வெள்ளி, 26 ஜூன், 2009

தமிழகத்தை ஆளும் தகுதி காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது:
கே.வீ. தங்கபாலு
தினமணி


சென்னை, ஜூன் 25: தமிழகத்தை ஆளும் தகுதி காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது என அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.வீ. தங்கபாலு தெரிவித்தார்.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கும் இயக்கம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் வியாழக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது. முன்னாள் தமிழக அமைச்சர் பூவராகவன், தங்கபாலுக்கு உறுப்பினர் அட்டையை வழங்கி, உறுப்பினர் சேர்க்கும் இயக்கத்தை தொடக்கி வைத்தார்.

பின்னர் தங்கபாலு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 20 சதவீத வாக்கு வங்கி உள்ளது. மாநிலத்தில் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு அடுத்து மூன்றாவது பெரிய கட்சியாக காங்கிரஸ் கட்சி உள்ளது. மூன்றாம் இடத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியை முதல் இடத்துக்கு கொண்டு வருவதே எங்கள் நோக்கம்.

தமிழகத்தில் நீண்ட காலம் ஆட்சியில் இருந்த கட்சி காங்கிரஸ். மத்தியிலும் பல ஆண்டுகள் நிலையான ஆட்சியை அளித்து வரும் கட்சி எங்கள் கட்சிதான். எனவே தமிழகத்தில் ஆட்சி நடத்துவதற்கான எல்லா தகுதிகளும் காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது.

எனவே அதற்கேற்ப கட்சியை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளோம். இன்னும் 3 மாதங்களில் தமிழகத்தில் 50 லட்சம் உறுப்பினர்கள் கட்சியில் சேர்க்கப்படுவார்கள். தொடர்ந்து கட்சியின் கிராம அமைப்பு உள்பட அனைத்து மட்டங்களுக்கும் ஜனநாயக ரீதியில் தேர்தல் மூலம் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்தியாவில் எல்லா மாநிலங்களும் காங்கிரஸ் கட்சியின் தலைமையின் கீழ் வந்து கொண்டிருக்கின்றன. எனவே தமிழகமும் காங்கிரஸ் தலைமையின் கீழ் வர வேண்டும். இல்லாவிட்டால் தேசிய நீரோட்டத்திலிருந்து தமிழகம் தனித்து விடப்படும் நிலை ஏற்படும் என்றார் தங்கபாலு.

கருத்துக்கள்


(1/2) காங்.ஆட்சியில்தான் தமிழக நிலப்பரப்புகள் பறிபோயின; தமிழக உரிமைகள் பறிபோயின; தில்லிக்குக் காவடி தூக்கும் காட்சிகள் அரங்கேறின; மொழி உரிமை பறிக்கப்பட்டது; பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்து பரப்புரிமைகள் கூடப் பறிக்கப்பட்டன; சான்றாகத்திரைப்படப் பாடலில் ''பேச்சில் சிறந்தவர் யாரு? அண்ணா'' என்று வந்தது தடைசெய்யப்பட்டதால்தான் திருவிக என மாற்றப்பட்டது. மாணாக்கர்களுக்கு அரிவாள் வெட்டுகள் விழுந்தன; தேர்தல் பரப்புரையின் பொழுது மாடிகளில் இருந்து கீழே தள்ளிவிடப்படடனர். காவல் வைப்பின் பொழுது சிறுநீரைக்குடிக்கச் செய்தல் போன்ற கொடுமைகளும் அடிஉதை வதைகளும் நிகழ்த்தப்பட்டன. சிறைகளில் வன்கொடுமைகள் நிகழ்ந்தன. இன்றைய காவல்துறையினரின் கொடுமைகளுக்கும் வருவாய்த்துறை, நீதித்துறை உட்பட அனைத்துத் துறை ஊழல்களுக்கும் மூல வித்தே காங்.தான். 67 இலிலேயே விரட்டி அடிக்கப்பட்ட காங். நீண்டகாலம் ஆண்டதாகப் பொய்யான தகவலைத் தெரிவிப்பது போல் இன்றைய தலைமுறையினர் அறியார் என எண்ணி உண்மைகளை மறைக்கப் பார்க்கின்றார். (2/2) தொடர்ச்சி காண்க.


அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/26/2009 4:59:00 AM
(2/2) (1/2இன் தொடர்ச்சி) உலகெங்கும் உள்ள தமிழ்மக்கள் ஒடுக்கப்படுவதற்கும் கொத்தடிமைகள் ஆக்கப்படுவதற்கும் அண்மையில் ஈழத்தில் பேரவலங்களைச் சந்தித்ததற்கும் காங்.தான் காரணம் என அனைவரும் அறிவர். கலைஞர் உயரூட்டாமல் இருந்திருந்தால் என்றைக்கோ இருந்த இடம் தெரியாமல் மறைந்திருக்கும். இவரையும் இவர் பிதற்றல்களையும் பொருட்படுத்தக் கூடாது என்பதற்காக 12.30 மணிக்குத் தினமணி படித்த பொழுது புறக்கணித்தேன். ஆனால், தொடர்ந்து புளுகு மூட்டை அவிழ்த்து விடப்படக் கூட இடந்தரக்கூடாது என்பதற்காக இப்பொழுது படித்துப் பதிகின்றேன். தன்மானமும் தமிழ் மானமும் உள்ளவர்கள், தமிழ் மொழி, தமிழ் இன, தமிழ்ப்பண்பாட்டு அவலங்களுக்கும் பின்னடைவுகளுக்கும் காரணமான பேராயக்கட்சி எனப்படும் காங்கிரசு கட்சியை இருந்த இடம் தெரியாமல் விரட்ட வேண்டும். அக்கட்சியில் உள்ள மனித நேயர்கள் அதனை விட்டு வெளியே வர வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
6/26/2009 4:59:00 AM

what a stupid desire! having sacrificed lakhs of tamils in lanka to avenge the death of one man who was instrumental in raping my tamil sisters and killing my tamil siblings, having a spiteful italian woman as its leader, if the congress dreams of ruling t.n., there cannot be a parallel to the midsummer madness of ethinic traitors like kv balu and his ilk. people's ire will singe the congress and its cronies soon.

By arunachalam
6/26/2009 12:27:00 AM

ஹல்லோ தங்கபாலு . தமிழகத்தில் நீ தொங்கலாம் ஆனால் தங்க முடியாது

By R Natraj
6/26/2009 12:12:00 AM

Thangabalu, Already your congress has killed tamilians in SL. Now you want to continue in tamilnadu also. Forget about "Desiya Neerottam", first try to bring Cauvery Neerottam. Thanks for your conformation that tamilnadu will become separate entity. At least by the name of nearby nation, tamilnadu can get cauvery water from India according to International Law.

By A tamil slave from India
6/25/2009 11:15:00 PM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக