சனி, 13 ஏப்ரல், 2013

முகநூலால் உடனடித் தீர்வு!








http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_68878220130412230242.jpg

முகநூலால்  உடனடி த் தீர்வு!

"பேஸ்புக்' மூலம், பொதுமக்களின் பிரச்னையை உடனடியாக தீர்க்கும், நகராட்சி தலைவி சுமித்ரா ரவிக்குமார்: நான், தேவக்கோட்டை நகராட்சியின் தலைவராக, பணியாற்றி வருகிறேன். நகராட்சித் தலைவியாக பொறுப்பு வகிப்பதற்கு முன், "பேஸ்புக்' எனும் முகநூல் போன்ற, சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்தியதில்லை. ஆனால், அதன் பயன்பாடுகள் பற்றி, நிறைய கேள்விபட்டிருக்கிறேன்.பெண்ணான என்னை, ஒரு நகராட்சியின் தலைவராக தேர்ந்தெடுத்த பொதுமக்களுக்கு உதவும் வகையில், பேஸ்புக் வழியாக, நகராட்சி தொடர்பான செய்திகளை, மக்களிடம் உடனடியாக கொண்டு செல்லவும், மக்களின் குறைகள் மற்றும் தேவைகளை அறிந்து, அவற்றை விரைவாக நிறைவேற்ற முடியும் என்ற எண்ணத்தில், பேஸ்புக்கான என் பகுதியை, "சேர்மன் ஆப் தேவக்கோட்டை' என்ற பெயரில் ஆரம்பித்தேன்.ஒருமுறை, தேவக்கோட்டை தியாகிகள் சாலையில், மணல் மற்றும் கற்கள் குவியலாக கொட்டப்பட்டிருப்பதால், போக்குவரத்துக்கு இடையூறாகவும், இருசக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு இடறி விழும் அபாயம் இருப்பதாகவும், ஒரு இளைஞர், தகவல் அனுப்பியிருந்தார். உடனே அந்த இளைஞரின் தகவலை புகாராக எடுத்து, சாலையில் உள்ள மணல் மற்றும் கற்களை அகற்றி சாலையை சுத்தப்படுத்தினேன்.
அதுபோல், தேவக்கோட்டை தினசரி மார்க்கெட் பின்புறமாக, புதிதாக பூ மற்றும் பழ மார்க்கெட் கட்ட, நகராட்சி முயன்ற போது, சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்பிரச்னையை, உடனடியாக மக்களிடம் கொண்டு சென்று, அவர்களின் கருத்துக்களை அறிய, பேஸ்புக் உதவியாக இருந்தது.தண்ணீர் சிக்கனம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவது, மக்களின் தேவை மற்றும் பொது பிரச்னையை தீர்ப்பது என, ஓரிடத்திலிருந்தே செயல்படுத்த முடிகிறது. இதனால், பொதுமக்கள் எங்கும் அலைந்து திரிந்து, அலைக்கழிக்கப்படாமல் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக