திங்கள், 23 ஜூலை, 2012

ஒளிப்பேழையே வழிகாட்டி!

சொல்கிறார்கள்



"சிடி' தான்"எனர்ஜி டானிக்!'


தடகள வீராங்கனை இல்லேஸ்வரி: நெல்லை மாவட்டம், நம்பித் தலைவன் பட்டயம் கிராமம் தான், என் சொந்த ஊர். எங்கள் குடும்பம் ஏழ்மையானது; தந்தை விவசாய வேலை செய்கிறார்.மூன்றாம் வகுப்பு படித்த போதே, எனக்கு, விளையாட்டின் மீது மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. இதற்கு முக்கிய காரணம், அப்பா தான். என் கிராமத்தில் இருந்து, 5 கி.மீ., தொலைவில் உள்ள மைதானத்திற்கு, நானும், அப்பாவும் தினமும் காலை, மாலை இரு வேளையும் விளையாடச் சென்று விடுவோம். மாநில அளவிலான குண்டு எறிதல் போட்டியில், இரண்டாம் இடம் பிடித்தவர், என் அப்பா. வறுமை காரணமாக அவரால், விளையாட்டைத் தொடர முடியவில்லை.தன்னால் நிறைவேற்ற முடியாத லட்சியக் கனவை, நான் நிறைவேற்ற வேண்டும் என எண்ணி, சிறு வயதிலிருந்தே எனக்கு விளையாட்டில் பயிற்சி அளித்தார். அப்பாவின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், தடகளத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறேன்.இரண்டு ஆண்டிற்குள் மாநில அளவில், 100 மீட்டரில், ஆறு தங்கம், 200 மீட்டரில், ஒரு தங்கம், நீளம் தாண்டுதலில், ஒரு தங்கம் என, மொத்தம் எட்டு தங்கப் பதக்கங்களையும், 12 வெள்ளிப் பதக்கங்களையும், ஏழு வெண்கலப் பதக்கங்களையும் வென்றுள்ளேன்.உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற ஹேட்லியின், "சிடி'க்களை, விடுமுறை நாட்களில் போட்டுக் காண்பிப்பார் அப்பா. அதே போல், தடகள வீராங்கனைகளான பி.டி.உஷா, அஞ்சு ஜார்ஜ் ஆகியோர் ஓடிய பந்தயங்களின், "சிடி'க்களையும் அடிக்கடி போட்டுக் காண்பிப்பார். இந்த, "சிடி'க்கள் தான், மேலும் என்னை ஊக்கப்படுத்துகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக