வழுக்கையை த் தடுக்க களிம்பு கண்டுபிடிப்பு
தினமலர்
இலண்டன்: தலை வழுக்கையாகி விடுமோ என்ற கவலை இனி தேவையில்லை. வழுக்கை
வராமல் தடுக்க புதிய களிம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதியோருக்கு
மட்டுமல்லாமல், தற்போது இளைஞர்களிடமும் வழுக்கை என்பது அதிகரித்து
வருகிறது. இதை தடுக்க வழிதெரியாமல், பலரும் அவதிப்படுகின்றனர். சிலர்
செயற்கை முடிகளை நடும் தொழில்நுட்பத்தை பயன்படுத்து கின்றனர். வழுக்கை
வராமல் தடுக்க என்ன வழி என்பது குறித்து பென்சில்வேனியா பல்கலைக்கழக தோல்
சிகிச்சைத்துறை நிபுணர்கள் பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்டனர். இந்த ஆய்வின்
மூலம், நம் உடலில், புரோஸ்டேட் சுரப்பியில் "பிஜிடி 2' என்ற "என்சைம்' தான்
வழுக்கைக்கு காரணம் என்பதை கண்டறிந்துள்ளனர். இந்த என்சைமை தடுப்பதற்கான,
களிம்பை தான் நிபுணர்கள் உருவாக்கி உள்ளனர். இது வியாபார ரீதியாக
விற்பனைக்கு வருவதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் காத்திருக்கவேண்டும். இந்த
களிம்பை( லோஷன்) தயாரித்து, சந்தைப்படுத்துவது குறித்து தற்போது மருந்து
தயாரிப்பு நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை துவங்கியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக