வியாழன், 26 ஜூலை, 2012

இலண்டன் ஒலிம்பிக் விழாவில் இராசபக்சே : போராடத் தயாராகும் தமிழர்கள்

  மாலை மலர்
ஒலிம்பிக் தொடக்க விழாவில் பங்கேற்கும் ராஜபக்சேவுக்கு எதிராக லண்டனில் தமிழர்கள் போராட்டம்
லண்டன், ஜூலை 26-

உலகின் மிகப் பெரிய விளையாட்டான ஒலிம்பிக் போட்டி லண்டனில் நாளை (27-ந்தேதி) தொடங்கி ஆகஸ்டு 12-ந்தேதி வரை நடக்கிறது. ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா நாளை கோலாகலமாக நடக்கிறது. இந்த தொடக்க விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்து கொள்கிறார். ராஜபக்சே லண்டன் செல்ல இருக்கும் தகவலை அவரது செய்தி தொடர்பாளர் ஜெயசேகரா உறுதிப்படுத்தி உள்ளார்.

ஒலிம்பிக் தொடக்க விழாவில் பங்கேற்க இருக்கும், ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டம் நடத்த லண்டனில் உள்ள தமிழர்கள் திட்டமிட்டு உள்ளனர். இதை அங்கிருந்து வெளிவரும் “தி இன்டிபென்டன்ட்” என்ற பத்திரிகை தெரிவித்துள்ளது. எலிசபெத் மகாராணியின் வைர விழாவில் பங்கேற்க லண்டன் சென்று இருந்த ராஜபக்சேவுக்கு எதிராக ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஏற்கனவே போராட்டம் நடத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜபக்சே ஒலிம்பிக் தொடக்க விழாவுக்காக லண்டன் அழைக்கப்பட்டது முற்றிலும் பொருத்தமற்றது என்று இனப் படுகொலைக்கு எதிரான தமிழர்கள் அமைப்பை சேர்ந்த ஜான் ஜனநாயகம் தெரிவித்துள்ளார். லண்டன் செல்ல உள்ள இலங்கை குழுவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக உலக தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன சுரேந்திரன் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறும் போது ஒரு நாட்டின் தலைவர் என்ற போர்வையில் இருந்தே அவர் போர் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பித்து கொள்கிறார் என்றார்.

இலண்டன் ஒலிம்பிக் விழாவில்  இராசபக்சே : போராடத் தயாராகும் தமிழர்கள்

First Published : 26 Jul 2012 12:48:11 PM IST


லண்டன், ஜூலை 26 : லண்டனில் நாளை துவங்க உள்ள ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழாவில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில், ராஜபக்சேவுக்கு எதிராக, லண்டனில் பெரிய அளவில் போராட்டம் நடத்த அங்குள்ள தமிழர்கள் தயாராகி வருவதாக லண்டனில் வெளியாகும் ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக