சொல்கிறார்கள்
தினமலர்
கூந்தலால் சாதனையும் செய்ய முடியும்! கூந்தல் மூலம் வீர
சாகசங்கள் செய்து வரும் ராணி ரெய்க்வார்: பிறந்தது, உ.பி., மாநிலம், ஜான்சி
அருகிலுள்ள ஜாஸ்லோம் கிராமம். பொதுப் பணித் துறையில் சாதாரண பணியாளராக
இருந்தார், என் அப்பா; ஏழ்மையான குடும்பம். மூத்த சகோதரிக்கு, 11 வயதிலேயே
மணம் முடித்தவர்கள், எனக்கும் மாப்பிள்ளை பார்க்க... நானோ, என் அம்மாவுடன்,
பிரம்மகுமாரி ஆசிரமங்களுக்குச் செல்வதிலேயே, ஆர்வமாக இருந்தேன். ஒரு முறை,
ஆசிரமத்தில் நடந்த யாகத்திற்காக மணல் அள்ளுவது, செங்கற்களை கொண்டு வருவது
என, அனைவரும் வேலை செய்து கொண்டிருந்தனர். நானும் அதைச் செய்த போது,
விளையாட்டிற்காக ஒரு துணியில் ஐந்து செங்கற்களை வைத்து, அதன் இரு முனைகளை,
என் இரட்டை ஜடைகளில் கட்டித் தூக்கினேன். நாளடைவில், தள்ளுவண்டியில், 100
செங்கற்களை வைத்து, ஜடையில் கட்டி இழுத்தேன். ஒரு முறை, என் தந்தையின்
அலுவலக ஜீப்பை, கூந்தலில் கட்டி இழுத்தேன். இதை பள்ளியில் கூறி, மீண்டும்
அதை செய்து காண்பிக்க, என் சாதனையை அனைவரும் பாராட்டினர். எனக்கு பேய்
பிடித்திருப்பதாக, கிராம மக்கள் பேசினர். இந்த வதந்தியால், என்னை
பள்ளியிலிருந்தும் நீக்கினர். மனம் தளராமல், ஆசிரமத்தின் உறுதுணையுடன்,
பொது இடத்தில் மினி பஸ்சை தலை முடியால், இழுத்துக் காட்ட, என் சாதனைக்கு
உரிய பாராட்டுக்கள் கிடைத்தன. அடுத்தடுத்து, லாரி, விமானம், கப்பல் என,
கூந்தலில் கட்டி இழுத்துக் காட்டினேன். எந்த வாகனமாக இருந்தாலும், அதில்
கயிறைக் கட்டி, அதன் மறுமுனையை என் ஜடை இரண்டையும் இணைத்து முடிப்பேன்.
அந்த முடிச்சு அவிழாமல் இருக்க, அதன் மீது ஒரு சிறு துண்டையும் கட்டுவேன்.
பின், வாகனத்தைப் பார்த்தபடி நின்று, என் இரு கைகளையும் தொடை களில்
அழுத்தி, "பேலன்ஸ்' செய்தபடி, மெல்ல பின்னோக்கி நகர, அந்த வாகனமும் என்னை
நோக்கி நகரத் துவங்கும். இந்த சாதனை, கின்னஸ் புத்தகத்திலும் இடம்
பிடித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக