வெள்ளி, 12 ஏப்ரல், 2013

பசுமை 90.4 பண்பலை வானொலி




பசுமை 90.4  பண்பலை வானொலி வானொலி மூலம் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும், "அமைதி' அறக்கட்டளையின் தலைவர், பால்பாஸ்கர்: நான், திண்டுக்கல் மாவட்டத்தில், ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். 1984ல், அமைதி அறக்கட்டளையை நிறுவி, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, சுற்றுச்சூழல் மாசு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, விவசாயமும் செய்து வந்தேன். திண்டுக்கல்லில், விவசாயமே முக்கிய தொழில். சுற்றியுள்ள சமவெளி மற்றும் மலைப் பகுதிகளில், காப்பி, தேயிலை, காய்கறிகள், பழங்கள், பூக்கள் போன்றவற்றை, பிரதானமாக விவசாயம் செய்தனர். இது, குறைந்தளவே மழை பெய்யும் மாவட்டம். குடகனாற்றுத் தண்ணீரும், விவசாயத்திற்கு போதுமானதாக இல்லை. இங்குள்ள மக்களிடம், விவசாயம் பற்றிய சரியான புரிதல் இல்லாததால், வறண்ட நிலத்தில், நீரை அதிகம் உறிஞ்சக்கூடிய நெல், வாழை போன்ற, தவறான பயிர்களை பயிரிட்டதாலும், உடனுக்குடன் விவசாயம் தொடர்பான சந்தை நிலவரங்களை அறிய முடியாததாலும், அதிக நஷ்டம் அடைந்தனர். ஓரளவு வசதியான குடும்பம் என்பதால், நான் பாதிப்பிலிருந்து தப்பினாலும், அந்த ஏழை விவசாயிகளின் நிலையை உணர்ந்து, அவர்களுக்கு, விவசாயம் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் தரவும், விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அமைதி அறக்கட்டளை மூலம், சிறுமலை என்ற இடத்தில், 2007ல், "பசுமை 90.4 எப்.எம்.,' என்ற சமுதாய வானொலியை, எந்தவித லாப நோக்கமும் இன்றி துவக்கினேன். ஆரம்பத்தில், திண்டுக்கல்லை சுற்றியுள்ள பகுதிகளுக்கு, வெறும், நான்கு மணி நேரம் மட்டுமே தகவல்களை ஒலிபரப்ப முடிந்தது. பின், விவசாயிகளிடமிருந்து வரவேற்பு அதிகரித்ததால், தற்போது, திருச்சி, கரூர், திருப்பூர், மதுரை போன்ற மாவட்டங்களுக்கும், காலை, 6:00 மணி முதல், இரவு, 12:00 மணி வரை, தினமும், 18 மணி நேரம், விவசாயம் தொடர்பான செய்தி மற்றும் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி வருகிறோம். தொடர்புக்கு: 94433 41082.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக