கடமை தவறிய பள்ளி :கடமை தவறாத ஆட்டோ ஓட்டுநரான சுருதியின் தந்தை
தாம்பரம்,
ஜூலை 26 : தாம்பரத்தில் தனியார் பள்ளி பேருந்தில் வந்த பள்ளி மாணவி
சுருதி, பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக கீழே விழுந்து உயிரிழந்தாள்.இந்த
சம்பவம், ஆட்டோ ஓட்டுநரான சுருதியின் தந்தை சேதுமாதவனுக்கு உடனடியாக
போனில் தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர் பள்ளிக் குழந்தைகளை தனது ஆட்டோவில்
ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தார். தகவல் கிடைத்த உடன் உடைந்து போன
சேதுமாதவன், தனது ஆட்டோவில் இருந்த பிள்ளைகளை பத்திரமாக அவரவர் வீடுகளில்
இறக்கிவிட்டுவிட்டு, மருத்துமனைக்கு விரைந்துள்ளார்.மிகப்பெரிய
பள்ளி, தனது பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றி வரும் பேருந்தை கவனிக்காமல்
அலட்சியம் செய்துள்ளது. ஆனால், ஆட்டோ ஓட்டுநர், மிகத் துயரமான நேரத்திலும்
தனது கடமையை ஆற்றியுள்ளது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.
கருத்துகள்


By
மு.ஞான சேகரன்
7/26/2012 5:32:00 PM
7/26/2012 5:32:00 PM
அவரது உயர்ந்த பண்பிற்கு நல்ல எதிர்காலம் அமைய வாழ்த்துகள்!
பதிலளிநீக்குஆறு இளங்கோவன்