திங்கள், 22 ஜூன், 2009

கச்சத் தீவு பிரச்னையைத் தீர்ப்பதில் அக்கறை இல்லை:
அதிமுக மீது கருணாநிதி குற்றச்சாட்டு
தினமணி
First Published : 21 Jun 2009 07:45:30 PM IST

கருத்துகள்



என் செய்வது? யாருக்கும் அக்கறையுமில்லை! யாருக்கும் வெட்கமுமில்லை! வெறும் தீர்மானத்தால் எந்தப் பயனுமில்லை! ஆனால், ஆளும் கட்சிக்கும் ஆண்ட கட்சிகளுக்கும் இனி வாக்குமில்லை என்னும் நிலை வந்தால்தான் இனி எந்தச் சிக்கலுமில்லை! அதற்கு முன்னதாக எல்லாக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து உருப்படியாக ஏதாவது செய்து,'நமக்கு வெட்கமுமில்ல! சூடும் இல்லை! சொரணையுமில்லை!' என்னும் பழியினை இல்லை என ஆக்குங்களேன்!


அன்புடன் இலக்குவனார திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
6/22/2009 3:58:00 AM

எந்தக் கட்சித் தலைவரையும் பழி சுமத்த வேண்டாம். மக்களாகிய நாமும்தான் குற்றவாளிகள். கறை படாத உத்தமர் நமக்குள் எவரும் இல்லை. இப்போதுள்ள அறநெறி நூல்கள், இலக்கியங்கள் எதிலுமே தூய தமிழ்ப் பண்பாட்டுக்குரிய தெளிவு இல்லை. முதலாம் தமிழ் சங்கமும் தென்குமரி நாடும் கடலில் அழிந்த போதே தூய தமிழ்த் திருமறையாகிய செவ்வியம் என்ற தமிழ்முருகப் பண்பாட்டு வழிமுறையும் மறைந்து விட்டது. அப்பொழுது நம் ஆணவத்தாலும் அலட்சியத்தாலும் கைவிடப் பட்ட ஒழுக்கத்தை, நம் பண்பாட்டு ஆயுதத்தை மீண்டும் ஏந்துவோம். சத்தியமாக நம் உரிமைகளைப் பெறுவோம். கடவுள் நமக்கு உரிமைப் படுத்திய தூய அருள் ஆயுதத்தின் சக்தியை எந்த வல்லரசாலும் தடுக்கவே முடியாது. எப்படி என்றெல்லாம் விளக்கம் கேட்க வேண்டாம். நம் பண்பாட்டுக் கடமையை முதலில் ஒழுங்காக செய்வோம். மற்ற எல்லாக் கடமை உணர்வுகளும் நமக்குள் தானே பிறக்கும். தமிழ்மாண உணர்ச்சி இல்லாதவர்களை விட்டுவிடுங்கள், எக்கேடோ கெட்டு அழியட்டும். உண்மைத் தமிழர்கள் ஒன்று சேருவோம். திருமுருகாற்றுப் படைக்கு வாருங்கள்! உரிமைத்தமிழர் செவ்வேல் கட்டளை! thamilurimay@gmail.com

By sevvelar,Thiruppur
6/21/2009 8:44:00 PM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக