புதன், 25 ஜூலை, 2012

தமிழை க் கொலை செய்வதை யாரும் கண்டுகொள்ளவில்லை



இச்செய்தியில் பிழைகள் உள்ளன. இருந்தாலும், 

தமிழ்க்கொலையைச் சுட்டிக்காட்டும் செய்தியாளருக்கும் தினமலருக்கும்  தமிழுணர்வோடு கருத்துகளைப் பதிந்த வாசகர்களுக்கும் பாராட்டுகள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /


 தமிழை க் கொலை செய்வதை யாரும் கண்டுகொள்ளவில்லை

தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களிடம் தரப்படும் பராமரிப்பு வரி ரசீது, பெரும் அச்சுப் பிழையுடன் காணப்படுகிறது.தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு, தனியார் சுங்கச் சாவடிகள், பராமரிப்பு வரி வசூலிக்கும் நடைமுறை உள்ளது.

ஆங்கிலம், இந்தி, தமிழ் ஆகிய மூன்று மொழிகளில், இதற்கான ரசீது அச்சடிக்கப் பட்டு இருக்கும்.ஆங்கிலம், இந்தி ஆகிய இரண்டு மொழிகளில், எந்த பிழையும் இன்றி அச்சடிக்கப் பட்டு உள்ள அந்த ரசீதில், தமிழில் உள்ள வார்த்தைகள் மட்டும், பொருள் புரியாத வகையில், பிழையுடன் அச்சடிக்கப் பட்டு உள்ளது.சென்னை தாம்பரம் அருகில் உள்ள சுங்கச் சாவடியில் வழங்கப்படும் ரசீது, பெரும் பிழையுடன் காணப்படுவதால், அதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அது என்ன "ஸ்தலம்?'
"இடம்' என்ற நடைமுறை சொல் பழக்கத்தில் இருக்கும் போது, அதற்கு பதிலாக அந்த ரசீதில், "ஸ்தலம்' என்ற வார்த்தையை அச்சடிக்க முயற்சி செய்துள்ளனர். அதுவும், "ஸ்தளம' என, பிழையுடன் அச்சடிக்கப் பட்டு உள்ளது.கிலோ மீட்டரை சுருக்கமாக, கி.மீ., எனப் பயன்படுத்துவது வழக்கம். அதையும், "கி மி' என, பிழையுடன் அச்சடித்துள்ளனர். வாகனம் எந்த இடத்திலிருந்து, எந்த இடம் செல்கிறது என அறியும் இடத்தில், "அதுர டொல ப்லாஜா' என்ற புரியாத மொழி வார்த்தைகள் உள்ளன."பிரிவு' என்ற இடத்தில், "தாம்பரம் முதல் திண்டிவனம்' என, எழுதப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், எந்த பொருளும் இல்லாத வண்ணம், "தம்பரம, திடிவநம' என, அச்சடிக்கப்பட்டு உள்ளது. "வாகனத்தின் வகை' என்ற இடத்தில், "காரு, வ்யாந்த், ஜூப்' என உள்ளது.இப்படி, தப்பும் தவறுமாக உள்ள ரசீதில், பணம் பெற்றுக் கொண்டதற்கான ரசீது என்ற வார்த்தையும்; கட்டணம் பற்றிய இதர தகவல்களும், பிழை இல்லாமல் அச்சடிக்கப் பட்டு உள்ளன.முன்பு, தேசிய சேமிப்பு குறித்த மத்திய அரசு விளம்பரங்கள், நாக்பூரில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படும். அங்கு பணிபுரியும் யாராவது ஒரு தமிழர், தனக்குத் தெரிந்த தமிழில், அந்த மொழிபெயர்ப்பைச் செய்வது உண்டு.

அக்கறையின்மை
ஆனால், இப்போது கணினி காலம். தமிழ் மொழியில் கட்டண ரசீதைத் தெளிவாக அச்சடிக்க முடியாதா அல்லது அக்கறையின்மையா? கட்டணம் வசூலிப்பதில் இருக்கும் அக்கறையை, நெடுஞ்சாலைத் துறை இதில் ஏன் காட்டவில்லை. கட்டணம் செலுத்துவோர், விதிக்கப்பட்ட தொகையை மட்டும் கவனிப்பர்; மற்றவற்றை பொருட்படுத்தமாட்டார்கள் என நினைக்கின்றனரா?சின்னச் சின்ன விஷயங்களுக்கு கூட, பெரும் குரல் எழுப்பும் அரசியல்வாதிகள் கண்களில் இது படவில்லையா அல்லது தங்கள் கார் டிரைவர்களே பணத்தைக் கட்டி ரசீது வாங்குவதால், இந்த விஷயம் அவர்கள் கண்களில் படவில்லையா?

வாகன ஓட்டிகள் புகார்
இங்கு மட்டும் அல்ல, பெரும்பாலான சுங்கச் சாவடிகளில் வழங்கப்படும் ரசீது, பிழையுடனே காணப்படுவதாக, வாகன ஓட்டிகள் புகார் கூறுகின்றனர். இவ்வாறு எழுத்துப் பிழையுடன் ரசீது வழங்கும் சுங்கச் சாவடிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான், மற்ற சுங்கச் சாவடிகள், பிழையின்றி ரசீது வழங்கும்.

- நமது நிருபர் -
 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


வாசகர் கருத்து (47)
VIVASAYI - Salem,இந்தியா
25-ஜூலை-201211:42:29 IST Report Abuse
முழுக்க முழுக்க அக்கறை இன்மைதான் காரணம். நான் சென்ற செப்டம்பர் மாதம் ஒரு தனியார் மையத்தில் ஆதார் கார்டுக்கு விண்ணப்பித்தேன். அதில் முகவரி எல்லாம் குறிப்பிட்டுவிட்டு, சரி பார்க்கச்சொன்னார்கள். ஆங்கிலத்தில் சரியாகவும், தமிழில் பலதவருகளுடனும் இருக்கக் கண்டு, மானிட்டரில் தமிழில் தவறுதலாக உள்ளது என்றேன். அதற்கு அவர்கள் ஆங்கிலத்தில் சரியாக உள்ளதா என்று மட்டும் பாருங்கள் என்றனர். தமிழில் சரி செய்து விடுவோம் என்றனர். ஆனால் ஆதார் கார்டு வந்து சேரும்பொழுது, உங்கள் செய்தியில் வர்ணித்தபடிதான் தப்பும் தவறுமாக இருந்தது. கம்ப்யூட்டரில் feed -in செய்த மாது நினைத்திருந்தால் அதை சரி செய்திருக்க முடியும். ஆனால் செய்யவில்லை. எனது ஆதார் கார்டில் SF என்பது &39சப்&39 என்றும். apartments என்பது &39அபர்த்மேன்த்ஸ்&39 என்றும் உள்ளது. இப்போது இந்த கமெண்ட்ஸ் டைப் செய்யும் போது கூட apartments என்று அடித்தால் &39அபர்த்மேன்த்ஸ்&39 என்றுதான் வருகிறது. நான் தான் சிரமம் மேற்கொண்டு &39அபார்ட்மெண்ட்ஸ் &39 என்று திருத்தி அடித்திருக்கிறேன். பொறுமையும், கவனமும், சிரத்தையும் இருந்தாலன்றி எதையும் சரிவர செய்யமுடியாது. கோயம்புத்தூர் நண்பர்களின் ஆதார் கார்டுகளில் &39கோயம்புத்தூர்&39 என்பது &39அக்கிம்புத்தூர்&39 என்று தமிழில் பதிவாகியுள்ளது மிகவும் நகைப்புக்குரியது.


maran - mumbai,இந்தியா
25-ஜூலை-201211:37:27 IST Report Abuse
கடை நாக்கில் தமிழ் .....


maran - mumbai,இந்தியா
25-ஜூலை-201211:29:58 IST Report Abuse
இனி தமிழ் மெல்ல சாகும் ....



rajaram avadhani - Tiruchy,இந்தியா
25-ஜூலை-201210:43:12 IST Report Abuse
சதீஷ், ஸ்தலம் என்பது வட மொழிச்சொல். தமிழ் இலக்கணப்படி மெய்யெழுத்தில் பெயர்கள் துவங்கா. எடுத்துகாட்டாக ஸ்டாலின் என்பது சரியான தமிழில் எழுதப்பட்டால், சுடாலின் என்றுதான் இருக்க வேண்டும் ஹி ஹி .....சும்மா தமாஷுக்கு

மொக்கை - madurai,இந்தியா
25-ஜூலை-201210:32:49 IST Report Abuse
சென்னை விமான நிலையத்தில் ஊனமுற்றோர் கழிப்பறை கதவில் physically challanged என்பதற்கு மொழி மாற்றமாக &39&39மெய்ப்புல அறைகூவலர்&39&39 என்ற நேரடி தமிழாக்கம் எழுதப்பட்டுள்ளது..இது சரியா என்று தமிழறிஞர்கள் விளக்கினால் நன்று..


Mani S - Chennai,இந்தியா
25-ஜூலை-201210:08:59 IST Report Abuse
தமிழ் இனத் தலைவர் காலத்திலேயே, அதுவும் அவர் இருக்கும் ஊரிலேயே இப்படி ஒரு கொடுமையா? "நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாந்தரை நினைந்து விட்டால்" ........ உடன்பிறப்பே .... உடனே எடு "டிக்ஷனரிய" ..... "இங்க்ளிஷ்ல" மூணு நாலு எழுத்துல சுருக்குற மாதிரி ஒரு தலைப்பு தேடு ......... ஆங் ..... கெடசிடிச்சா ....... சந்தோஷம் ..... என்ன சொல்லு தம்பி ....... SOTO ....... ஆகா ........ அற்புதம் ...... அருமை .... அபாரம் ...... இதுக்கு என்ன விளக்கம் தம்பி? ........ Saviar Of Tamil Organization.............. பிரமாதம் ......... இத வெச்சி ஒரு மாமாங்கம் ஓட்டிடலாம் ....... நம் ஜனாதிபதி நன்றி தெரிவிக்க சென்னை வரும்போது சொக்க தங்கம் சோனியா தலைமையில், தலையாட்டி பொம்மை மன்னுமோகன் சிரிப்பில், ப்ருட்லாங்க்வேஜ் முன்னிலையில் என் இருமகன்களும் யார் மேடையில் உட்காருவது என்று அடித்துக்கொள்ள, நமீதா குசுபு கலா மாஸ்டர் நடனத்துடன், உலக தமிழர்களை வரவழைத்து ஒரு விழா நடத்தி தமிழை வாழ வை(த்)துவிடலாம் ......... தயாராகு தம்பி ........... சூலை 32 .......... பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டிய நாளாய் அமையட்டும் ...... தமிழின் வாழ்வு மலரட்டும் ....... கொடுங்கோல் ஆங்கிலமும் இந்தியும் ஒழியட்டும் ...... புறப்பட்டு ஏறே ...... புறப்பட்டு .......... "ரெண்டு செட்" துணியுடன் சென்னை நோக்கி "லாரியிலும் பஸ்சிலும்" வெள்ளமாய் திரண்டு வா தம்பி ......... கடற்கரையில் சந்திப்போம் ......... கடல் அலையா ..... மனித தலையா என்று ஆரியர் கூட்டம் அதிசயிக்கட்டும் ....... கொடுங்கோல் ஆட்சி ஒழிய .......... நம் (ஊழல்) ஆட்சி மீண்டும் மலர அணிவகுத்து வா....... போராட்டக்களம் காணும் அனைவருக்கும் என் இதயத்தில் இடம் உண்டு .......
t
puyal - tirupur - tirupur,இந்தியா
25-ஜூலை-201211:27:48 IST Report Abuse
அருமை அருமை அருமை....


G.Senthamilselvan - mannargudi ,இந்தியா
25-ஜூலை-201209:38:44 IST Report Abuse
ஐயோ இதை காரணம் காட்டி சாலைமறியல் செஞ்சிட போறானுவ

satheesh - Bangalore,இந்தியா
25-ஜூலை-201209:13:46 IST Report Abuse
ஸ்தலம் என்பது தூய தமிழ் சொல் என்பது கூட தெரியாத தமிழர் இருக்கும் வரை இப்படிதான் நடக்கும்

Annunaki Ancient - Mahboula,குவைத்
25-ஜூலை-201209:44:50 IST Report Abuse
ஸ்தலம் என்பது தமிழ் வார்த்தைன்னு உங்களுக்கு யார் சொன்னது சதீஷ்..?? அப்போ "ஸ்" தமிழ் எழுத்தா..? ஸ்தலம் என்பது வட மொழி வார்த்தை "தளம்" தான் தமிழ் வார்த்தை.. "ஸ்தலம் என்பது வட மொழி சொல் என்பது கூட தெரியாத தமிழர் இருக்கும் வரை இப்படிதான் நடக்கும்.."...

R.சுதாகர் - Jeddah,சவுதி அரேபியா
25-ஜூலை-201209:51:29 IST Report Abuse
எனக்குத் தெரிந்தவரை தூய தமிழ்ச்சொல் எதுவும் மெய்யெழுத்தில் ஆரம்பிக்காது. மேலும் தூய தமிழில் &39ஸ்&39 என்ற வடமொழிச் சொல் இடம்பெறாது....

Palanivel Chockalingam - Bengaluru,இந்தியா
25-ஜூலை-201210:28:52 IST Report Abuse
அட அறிவுகெட்ட சதீஷ், ரொம்ப புத்திசாலின்னு உன்ன நீயே நெனெச்சு இங்க கருத்து சொல்றியா? முன்ன பின்ன தமிழ் இலக்கணம் படிச்சிருக்கியா? நீயெல்லாம் தமிழ் சரியா எழுத தெரியாத தமிழர்களப் பத்தி சொல்ல வந்துட்டியா? ஸ்தலம் என்பது ஸ்தல் என்ற வடமொழிச் சொல்லிலிருந்து வந்தது. இங்கே அவர்கள் ஸ்தளம் என்று சொல்வது எழுத்துபிழை அல்ல. அது ஸ்தள என்ற கன்னடச்சொல்லைத் தமிழ்ப்பட்டுத்தி இருக்கிறார்கள். இங்க குறிப்பிடப்பட்டதை வைத்து பார்க்கும் போது, இது ஒரு கன்னடனால் உருவாக்கப்பட்ட ரசீது போல் தெரிகிறது. இந்த ரசீது முழுவதும் சர்வம் கன்னடமயம். அவ்வளவு தான். இதற்கான தூய தமிழ்ச்சொல் இடம் என்பதே. இதைப்பற்றி குறை சொல்லும் தினமலர், தன்னுடைய நாளிதழில் பெரும்பாலும் சந்திப்பிழைகளை தொடர்ந்து விடாமல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. எடுத்துக்காட்டிற்கு, இங்கே, தமிழை கொலை செய்வதாக குறிப்பிடும் தினமலர், தமிழைக் கொலை செய்வதாகக் குறிப்பிட வேண்டும். க் சந்திப்பிழையை ஏற்படுத்தியுள்ளது. தன்னுடைய செய்திகளில், அவரைப் பொருத்தவரை, இவரைப் பொருத்தவரை என்று தொடர்ந்து பிழையாகவே செய்தி வெளியிடுகிறது. இங்கு, பொறுத்தவரை என்று வரவேண்டும். முதலில் தன்னுடைய செய்திகளில் சரியான தமிழ் ஆசிரியர்களைக் கொண்டு பிழைகளைத் திருத்திக் கொள்ளட்டும். பிறகு மற்றவரைக் குறை சொல்லட்டும்....

R.சுதாகர் - Jeddah,சவுதி அரேபியா
25-ஜூலை-201211:03:02 IST Report Abuse
தமிழ் வார்த்தைகளை படிக்க முடியவில்லை என்றால் மட்டுமே நாம் கொதித்து எழுகிறோம். படிக்க முடிந்தால் ஒரு வார்த்தையை எந்த எழுத்தைக் கொண்டு நிரப்பினாலும் நமக்கு சம்மதமே. &39ல&39 வுக்கு பதில் &39ள&39 போடலாம். &39ண&39 வுக்கு பதிலாக &39ன&39 போடலாம் யாரும் கேட்கப் போவதில்லை... கேட்டால் " ஏதோ தமிழில் எழுதுகிறோமே என்று சந்தோஷப்படுங்கள் " என்ற இளக்காரம் வேறு. இங்கேயே தினமலரில் எத்தனை பேர் தவறில்லாமல் கருத்து எழுதுகிறீர்கள்? என்னைப் பொறுத்தவரை ஒரு மொழியை தப்பும் தவறுமாக எழுதுபவரே அதன் அழிவுக்கு முதல் காரணமாக அமைகிறீர்கள். இங்கே இப்படி என்றால் நித்தம் நித்தம் தமிழ் சேனல்களில் விளம்பரங்களால் தமிழ் கொல்லப்பட்டு வருகிறதே அதற்கு என்ன செய்வது? பொதுவாக இந்த விளம்பரங்கள் இந்தியில் நேரடியாக எடுக்கப்படுகின்றன.எனவே அவற்றை தமிழாக்கம் செய்யும்போது தொடக்க காலங்களில் வாயசைப்புக்கு ஏற்ப dubbing செய்து வந்தனர். ஆனால் 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அதே பாணியை பின்பற்றி வருவது வருந்தத்தக்கது. பணம் வருகிறது என்பதற்காக இந்த டிவி நிறுவனங்கள் எதை கொடுத்தாலும் ஒளிபரப்ப தயாராக இருக்கின்றன. சில விளம்பரங்களில் வரும் வார்த்தைப் பிரயோகங்கள் வாந்தி வர வைக்கின்றன. ஒரு பனியன் விளம்பரத்தில் "குருடு ன்னாலும் எவ்வளவு நல்லா சண்டை போடுறாரு பாரு" என்று ஒரு வரி வரும். "குருடு" என்ற வார்த்தையை பயன்படுத்துவதே இழிவாக நினைக்கும் நமக்கு இந்த விளம்பரம் அதிர்ச்சியை அளிக்கும். காரணம் இந்த மொழிமாற்றங்கள் பெரும்பாலும் தமிழ் தெரிந்த இந்திக்காரர்களாலேயே செய்யப்படுகிறது. எனவே அவர்களுக்குத் தெரிந்த ஒன்றிரண்டு வார்த்தைகளை வைத்து ஒப்பெற்றுகின்றனர். ஆனால் இதுவரை எந்த தமிழ் சேனலும் இதற்காக சிரத்தை எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை. வாள்க தமில்...

Arumugam Elangovan - Chennai,இந்தியா
25-ஜூலை-201209:06:33 IST Report Abuse
தமிழைக் கொலை செய்வதை யாரும் கண்டுகொள்ளவில்லை ஆறு இளங்கோவன்

adiyamaan - Athipatti,இந்தியா
25-ஜூலை-201208:36:31 IST Report Abuse
இது போன்ற தமிழுக்கு நடக்கும் கொடுமைகளை "நாம் தமிழர்" என மாறு தட்டிக்கொல்வோரும், தமிழர்களின் தலைவராய் கருதப்படும் பெரியவரும் மருத்துவ சிகாமணி "ஐயா"மார்களும் எப்போதும் "உருமிக்க்"கொண்டிருக்கும் கட்சியினரும், தமிழர்களுக்கு நடக்கும் கொடுமைகளை தட்டிக்கேட்க "பம்பரம்"மாய் சுற்றிவருவோரும் ஏன்.. தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் அடிக்கடி தமிழர் நலனுக்காக பிரதமருக்கு "கடிதம்" எழுதுபவரும் ஏன் கண்டு கொள்ளவில்லை???

Surya Mad - Mascow,ரஷ்யா
25-ஜூலை-201208:33:44 IST Report Abuse
" நீயே முக்கண் முதல்வனாயும் ஆகுக. உன் நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே"

Jai - ,கனடா
25-ஜூலை-201208:23:13 IST Report Abuse
"அதுர டொல ப்லாஜா&39 என்ற புரியாத மொழி வார்த்தைகள் - கூகிள் செய்து பார்த்ததில் இது பீகாரில் உள்ள Adhura Toll Plaza என்று தெரிகிறது. யாரோ பீகாரில் அடித்த ரசீதை தமிழாக்கம் செய்துள்ளார்கள்.


Mekala Ramesh - Mumbai,இந்தியா
25-ஜூலை-201211:33:06 IST Report Abuse
எல்லாம் பணம் படுத்தும் பாடு..பணம் என்றால் நம்ம பிணம் கூட வாயை திறக்கும்.நீங்க இதெல்லாம் கவனிச்சி இந்த பாடு படுத்துவிங்கனு யாருக்கும் தெரியாது .வாழ்க தமிழ்....

T.G.BALASUBRAMANIAN - Chennai,இந்தியா
25-ஜூலை-201208:13:51 IST Report Abuse
தமிழ் நாட்டிலேயே உள்ள மத்திய அரசு அல்லது இந்திய பொது நிறுவனங்களின் கிளைகளில் பல தமிழர்கள் பணி புரிகிறார்கள். அவர்களுக்கென்ற தொழிற்சங்கங்களும் உள்ளன. இருந்தாலும் அவர்கள் ஒருவருக்கும் தமிழ்ப பற்று இருப்பதாகத் தெரியவில்லை. பொருள் ஈட்டுவதில் உள்ள அக்கறை தாய் மொழியின்மீது இல்லை. சில நாட்களுக்கு முன்பு இந்தியில் கை எழுத்து இடச் சொல்லும் அறிக்கை பற்றிய செய்தி வந்திருந்தது. முளையிலேயே கிள்ளி எறியாமல் அறிக்கை பற்றிய செய்தி பத்திரிகையில் வரும் வரை இவர்கள் எல்லோரும் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? தமிழர்கள் என்று சொல்லிக் கொள்ளவே வேதனையாக இருக்கிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிகளில் தமிழின் தரம் மிகவும் உயர்ந்ததாக இருந்தது. என் தந்தை பள்ளி இறுதி படிக்கும்போது நன்னூல் முழுவதையும் படித்து தேரவேண்டும் என்ற நிலை இருந்தது. இது தமிழ் பாடத்தில் இருந்த ஒரு பகுதிதான். தற்போதைய நிலை பற்றி ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள். உங்களுக்கே தற்போதைய நிலை புரியும். இப்படி இருந்தால் தமிழ் எப்படி வளரும்? மக்கள் தரத்தோடு வளரவேண்டும். தரம் இருப்பதாக பள்ளி இயக்குனரகம் எல்லோருக்கும் காகித சான்றிதழ்களை தருவதால் அலுவலக தொழிலாளர்கள் இப்படித்தான் இருப்பார்கள். இன்றைய அரசு அலுவலகங்களின் நிலை இதுதான். தமிழ் நிச்சயம் வெகு விரைவில் சாகும். அதற்கு தமிழ் பெயரைச் சொல்லிக்கொண்டு வயிறு வளர்க்கும் அரசியல் தலைவர்களே காரணமாவார்கள்.

villupuram jeevithan - villupuram,இந்தியா
25-ஜூலை-201208:11:50 IST Report Abuse
அதாவது பரவா இல்லை நாம் அன்றாடம் பார்க்கும் டிவி சானல்களிலும், அரசியல் கட்சிகளால் வைக்கப்படுகின்ற போஸ்டர்களிலும் உள்ள
Mekala Ramesh - Mumbai,இந்தியா
25-ஜூலை-201211:35:30 IST Report Abuse
அதை என் கேட்கிறிங்க .ரொம்ப கொடுமைதான்.அதுவம் சன் தான்...

A R Parthasarathy - Chennai,இந்தியா
25-ஜூலை-201207:28:10 IST Report Abuse
தெரியாதவர்கள் பெருகிவிட்டார்கள். அரசாங்கமே கூமொழியின் தொன்மை ட தவறான சொல்லாட்சியை (பதப் பிரயோகம் என்று வடமொழியில் கூறினால் சட்டென புரிந்துகொள்வார்கள்) பயன்படுத்துகிறது. வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றில் அடிகடி பயன்படுத்தும் சொல் "அருகாமை". இந்த சொல் அருகில் என்ற பொருள் பட பயன்படுத்தபடுகிறது. அனால் உண்மை என்ன தெரியுமா? அருகாமை என்ற சொல் எதிர்மறை பொருளையே குறிக்கும். கல்லாமை, இயலாமை போன்ற சொற்கள் என்ன பொருளை குறிக்குமோ அதுபோலதான் அருகாமையும். இந்த பிழை யாருமே கவனிக்காமல் காலம் காலமாக வழக்கத்தில் இருந்து வருகிறது. ithai அறிந்துகொள்ள தமிழில் புலமை வேண்டும் என்ற அவசியமில்லை.

Krish - India,சிங்கப்பூர்
25-ஜூலை-201208:16:18 IST Report Abuse
wow.. A R Parthasarathy அவர்களே, எனக்கு இந்த செய்தியில் தமிழை பற்றி கருத்து சொல்ல தகுதியில்லை. எனக்கு தமிழ் இலக்கணம் முழுதாக தெரியாது. அருகாமை பற்றி நீங்கள் சொன்னது உண்மை, அது தெரியாமல் போனது இயலாமை, கல்லாமை,, நன்றி...

indhiyan - bangalore,இந்தியா
25-ஜூலை-201210:54:25 IST Report Abuse
அருமை.. இதனால் தெரிய வருவது என்னவென்றால் இப்படியாக நிறைய ஆமைகள் பல பரிமாணங்களில் திரியுது. அதுல நம்மளும் இருக்கோம்....

v. sundaramoorthy - Ariyalur,இந்தியா
25-ஜூலை-201207:04:10 IST Report Abuse
இது மத்திய அரசோடு தொடர்புடையதா?.......அப்படியானால் அவர்கள் எது செய்தாலும்சரி. அவர்கள் தமிழனை கொன்றபோது கண்டுகொள்ளாதவர்கள் தமிழை கொளைசெயும்போது என்ன செய்யபோகிறார்கள் தமிழைபற்றி எல்லாம் தேர்தல் வரும்போதுமட்டும் வோடேகாக பேசுவோம் தமிழின காவலன் எல்லாம் உள்ளுரில் இருப்பவர்களை குறை கூறுவதற்கு மட்டும் தான். அடுத்தவனை குறிப்பாக மத்திய அரசை கேட்கவே மாட்டோம். நாம் மத்திய அரசின் அடிமைகள் என்பதை மறந்து விடவேண்டாம். கையாலாகாதவனுக்கும் ஒரு அடிமை இருக்கிறான் என்றால் அவன் இந்த தமிழ் நாட்டுகாரந்தான்.

Ananth - Seoul,தென் கொரியா
25-ஜூலை-201206:09:53 IST Report Abuse
இது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. எம் தாய் மொழியை கொச்சைப் படுத்துவதை ஒருகாலும் அனுமதிக்க முடியாது. உடனே சரி செய்ய வேண்டும். மக்களும் இனிமேல் தமிழில் எழுதும் போது ஒற்று (க், ச்...) இட வேண்டிய இடங்களில் இட வேண்டும். இது வர வர குறைந்து கொண்டே வருகின்றது

Partha - Bangalore,இந்தியா
25-ஜூலை-201209:30:36 IST Report Abuse
ஆமாம். மத்திய அரசு தவறு செய்தால் அது கண்டிக்கப்பட வேண்டும். அதுசரி எல்லா தொல்லைகாட்சிகளையும் பத்திரிக்கைகளையும் என்ன செய்யலாம்?...

Pats - Coimbatore,இந்தியா
25-ஜூலை-201209:58:39 IST Report Abuse
போடா... எங்கோ வடக்கில் உள்ள பீகாரிளிரிந்து வந்து தமிழில் ரசீது அடிக்க முயற்சி செய்துள்ளதை பாராட்ட மனமில்லை. இங்கு தமிழகத்தில் உள்ள தொலைக்காட்ட்சி, வானொலி, திரைப்படங்களில் பேசப்படும் தமிழை, இன்றைய பள்ளிகளில் உள்ள தமிழ் ஆசிரியர்களின் தமிழையோ கேட்டுப்பார். என்னிடம் தூக்குக் கயிறு இலவசமாக கிடைக்கும்....

கருக்கு அருவா - அத்திப்பட்டி,இந்தியா
25-ஜூலை-201206:05:02 IST Report Abuse
தமிழை பிழையாக எழுதுவது பற்றி தினமலர் பேசவேண்டியதுதான். தினமலரில் proof பார்க்கப் படுகிறதா என்பதே சில சமயம் சந்தேகத்திற்கு இடமாகிறது..

Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
25-ஜூலை-201204:58:31 IST Report Abuse
ஒருவேளை கட்சிக்காரர்கள் அடித்த போலி ரசீதாக இருக்கலாம். அவர்களுக்குத்தான் இவ்வளவு தூய தமிழ் தெரியும்
Reply
Shahul hameed - Jeddah,சவுதி அரேபியா
25-ஜூலை-201203:48:43 IST Report Abuse
வாசகர்களுடன் ஒரு எழுத்து பிழை பற்றி நான் பகிர்துகொள்ள விரும்புகிறேன். தமிழகத்தின் தென்கோடி மாவட்டத்தில் கல்வி நிறுவனம் ஒன்றில் 25 ஆண்டுகளாக ஒரு எழுத்து பிழை இருந்து வந்துள்ளது. எனது சகோதரர் ஒருவர் அந்த கல்விதந்தைக்கு தெரிந்த ஒரு பாதிரியார் மூலம் அந்த எழுத்து பிழையை சுட்டிக்காட்டி திருத்தி உள்ளார். எனது சகோதரர் பள்ளி படிப்பு முடித்தவர் 15 - 20 ஆண்டு காலம் சவுதி, குவைத், துபாய் போன்ற நாடுகளில் ஓட்டுனராக பணி புரிந்து தற்போது இந்தியாவில் பணி புரிகிறார். ஒரு முறை அவர் நாகர்கோவில் சென்று திரும்பும்போது தன்னுடன் வந்த பாதிரியார் மற்றும் ஒரு ஆசிரியரையும் அந்த கல்வி நிறுவனத்தின் பெயரை வாசிக்க சொல்லி உள்ளார் அவர்கள் இருவருக்குமே அதில் உள்ள தவறு தெரியவில்லை. அவர்கள் வாசித்த பெயர் ராஜா. ஆனால் அங்கே இருந்தது ஜ என்பதிற்கு பதிலாக ஐ. எனது சகோதரர் அந்த எழுத்து பிழையை சுட்டி காட்டி உள்ளார். அப்போதே பாதிரியார் தொடர்பு கொண்டு அந்த எழுத்து பிழையை திருத்த ஏற்பாடு செய்துள்ளார். இப்போது திருத்தப்பட்டு உள்ளது என சொன்னார். எனது சகோதர் பெயர் நாசர் - கயத்தார் (வீரவநல்லூர்) இந்த செய்தியை அந்த துறையில் இருப்பவர்கள் படிப்பார்கள் இந்த பிழைகள் திருத்தப்பட்டு விட்டது என தினமலரில் செய்தி வெளிவரும் நாள் வெகு தூரத்தில் இல்லை என நம்புவோம்....நன்றி.. சவுதி அரேபியா ஜெட்டாவில் இருந்து. கயத்தார் என்.ஷாகுல் ஹமீது

Vasu Murari - Chennai ,இந்தியா
25-ஜூலை-201203:08:28 IST Report Abuse
தமிழ் மொழிக் கொலையைக் கண்காணிக்க பல நக்கீரர்கள் தோன்றி விட்டார்கள். மொழிக் கொலையாளிகள் ஜாக்கிரதை. தினமலர் மூலமாக "கீழிசிருவாங்க". சாரி, இது மெட்ராஸ் தமிழ். பளக்க தோஷத்துலே வயக்கமா வர்றா மாதிரி வந்துடுச்சு. மன்சிகீங்கோ.
Reply
Kunjumani - Chennai.,இந்தியா
25-ஜூலை-201203:05:43 IST Report Abuse
இதெல்லாம் ஆரிய மாயை, அதனால் பால்கனி பாவை ஆரியமாலா கண்டுக்கொள்ளமாட்டார்கள். செம்மொழிகொண்டான் தானை தலைவர் நம்முடன் வாழும் காலத்திலா இந்த அக்கிரமம்? தானை தலைவரை ஆட்சிகட்டிலில் மீண்டும் அமரவைத்தால் தமிழ் வாழும், தமிழன் மடிவான்.


maria alphonse - chennai ,இந்தியா
25-ஜூலை-201209:29:48 IST Report Abuse
தமிழில் "ழ" கரத்தை நன்கு உச்சரிப்பவர்கள் பெரும்பாலும் பிராமணர்களே.......

குஞ்சுமணி சென்னை - Chennai ,இந்தியா
25-ஜூலை-201202:49:21 IST Report Abuse
அதிக பட்ச தண்டனையாக தூக்கு தண்டனை தருமாறு கணம் கோர்ட்டாரை கேட்டுக்கொள்கிறேன்

thangairaja - Dammam,சவுதி அரேபியா
25-ஜூலை-201201:16:41 IST Report Abuse
இந்தி தெரியவில்லையே என்று கூப்பாடு போடும் தமிழர்கள் பெருகி விட்டார்கள். தமிழே படிக்க கூடாது என்று போதிக்கும் ஆங்கில வழி பள்ளிகளுக்கும் ஆதரவு பெருகுவதால்.......இதை பற்றியெல்லாம் கவலை பட்டு ஆகப் போவதொன்றுமில்லை.

Govind - Delhi,இந்தியா
25-ஜூலை-201209:02:49 IST Report Abuse
நீங்கள் சொல்வது மிகவும் சரி .. தமிழர்களே இன்றையா தேதிக்கு தமிழ் கடைக்கு சென்று பொருள் வாங்கி வர மட்டும் பயன்படுத்துகிறார்கள். மற்றபடி ஆங்கிலத்தில் பெசுவடஹி பெருமையாக கொண்டுள்ளார்கள். வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் கூட தொலைகாட்சியில் தோன்றும்போது Housewife என்று சொல்வதையே பெருமையாக நினைகிறார்கள். இல்லத்தரசி என்று சொல்வது வெட்கமாக இருந்தால் "வீட்டை பார்த்து கொள்கிறேன் " என்று சொல்லலாமே. நம் மக்களுக்கு தாழ்வு மனப்பான்மை அதிகம் மற்றவர்கள் சொல்வதை கேட்டு நடபார்கலே தவிர சொந்த புத்தி எதுவும் கிடையாது. திராவிய கட்ச்சிகள் பெயரளவில் தான் தமிழுக்கு உழைத்தார்களே தவிர தமிழை முன்னுக்கு கொண்டு வரவில்லை. விஞ்ஞான தமிழை வளர்க்கவில்லை. Google போன்ற ஒரு நிறுவனம் வந்த பிறகு தான் English - Tamil Transliteration இணைய தளங்களில் பிரபலமாகியது. தமிழில் SPEECH RECOGNITION , CHARACTER RECOGNITION போன்ற அறிவியல் முயற்சிகளை மேற்கொள்ளாததின் காரணமே இன்று தமிழ் தமிழர்களால் சித்திரவதைக்கு ஆல்லாக்க பட்டுள்ளது....

Dailymalar - USA,யூ.எஸ்.ஏ
25-ஜூலை-201201:10:56 IST Report Abuse
நீங்களும் கொஞ்சம் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் . நீங்களும் செய்திகளில் .. டமார் ..பனால் என்று போடுறிங்க

K.Sugavanam - Salem,tamilnadu,இந்தியா
25-ஜூலை-201207:25:55 IST Report Abuse
நாம ஒருவருக்கொருவர் செய்தி பரிமாறி கொள்வதற்கும் ,பத்திக்கைகள் செய்தி வெளியிடுவதற்கும் வித்தியாசம் உண்டு.நாம பரிமாறுவது தகவல்.அதனால் அது நடந்தது,இதை செய்தனர் அப்புடின்னு சொல்லிட்டு போயிடறோம்.ஆனா பத்திரிகைய கையில எடுத்தா அது வாசகரின் கவனத்தை ஈர்க்கர மாதிரி தலைப்பு கொடுக்கணும்.அப்பத்தான் வாசகரும் அத சட்டுன்னு படிப்பார்.துப்பாக்கியால் சுட்டார்,துப்பாக்கியால் "டுமீல் டுமீல்"என்று சுட்டு தள்ளினார்.இந்த ரெண்டு தலைப்புல உங்களை மொதல்ல படிக்க தூண்டுவது எந்த தலைப்பு....

Krish - India,சிங்கப்பூர்
25-ஜூலை-201208:08:20 IST Report Abuse
அதை நீ ஏன் இப்படி கொலை செய்ற? அது என்ன DailyMalar.. ஒன்னு தின மலர் என்று போடு இல்ல, Daily Flower / Blossom என்று போடு. ஐடியை மாற்றி சொதப்பி, ஹையோ ஹையோ...
blackcat - Chennai,இந்தியா
25-ஜூலை-201201:09:14 IST Report Abuse
அரசாங்கத்தில் ஆங்கிலத்துக்கு தமிழாக்கம் செய்றவங்க யாருங்க.... அவங்கள நினைச்ச சிரிப்பதா அழுவதான்னே தெரியல.... தமிழ் எழுத்துக்களை போட்டு எழுதுவது தமிழாக்கம்ன்னு நினைச்சிடாங்க போல.... பல பேருந்துகளில் லேடீஸ் (ladies) ன்னு தான் போட்டு இருக்காங்க, "மகளிர்" ன்னு இல்லை.... பேருந்து நிலையத்துக்கும் தமிழ்ல பேரு வச்சி இருக்காங்க, அதுவும் எப்படி - "பஸ் ஸ்டான்ட்"ன்னு.... இது மாதிரி நகரம் முழுவதும் கணக்கு எடுத்து பார்த்தால் எத்தனை எத்தனை "நோ பார்கிங்", "பீச் செல்லும் வழி", "போலீஸ்", "ஸ்கூல் ஜோன்".... இப்படி சொல்லிகிட்டே போகலாம்......... இதை எல்லாம் கூட மன்னிச்சிடலாம், ஒரு பூங்காவில் சுத்தமாக தமிழாக்கம் செய்யப்பட்டு ஒரு பலகை இருந்துச்சு, அடடே என்னன்னு படிச்சு பார்தேன், "புகை இலவச பகுதி".... எனக்கு ஒன்னும் புரியல... கீழ ஆங்கிலத்தில் எழுதி இருந்துச்சு.... "Smoke free zone"..... சிரிக்கிறதா அழுவுறதா..... ஐயோ ராமா.....

Namasivayam Chokkalingam - Milwaukee,யூ.எஸ்.ஏ
25-ஜூலை-201203:18:27 IST Report Abuse
இமயம் போன்ற மாபெரும் வேறுபாடு உள்ளது தமிழுக்கும் மற்ற இந்திய மொழிகளுக்கும். வேற்றுமொழிச்சொற்கள் எவ்வளவு வேண்டுமானாலும் தங்கள் மொழியில் கலந்துகொ(ல்)வதைப்பற்றி அவர்கள் அணுவளவும் தயங்குவதில்லை. ஆனால் என்ன செய்வது
blackcat - Chennai,இந்தியா
25-ஜூலை-201200:56:04 IST Report Abuse
நான் பார்த்த வரை சுங்க சாவடியில் வட நாட்டு இளைஞர்கள் தான் அதிகம் இருக்கிறார்கள்.... அதற்கு காரணம் குறைந்த சம்பளத்தில் வேலை செய்கிறார்கள் என்ற ஒரே காரணம்.... தாம்பரத்தில் இருந்து திண்டிவனம் போகும் வழியில் மொத்தம் மூன்று சுங்க சாவடி உள்ளது... அனைத்திலும் பெரும்பாலும் இவர்கள் தான் உள்ளார்கள்.... "பந்த்ரா ருபியா... பீஸ் ருபியா"ன்னு பணம் கேக்குறாங்க.... நாம் தமிழ்நாட்டுல தான் இருக்குரோமா, இல்ல வட நாட்டுக்கு போயட்டோமான்னு கொஞ்ச நேரம் சந்தேகமே வந்துடுது......... இதுல அவனுக்கு "நான் oneway தான் போறேண்டா... மிச்ச காச குடுடா" ன்னு புரிய வைக்கறதுக்கு, லொள்ளு சபா மனோகர் மாதிரி காத்துலயே படம் வரைஞ்சி காட்ட வேண்டி இருக்கு.... இதுல அவனுங்க தர்ற சீட்டுல வேற இவ்வளவு பிழை.... சில சமயம் தமிழ்நாட்டு காரன் யாராவது இருந்தா, இந்த சீட்டு கூட தர மாட்டேங்குறாங்க.... "oneway தானே போறீங்க.... பாதி பணம் மட்டும் குடுங்க... சீட்டு எதுக்கு... போயிட்டு வாங்க" ன்னு சொல்றான்.... ஓட்டுனர்களும் வந்த வரைக்கும் லாபம்ன்னு பாதி பணத்த குடுத்துட்டு சீட்டு இல்லாமலே போறானுங்க.... அந்த பணம்லாம் எங்க போகுமோ.... ஆண்டவனுக்கே வெளிச்சம்....

A R Parthasarathy - Chennai,இந்தியா
25-ஜூலை-201206:56:20 IST Report Abuse
ஒன்னு கவனிசின்னகளா? பாஷை தெரியாவிட்டாலும் அவர்கள் நாணயமாக இருக்கிறார்கள். தமிழன் என்ன செய்கிறான்? பணத்தை பெற்றுக்கொண்டு அதற்க்கான ஒப்புகை சீட்டை (ரசீது என்று சொல்வதை தவிர்க்கவும்) கொடுக்காமல் ஏமாற்றுகிறார்கள். ஊழலின் ஊற்றுக்கண் நம்மவர்கள் தானே?...

kalaignar piriyan - denver,யூ.எஸ்.ஏ
25-ஜூலை-201208:39:16 IST Report Abuse
அஞ்சு ரூபாய்க்கு காதி க்ராப்ட்ல அதிமுக கொடி வாங்கி கட்டினா பாதி காசு கூட தரவேண்டாம். ...

Share this comment
Partha - Bangalore,இந்தியா
25-ஜூலை-201209:36:06 IST Report Abuse
சரியாகச் சொன்னீர்கள். தமிழனுக்கு தண்ணி அடித்து குப்புற கிடக்கவே நேரம் இல்லை. இதில் சுங்கச்சாவடியில் பதினாறு மணிநேரம் வேலையா?...


BLACK CAT - Marthandam.,இந்தியா
25-ஜூலை-201200:39:44 IST Report Abuse
"ஸ்தலம்&39 என்ற வார்த்தைக்கு மலையாளத்தில் "இடம்&39 என்று பொருள் ... ஒரு வேளை இந்த ரசீதை கேரளத்தில் ஆச்சு அடித்தார்களோ .....? தமிழகத்தில் வாழும் பெரும் பாலும் மக்கள் தமிழில் பேசுவதை கேவலமாக கருதிகின்றார்கள் , அவர்கள் பீட்டர் விடுவது ஆங்கிலத்தில் தான் ..... இப்படி இருக்கிற நிலைமையில் இந்த அச்சடிக்கப் பட்டு இருக்கும் ரசீது பிழை எல்லாம் ஒரு பொருட்டே இல்லை.

A R Parthasarathy - Chennai,இந்தியா
25-ஜூலை-201206:58:57 IST Report Abuse
இப்படி பிழைகளை பொருட்படுத்தாமல் இருப்பதால் தான் தமிழ் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துகொண்டிருக்கிறது....

sulaiman, doha Qatar - doha,கத்தார்
25-ஜூலை-201209:26:53 IST Report Abuse
ஸ்தலம் என்பது வட மொழிச சொல். ஏறத்தாழ ஐம்பது விழுக்காடு வட மொழியும் முப்பது விழுக்காடு தமிழும் கலந்ததுதான் மலையாள மொழி...ஒரு கேள்வி பெரிய BLACK CAT அவர்களே ...மார்த்தாண்டம் சுற்று வட்டாரத்தில் பேசப்படும் மொழியில் எத்தனை விழுக்காடு தமிழ் உள்ளது.? ...(எனது பிறந்த ஊரும் மார்த்தாண்டத்துக்கு அண்மையில் தான் உள்ளது)...

Matt pillai - nashville,tn ,யூ.எஸ்.ஏ
25-ஜூலை-201210:41:55 IST Report Abuse
ஸ்தலம் வடமொழி வார்த்தையாயினும் தமிழில் நிறய வடமொழி வார்த்தைகள் ஏற்றுகொள்ளப்பட்டது போல் இந்த வார்த்தையும் பழக்கத்தில் இருந்து கொண்டுதான் இருகின்றன. ...திருத்தலங்கள் -கோயில்கள் அமைந்த இடங்களை குறிப்பிடபயன்படுகின்றன. ...வார்த்தை என்ற வார்த்தையே தமிழ் வார்த்தையாக இல்லை. வோர்dippam...

kalaignar piriyan - denver,யூ.எஸ்.ஏ
25-ஜூலை-201200:39:39 IST Report Abuse
ஒரு வேலை "google translator" உபயோகப்படுத்தி அச்சடிச்சு இருப்பங்களோ?

A R Parthasarathy - Chennai,இந்தியா
25-ஜூலை-201207:01:23 IST Report Abuse
உண்மை தான். இயந்திரத்தில் மொழி மாற்றம் செய்யப்படும் பொது இதுபோன்ற பிழைகள் அதிகமாகவே ஏற்படுகிறது. அங்கே இருப்பவர்கள்தான் பிழைகளை சரிசெய்து சீட்டை வழங்கவேண்டும்....

K.Sugavanam - Salem,tamilnadu,இந்தியா
25-ஜூலை-201207:36:11 IST Report Abuse
ஆமாம்,இருக்கும்.பிரிண்டிங் யாராவது மலையாளி காண்ட்ராக்ட் எடுத்திருப்பான்.அதான் &39ஸ்தலம்".....

kalaignar piriyan - denver,யூ.எஸ்.ஏ
25-ஜூலை-201200:19:17 IST Report Abuse
எல்லாம் சரி, நீங்கள் ஏன் ஆட்சி மாறியவுடன் கலைஞரின் குறளுரையை நிறுத்திவிட்டீர்கள்?

kalaignar piriyan - denver,யூ.எஸ்.ஏ
25-ஜூலை-201200:18:21 IST Report Abuse
இப்போ உங்க செய்திகளிலே எவ்வளோ எழுத்து பிழை உள்ளது, அது போல தான், இருந்தாலும் இது கண்டிக்கப்படவேண்டிய விஷயம், மேலும் உடனே திருதப்படவேண்டியதும் ஆகும்.

balaji - Abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
25-ஜூலை-201200:11:02 IST Report Abuse
வாழ்க தமிழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக