சனி, 28 ஜூலை, 2012

மழலையர் உயிர்கள் மலிவா? பள்ளிப் பேருந்தில் மற்றொரு பலி!


பள்ளி பஸ் சக்கரத்தில் சிக்கி எல்.கே.ஜி., மாணவி பலி

வேலூர்:வேலூம் மாவட்டம், ஆம்பூர் அருகே பள்ளி பஸ் மோதியதில், அதே பள்ளி எல்.கே.ஜி., மாணவி இதாறந்ர்.

ஆம்பூர் அடுத்த உம்மராபாத் அருகே, ஈச்சம்பட்டு மீனாட்சி காலனியைச் சேர்ந்தவர் குமார். கூலித் தொழிலாளி. இவர் மகள்கள் ஸ்விதா,10, சுஜிதா, 3, உறவினர் மகன் அசோக், 12, ஆகியோர் மாரப்பட்டு எம்பாசோ (இ.எம்.பி. ஏ.எஸ்.எஸ்.ஓ.,) மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில்
படிக்கின்றனர்.

சுஜிதா, எல்.கே.ஜி., படிக்கிறார். பள்ளியின் சார்பில், 20க்கும் மேற்பட்ட எய்ச்சர் மினி பஸ்கள் உள்ளன. நேற்று வாணியம்பாடியைச் சேர்ந்த டிரைவர் கிருஷ்ணன், 35, பள்ளி பஸ்சை ஓட்டி வந்தார். மாலை, 5 மணிக்கு மாணவ, மாணவியரை பள்ளியில் இருந்து ஏற்றிக் கொண்டு, ஒவ்வொரு கிராமமாகப் போய் இறக்கி விட்டு வந்து கொண்டிருந்தனர். மாலை, 5. 15 மணிக்கு, ஸ்விதா, சுஜிதா வை, அவர்கள் வீட்டுக்கு அருகில் அருகன் துருகம் என்ற இடத்தில் உள்ள முருகன் கோயில் அருகே, பஸ்சில் இருந்து இறக்கி விட்டனர். இறங்கிய உடன் வீட்டுக்கு போகும் ஆவலில், ஸ்விதா, சுஜிதா ஆகியோர் பஸ்சுக்கு முன் பக்கமாக ஓடி, எதிர் புறமும் இருந்த சாலையை கடக்க முயன்றனர்.

அப்போது டிரைவர் வேகமாக, பஸ்சை எடுக்க, பஸ்சின் முன் பக்க டயரில் சுஜிதா சிக்கிக் கொண்டார். இதை கவனிக்காத டிரைவர் பஸ்சை வேகமாக ஓட்டினார். சுஜிதாவின் உடலில் முன்புற சக்கரம் ஏறி இறங்கியது. சுஜிதா உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.அப்பகுதியினர், பஸ் சக்கரத்தில் சிக்கிய சுஜிதாவை மீட்கப் போராடினர். இதை பார்த்த டிரைவர் கிருஷ்ணன் தப்ப முயன்ற போது, பொது மக்கள் அவரை பிடித்து மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர்.

பின் மாணவி சாவுக்கு காரணமான பஸ்சை கொளுத்த அப்பகுதியினர் மண்ணெண்ணெய் கேன்களுடன் வந்தனர். சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த உம்மராபாத் போலீசார் வந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.பின் பஸ் டிரைவர் கிருஷ்ணனை கைது செய்தனர். பள்ளி தாளாளர் சண்முகத்திடம் விசாரணை செய்து வருகின்றனர். பள்ளி பஸ் டிரைவர் கிருஷ்ணன், மண்பாடி லாரி ஓட்டிக் கொண்டு இருந்தார் என்றும், அவரை பகுதி நேரமாக பஸ்சை ஓட்டச் சொன்னதால் விபத்து நடந்ததாக பெற்றோர் குற்றம் சாட்டியுஉள்ளனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக