வெள்ளி, 26 ஜூன், 2009

யாழ்ப்பாண தமிழ் நாளிதழ்களுக்கு தீவைப்பு
தினமணி


கொழும்பு, ஜூன் 25: இலங்கையில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் தமிழ் பத்திரிகைகள் வியாழக்கிழமை அதிகாலை ஆயுதம் தாங்கிய நபர்களால் தீவைத்துக் கொளுத்தப்பட்டன."நாட்டைப் பாதுகாக்கும் தமிழ் முன்னணி' என்ற அமைப்பு, விடுதலைப் புலிகளுக்கு எதிரான செய்தியை கட்டாயம் பிரசுரிக்குமாறு யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் தமிழ் பத்திரிகைகளுக்கு தொலைபேசி வாயிலாக மிரட்டல் விடுத்திருந்தது.ஆனால் அதற்கு பணிய மறுத்த வலம்புரி, உதயன் மற்றும் தினக்குரல் (யாழ்ப்பாண பதிப்பு) ஆகிய தமிழ் பத்திரிகைகளை வியாழக்கிழமை அதிகாலையில் விநியோகம் செய்வதற்காக கொண்டு சென்றபோது, ஆனைப்பந்தி மற்றும் கன்னத்திடி பகுதிகளில் ஆயுதம் தாங்கிய சிலர் அதைப் பறித்து தீவைத்துக் கொளுத்தினர். அந்தப் பத்திரிகைகளின் விநியோகஸ்தர்களும் கடுமையாகத் தாக்கப்பட்டனர்.இந்த சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது இலங்கை கல்வி அமைச்சரும் அதிபர் ராஜபட்ச தலைமையிலான ஆளும் கூட்டணியின் பொதுச் செயலருமான சுசில் பிரேமஜயந்த மற்றும் சமூகநலத் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் யாழ்ப்பாணத்தில் முகாமிட்டிருந்தனர். தீவைப்பு சம்பவங்களுக்கு பின்னணியில் அமைச்சர்களுக்கு தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.மேலும் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் இலங்கை ராணுவ உளவுத்துறைக்கு நெருக்கமானவர்கள் என்றும் கூறப்படுகிறது.தமிழ் தேசிய கூட்டணி கண்டனம்: தமிழ் நாளிதழ்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டதற்கு தமிழ் தேசிய கூட்டணியின் எம்.பி.க்கள் மாவை சேனாதிராஜா மற்றும் சுரேஷ் பிரேமசந்திரன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.யாழ்ப்பாண நகராட்சி கவுன்சில் தேர்தலுக்கான மனுத் தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறாது என்பதையே இந்தத் தாக்குதல் சம்பவங்கள் காட்டுகின்றன என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்துக்கள்

ழிவுகள் தொடர்கின்றன! உலகமோ அமைதியைத் தொடருகின்றது! பேரவலங்களுக்கு முற்றுப்புள்ளி இல்லை! ஆனால், அமைதிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது உலகம்! மக்கள் பிறவியை மதிக்க வேண்டிய உலகம் மக்கள் உருவில் பிழையாய்ப் பிறந்தவர்கள் சொற்களுக்கு ஆடுகின்றது! சிங்களத்தையும் இந்தியத்தையும் தூக்கி எறிந்து விட்டு மனிதத்தைக் கையிலேந்தட்டும் உலகம்! அப்பொழுதுதான் மக்கள் உரிமையுடன் வாழ முடியும். வெல்க தமிழ் ஈழம்! மலர்க உலக-ஈழ நட்புறவு!

By Ilakkuvanar Thiruvalluvan
6/26/2009 5:50:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக