வெள்ளி, 12 ஏப்ரல், 2013

கடை நடத்தும் ஒலிம்பிக் வீராங்கனை

சாலையோர கடை நடத்தும் ஒலிம்பிக் வீராங்கனைஎன்னும் தலைப்பில் ஏப்.11 இல் செய்தி வெளியிட்டுள்ளீர்கள். இப்பொழுது  அதே செய்தி கூடுதல் விவரங்களுடன். இவ்வாறு அவ்வப்பொழுது ஒரே செய்தி இரு வகையில் வெளி வருகிறது. முதல் செய்தியிலேயே  சேர்க்கப்பட்ட அல்லது மாற்றப்பட்ட விவரங்களைச் சேர்த்து வெளியிடலாமே! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/



ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கியவர் பானிபூரி கடை நடத்துகிறார்



ரேவா: மாற்றுத் திறனாளிகளுக்கான, சிறப்பு ஒலிம்பிக் போட்டியில், இந்தியாவுக்கு இரண்டு வெண்கலப் பதக்கங்களை பெற்றுத் தந்த வீராங்கனைக்கு, நமது ஆட்சியாளர்கள் அறிவித்தபடி, உதவிதொகை கிடைக்கவில்லை. இதனால், வாழ்க்கையை ஓட்ட, சாலையோரம் பானிபூரி விற்கும் நடைபாதை கடையை நடத்தி வருகிறார்.

மாற்றுத் திறனாளி: மத்திய பிரதேச மாநிலம், ரேவாவைச் சேர்ந்த சீதா சாகு, ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். மாற்றுத் திறனாளியான இவர், ஏதென்சில், 2011ல் நடந்த, சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றார். 200 மீ, 1,600 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில், வெண்கலப் பதக்கங்கள் வென்றார். இது, இவருக்கு பெரும் மகிழ்ச்சியையும், தொடர்ந்து விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற ஆசையையும் ஏற்படுத்தியது. இந்தியா திரும்பியதும், தான் பெற்ற பதக்கங்களுடன், ம.பி., மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானை சந்தித்து பேசினார். சீதாவின் சாதனையை பாராட்டிய சவுகான், அவருக்கு தேவையான உதவிகளை அளிப்பதாக உறுதி அளித்தார். இதனால், மிகுந்த நம்பிக்கையுடன் வீடு திரும்பிய சீதா, அரசிடம் இருந்து உதவி வரும் என, எதிர்பார்த்து காத்திருந்தார். சர்வதேச அளவில், ஒலிம்பிக் போட்டி உட்பட முக்கிய போட்டிகளில், பதக்கம் பெறும் ம.பி., மாநிலத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு, பரிசுப்பணம் வழங்கப்படும் என, மாநில சமூக நீதி துறை அமைச்சர் கோபால் பார்கவா அறிவித்து இருந்தார். அவரது அறிவிப்பின்படி பார்த்தாலே, சீதா சாகுவுக்கு, 50 ஆயிரம் வீதம், ஒரு லட்ச ரூபாய் பரிசு பணமாக கிடைத்து இருக்கவேண்டும்; அதுவும்

கிடைக்கவில்லை.

கணவர் சரியில்லை: அரசின் உதவியும் கிடைக்கவில்லை; சீதாவின் கணவரும், குடும்பத்தை காப்பாற்றும் நிலையில் இல்லாததால், குடும்ப கஷ்டத்தை போக்க, சீதா ஏதாவது செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். கடைசியில், சாலையோரம், பானிபூரி விற்கும் கடையை துவக்கி நடத்தி வருகிறார். இதில், கிடைக்கும் வருமானமும் போதுமானதாக இல்லாததால், மற்ற தின்பண்டங்களையும் விற்க முயன்று வருகிறார். உதவுவதாக உறுதியளித்த ஆட்சியாளர்களிடம் இருந்து, உதவி கிடைக்காததால், சீதா விரக்தி அடைந்துள்ளதாக அவரது தாயார் கூறினார். மேலும் அவர் கூறுகையில், ""பதக்கம் வென்றவர்களுக்கு, மாநில அரசு சார்பில், நியாயமா கிடைக்க வேண்டிய, ஒரு லட்ச ரூபாய் கிடைத்தால், சீதா தன் வியாபாரத்தை விரிவுப்படுத்த வசதியாக இருக்கும். இதை பார்த்த பிறகாவது, ஆட்சியாளர்கள் முன்வரவேண்டும்,'' என்றார். 

 சாலையோர க் கடை நடத்தும் ஒலிம்பிக் வீராங்கனை


போபால்: மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் இரண்டு வெண்கலப்பதங்கங்களை வென்ற சீதா சாஹூ, தற்போது சாலையோர கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 2011ம் ஆண்டு கிரீஸ் தலைநகர் ஏதென்சில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில், இந்திய வீராங்கனை சீதா சாஹூ, 200 மீட்டர் மற்றும் 1600 மீட்டர் தடகளப் போட்டியில் பங்கு பெற்று வெண்கலப்பதக்கங்களை பெற்றார். இதையடுத்து அவருக்கு அரசு பல்வேறு உதவிகளை அறிவித்தது. எனினும் அறிவிக்கப்பட்ட எந்த உதவிகளும் இதுவரை சீதாவுக்கு சென்றடையவில்லை. இதனால் விரக்தியடைந்த சீதா, தனது வறுமையை போக்கிக் கொள்ள தற்போது சாலையோர கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்தியாவில் விளையாட்டு வீரர்கள் எவ்வாறு நடத்தப்படுகின்றனர் என்பதற்கு ஒரு சாட்சியாக இருந்து வருகிறார் சீதா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக