு நேரமில்லை!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி!எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இலங்கை விவகாரம் : மக்களவையில் டி.ஆர். பாலு விவாதம்



இலங்கை விவகாரம் தொடர்பாக மக்களவையில் இன்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு பேசினார்.
மக்களவையில் இன்று அவை விதி 193ன் கீழ் இலங்கைத் தமிழர் பிரச்னை பற்றி விவாதம் நடத்த மத்திய அரசு ஒப்புக் கொண்டதை அடுத்து இன்று காலை  விவாதம் துவங்கியது.
அதில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு, இலங்கை தமிழர் விவகாரம் குறித்து பேசினார்.
அவர் பேசியதாவது, "இலங்கை விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு குறித்து மத்திய அரசு தெளிவாக விளக்க வேண்டும். இலங்கை வாழும் தமிழர்களை காக்கும் நிலைப்பாடுகளை இந்தியா முன்னெடுக்க வேண்டும். இலங்கையில் தமிழர்கள் தொடர்ந்து நசுக்கப்பட்டு வருகின்றனர். அவர்களது உரிமைகள் பறிக்கப்பட்டுவிட்டன. போருக்கு பிறகு இலங்கையில் இருந்து சுமார் 1,20,000க்கும் அதிகமான தமிழர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். தற்போதும் அங்கு தொடர்ந்து மனித உரிமைகள் மீறப்பட்டு வருகின்றன. தமிழகர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. அவர்களது நிலங்கள் ராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை உள்நாட்டு போரின் போது சுமார் 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இலங்கையில் தமிழ் பெண்களும், குழந்தைகளும் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர். தமிழ் இனத்தைச் சேர்ந்த ஆண்களை இலங்கை ராணுவம் தொடர்ந்து துன்புறுத்தி வருகிறது. போரினால் ஏராளமான தமிழ் பெண்கள் கணவரை இழந்துள்ளனர். பெற்ற மகனை இழந்துள்ளனர்" என்று பேசினார்.

+++

கருத்துகள்(5)

கனிமொழி இலங்கை சென்று எல்லாம் நன்றாக இருக்கு என்றார்கள்.இவர்கள் நடத்துவது வெறும் அரசியல். உண்மையில் அக்கறை illai
பன்னாடைக்கு பொன்னாடை போர்த்தியது மறந்து போய்விட்டதோ? போட்டோ எடுத்து தமிழ்நாடு முழுவதும் போஸ்டர் அடிப்போம்டி!
நீங்க ஆட்சில இருந்தப்பவே ஒன்னும் புடுங்கல இப்ப என்னத்த புடுங்க போறீங்க ????/
சர்வதேச பத்திரிக்கையாளர்கள் தமிழர்கள் வாழும் பகுதிக்கு சென்று சுதந்திரமாக செய்தி சேகரிக்க அனுமதிக்கப்பட வேண்டும். இது காயம்பட்ட எம்மக்களுக்கு சிறிது ஆறுதலாக இருக்கும்.ஓரளவேனும் உண்மை வெளிவர இது வழியாகும்.
தமிழருக்கு என்ன செய்ய வேண்டும் எது செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு என்ன தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று எதுவும் கூறாமல் எதை பற்றி பேசுகிறோம் எது பற்றி பேச போகிறோம் என்று தெரியாமல் ஐயகோ ஐயகோ இன்றி மக்களவையை ஒன்றுமில்லா பிரயோசனமில்லா ஒரு மணி நேரத்தை அனியாயமாக்கி விட்டார்கள் இந்த வந்தேறி திராவிட முன்னேற்ற கழக தெலுங்கர்கள் இவர்கள் ஒதுக்கிய நேரத்தை ஈழதமிழருக்கு பிரயேசனம் அல்லாத விடயத்தை பேசியதிலும் பார்க்க தமிழகமக்களின் நலன்களையாவது பேசியிருக்கலாம் இதற்கு பெயர் தான் திராவிடம் திராவிடர்
பதிவுசெய்தவர்  03/07/2013 20:05

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக