பன்னிரண்டாவது உலகத் தமிழ் இணைய மாநாடு
கோலாலம்பூர், மலேசியா 15th-18th ஆகஸ்ட், 2013
கோலாலம்பூர், மலேசியா 15th-18th ஆகஸ்ட், 2013
உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம் (உத்தமம்) அமைப்பு 12ஆவது உலகத் தமிழ் இணைய மாநாட்டை மலேசியாவின் முதன்மைப் பல்கலைக்கழகமான மலாயாப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து நடத்துகிறது. மலாயாப் பல்கலைக்கழகத்தின் மொழி மொழியியல் புலம், தகவல் தொழில்நுட்ப நடுவம் ஆகியவற்றுடன் இணைந்து திதியான் டிஜிட்டல் திட்டத்தின் ஆதரவுடனும் இம்மாநாடு நடைப்பெறுகிறது
கணினி, இணையம் ஆகியன தொடர்பாகத் தமிழின் பயன்பாடுகள் பற்றிய ஆய்வுகள் உலகெங்கும் தமிழர்களிடையே பரவும் வகையில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக உத்தமம் அமைப்பு உலகத்தமிழ் மாநாடுகளை நடத்தி வருகிறது. உத்தமம் உலகத்தமிழர்களை இணையத்தின் வாயிலாக இணைப்பதில் வெற்றி கண்டுள்ளது.
இது வரை எட்டு மாநாடுகளை அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, ஜெர்மனி, இந்தியா ஆகிய நாடுகளில் முன்னணிப் பல்கலைக் கழகங்களோடு இணைந்தும், தமிழகத்தில் மூன்று மாநாடுகளை தமிழக அரசின் முழு ஆதரவோடும் உத்தமம் நடத்தியிருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. இந்த ஆண்டு மலேசியாவின் தலைநகரம் கோலாலம்பூரில் உள்ள மலாயாப் பல்கலைக் கழகத்தின் ஆய்வு மேலாண்மை கண்காணிப்பு நடுவத்தில், வரும் ஆகஸ்டு 15 முதல் 18 வரை “12ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு 2013”ஐ நடத்த உத்தமத்தின் செயற்குழு முடிவெடுத்துள்ளது. உத்தமத்தின் தலைவர் சி. ம. இளந்தமிழ் அவர்கள், மாநாட்டின் உள்ளூர்க் குழுவுக்குத் தலைமை தாங்கவிருக்கிறார். உத்தமம் அமைப்பின் மேனாள் தலைவர் திரு மணி மு. மணிவண்ணன் அவர்கள் மாநாட்டின் பன்னாட்டுக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
முந்தைய இணைய மாநாடுகளைப் போலவே வரும் 2013 மாநாடும் கருத்தரங்கு, கண்காட்சி, மக்கள் கூடம் என்று மூன்று முனைகளில் செயல்படும். ஆய்வுக் கருத்தரங்கு மற்றும் பயிலரங்கு ஆகஸ்டு 15, 16, 17 ஆகிய மூன்று நாட்களில் நடக்கவிருக்கிறது. கண்காட்சியும் மக்கள் கூடமும் ஆகஸ்டு 16, 17, 18 ஆகிய மூன்று நாட்களில் நடக்கும். மாநாட்டுக்குப் பதிவு செய்த பேராளர்கள் மட்டுமே கருத்தரங்கு மற்றும் பயிலரங்கில் கலந்து கொள்ளலாம். கண்காட்சியிலும் மக்கள்கூடத்திலும் பொதுமக்கள் பார்வையாளர்களாகப் பங்கேற்கலாம்.
கருத்தரங்குகளில் பல்வேறு ஆய்வாளர்கள் கணினித்தமிழ் குறித்த தங்களின் ஆய்வுகளை ஏனைய ஆய்வாளர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். மாநாட்டின் கருத்தரங்கக் குழுவுக்கு முனைவர் பத்ரி சேஷாத்திரிஅவர்கள் தலைமைப் பொறுப்பு ஏற்றுள்ளார். கருத்தரங்குக் குழு மாநாட்டுக்கான ஆய்வுக் கட்டுரைகளைத் தேர்வு செய்வதுடன், கருத்தரங்குகளைச் செவ்வனே நடத்தும் பொறுப்பையும் வகிக்கும். இவ்வாண்டின் கருத்தரங்கிற்கு “கையடக்கக் கணினிகளில் தமிழ்க் கணிமை”என்ற தலைமைக் கருத்தை ஒட்டிய ஆய்வுக்கட்டுரைகளை வரவேற்கிறோம்.
இணைய மாநாடுகள் ஆய்வாளர்களின் கருத்துப் பரிமாற்றத்துக்கு வழிவகுப்பது மட்டுமல்லாமல், மக்கள் கூடத்தின் மூலம் கணித்தமிழ் நுட்பங்களைப் பரப்புதல், கணித்தமிழ் மென்பொருட்கள் மற்றும் கருவிகளைக் கண்காட்சிகள் மூலம் பொதுமக்களுக்கு அறிமுகம் செய்தல் போன்ற பல்வேறு செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாண்டு மாநாட்டின் மக்கள் கூடம் மூலம் கணித்தமிழ் நுட்பங்களை இத்துறையின் வல்லுநர்கள் மற்றும் மாணவர்களிடையே பரப்புதல், பயிலரங்குகள் நடத்திக் கணித்தமிழின் நுட்பங்களைப் பயிற்றுவித்தல், கணினி வழியாகக் கற்கும் மற்றும் கற்பிக்கும் பல்வேறு முறைகளை ஆசிரியர்களிடம் பரப்புதல் போன்ற முயற்சிகளை எடுக்கவிருக்கிறோம். கடந்த ஆண்டுகளை போலவே இவ்வாண்டும் கணித்தமிழ்ச் சங்கம் கண்காட்சி அரங்கம் ஏற்பாடுகளில் பெரும்பங்கு வகிக்கும்.
கீழ்க்கண்ட தலைப்புகளில் கட்டுரைகளை வரவேற்கிறோம்:
- செல்பேசிகள் மற்றும் பலகைக் கணினிகளில் முக்கியமாக ஐ.ஓ.எஸ், ஆண்டிராய்டு மற்றும் விண்டோஸ் தளங்களில் தமிழைப் படித்தல், தமிழில் எழுதுதல்.
- மின் நூல்கள், மின் இதழ்கள் ஆகியவற்றைக் கைக் கருவிகளில் கொண்டுவர உதவும் செயலிகள் மற்றும் தொழில்நுட்பம்.
- ஐ.ஓ.எஸ், ஆண்டிராய்டு, விண்டோஸ் மற்றும் எச்.டி.எம்.எல் 5 குறுஞ்செயலிகள் (Apps).
- திறவூற்றுத் தமிழ் மென்பொருள்கள், தன்மொழியாக்கல்.
- இயன்மொழிப் பகுப்பாய்வு பிழைதிருத்தி, தமிழ் எழுத்துரு பகுப்பி, ஒலி உணர்தல், தேடல்பொறிகள் , இயந்திர மொழிமாற்றம், தகவல் அகழ்தல் போன்றவை.
- தமிழ் இணையத்தின் தற்போதைய நிலை: வலைப்பதிவு, சமூக வலைத்தளங்கள், விக்கிப்பீடியா, குரல் வலை போன்றவை.
- தமிழ் தரவுத்தளங்கள்.
- கணினி வழி தமிழ் கற்றல் மற்றும் கற்பித்தல் குறித்தான ஆய்வுகள்
- தமிழ்க் கணினி சொல்லாக்க ஆய்வுகள்.
- கணினி வழி தமிழ்மொழி பகுப்பாய்தல் மற்றும் கணினிக்கு தமிழ் மொழியறிவு ஊட்டல் பற்றிய ஆய்வுகள்.
கட்டுரைகள் மின்னஞ்சல் மூலமாக
மட்டுமே அனுப்பப்படவேண்டும். ஆய்வுச் சுருக்கங்களும் இறுதிக் கட்டுரையும்
திருத்தக்கூடிய வடிவத்தில் மட்டுமே அனுப்பப்படவேண்டும். இவை உரைக்
கோப்புகளாக, எச்.டி.எம்.எல் வடிவில், மைக்ரோசாஃப்ட் வேர்ட் அல்லது ஓப்பன்
ஆஃபீஸ் கோப்புகளாக இருக்கலாம். பி.டி.எஃப் அல்லது அதுபோன்ற திருத்தமுடியாத
வடிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படா. கட்டுரைகள் ஆங்கிலத்திலோ, தமிழிலோ அல்லது இரு
மொழிகளும் கலந்த வகையிலோ இருக்கலாம். தமிழில் அல்லது இருமொழியில்
இருந்தால், யூனிகோட் குறியீட்டில் மட்டுமே இருக்கலாம். பிற குறியீடுகளைக்
கொண்டு அனுப்பப்படும் கட்டுரைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.
மாநாட்டு இதழ் ஒன்று அச்சு
வடிவிலும் மின் வடிவிலும் வெளியிடப்படும். ஏற்றுக்கொள்ளப்பட்டு, மாநாட்டில்
நேராகப் படிக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகள் மட்டுமே மாநாட்டு இதழில்
சேர்த்துக்கொள்ளப்படும். கட்டுரைகள் அனுப்புவோர் நேராக மாநாட்டுக்கு வந்து
கட்டுரைகளைப் படிக்க ஒப்புக்கொள்கிறார் என்று புரிந்துகொள்ளப்படும்.
(ஏ4 அளவில்) இரு பக்கங்களுக்கு மிகாது கட்டுரைச் சுருக்கங்களை நிகழ்ச்சிகள் குழுவுக்கு cpc@infitt.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். கட்டுரை வந்து சேர்ந்தது குறித்து உடனடியாக உங்களுக்கு மின்னஞ்சல் வாயிலாகத் தகவல் தெரிவிக்கப்படும். மேலும் கட்டுரைச் சுருக்கங்களை ti2013.infitt.org என்ற இணைய தளம் மூலமும் சமர்ப்பிக்கலாம். கட்டுரைச் சுருக்கங்களை அனுப்பக் கடைசி தேதி மே 31, 2013 ஆகும்.
(ஏ4 அளவில்) இரு பக்கங்களுக்கு மிகாது கட்டுரைச் சுருக்கங்களை நிகழ்ச்சிகள் குழுவுக்கு cpc@infitt.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். கட்டுரை வந்து சேர்ந்தது குறித்து உடனடியாக உங்களுக்கு மின்னஞ்சல் வாயிலாகத் தகவல் தெரிவிக்கப்படும். மேலும் கட்டுரைச் சுருக்கங்களை ti2013.infitt.org என்ற இணைய தளம் மூலமும் சமர்ப்பிக்கலாம். கட்டுரைச் சுருக்கங்களை அனுப்பக் கடைசி தேதி மே 31, 2013 ஆகும்.
பேரா. மு. அனந்த கிருஷ்ணன் ஆய்வுக் கட்டுரைப் போட்டி:
மாநாட்டில் கலந்து கொள்ளும் ஆய்வாளர்களில் நான்கு (4) சிறந்த ஆய்வுக் கட்டுரைகளுக்கு பே.ரா. மு. அனந்த கிருஷ்ணன் விருது வழங்கப்படும்.
தமிழ் குறுஞ்செயலி உலகப் போட்டி:
கையடக்கக் கணினிகளின் தொழில்நுட்பம் வளர்ந்து கொடுப்பதற்கு ஈடாகத் தமிழிலும் குறுஞ்செயலிகள் (Applets or Apps) வளர வேண்டும் என்பதை உணர்ந்தும் மேலும் பல நிரலாளர்களைத் (programmers) கணினித்தமிழுக்கு ஈர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடனும், தமிழுக்கான சிறந்த குறுஞ்செயலிப் போட்டி ஒன்றை அறிவிக்கிறோம். ஆப்பிள் ஐ-ஓஎஸ், ஆண்டிராய்டு, விண்டோஸ்8 தளங்களுக்கான குறுஞ்செயலிகள் போட்டியில் பங்கேற்கலாம். போட்டியைப் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு உத்தமத்தின் வலைத்தளம் ti2013.infitt.org அணுகவும்.
மாநாடு குறித்த கூடுதல் விவரங்களுக்குக் கீழ்க்காணும் மின்முகவரிகளில் தொடர்பு கொள்ளவும்: ed@infitt.org மற்றும் chair@infitt.org
இவண்:
சி. ம. இளந்தமிழ்
தலைவர் உத்தமம், மலேசியா
செல்: 0060-12314390
chair@infitt.org
அ. இளங்கோவன்
செயல் இயக்குனர், உத்தமம், சென்னை, இந்தியா
செல்: 0091-98410 23223
ed@infitt.org
மாநாட்டில் கலந்து கொள்ளும் ஆய்வாளர்களில் நான்கு (4) சிறந்த ஆய்வுக் கட்டுரைகளுக்கு பே.ரா. மு. அனந்த கிருஷ்ணன் விருது வழங்கப்படும்.
தமிழ் குறுஞ்செயலி உலகப் போட்டி:
கையடக்கக் கணினிகளின் தொழில்நுட்பம் வளர்ந்து கொடுப்பதற்கு ஈடாகத் தமிழிலும் குறுஞ்செயலிகள் (Applets or Apps) வளர வேண்டும் என்பதை உணர்ந்தும் மேலும் பல நிரலாளர்களைத் (programmers) கணினித்தமிழுக்கு ஈர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடனும், தமிழுக்கான சிறந்த குறுஞ்செயலிப் போட்டி ஒன்றை அறிவிக்கிறோம். ஆப்பிள் ஐ-ஓஎஸ், ஆண்டிராய்டு, விண்டோஸ்8 தளங்களுக்கான குறுஞ்செயலிகள் போட்டியில் பங்கேற்கலாம். போட்டியைப் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு உத்தமத்தின் வலைத்தளம் ti2013.infitt.org அணுகவும்.
மாநாடு குறித்த கூடுதல் விவரங்களுக்குக் கீழ்க்காணும் மின்முகவரிகளில் தொடர்பு கொள்ளவும்: ed@infitt.org மற்றும் chair@infitt.org
இவண்:
சி. ம. இளந்தமிழ்
தலைவர் உத்தமம், மலேசியா
செல்: 0060-12314390
chair@infitt.org
அ. இளங்கோவன்
செயல் இயக்குனர், உத்தமம், சென்னை, இந்தியா
செல்: 0091-98410 23223
ed@infitt.org
12th International Tamil Internet Conference
Kuala Lumpur, Malaysia 15th to 18th August, 2013
International Forum for Information Technology (INFITT) is pleased to announce that the 12th
International Tamil Internet Conference, TI-2013 will be held at
University of Malaya, Kuala Lumpur, Malaysia during August 15-18, 2013
.This conference jointly organized by INFITT and University of Malaya
with the support of Faculty of Languages & Linguistics, Centre for
Information Technology and Program Titian Digital.
INFITT
has hosted eight conferences in the USA, Singapore, Malaysia, Germany
and India in collaboration with major universities such as University of
California at Berkeley, University of Pennsylvania, Cologne University,
National University of Singapore, Annamalai University and in Tamil
Nadu has organized three conferences with the full support of the
Government of Tamil Nadu. This year, INFITT’s executive committee has
decided to organize the conference on August 15th, 16th, 17th and 18th
at University of Malaya, Malaysia. C.M.Elanttamil, Chairman of INFITT,
will chair the Local Organizing Committee (LOC). Mr. Mani M.
Manivannan, immediate past Chairman of INFITT, will chair the
International Organizing Committee.
Like
the earlier Tamil Internet Conferences, the TI-2013 will also have the
three components – Research Conference, Exhibition and Community
Program. The research papers related to Tamil computing will be
presented on August 16th and 17th. Exhibition and Community Program will be open on August 15th 16th, 17th and 18th.
Conference Research Program and Tamil Computing Workshops are open only
to registered participants while the Exhibition and Community Programs
are open to the general public. Dr.
Badri Seshadri will chair the Conference Program Committee (CPC) which
will deal with research paper submissions and scheduling of the research
presentations at the conference. We invite research papers related to
the conference theme of “Tamil Computing for Mobile Devices.” In
addition to this, we welcome papers related to Computational
Linguistics, Open Source software, eCommerce applications, and other
topics of interest to Tamil computing.
In
addition to hosting a forum for researchers to exchange ideas, Tamil
Internet conferences also serve the larger Tamil community by spreading
Tamil Computing technology as well as introducing Tamil software
applications to the general public through exhibitions and community
programs like in the earlier years. Kanithamizh Sangam will play
important role in the organizing of exhibitions.
We welcome research papers on the following topics to be addressed at various technical sessions of the Conference.
- Reading and writing Tamil in mobile phones and tablets, with particular emphasis on iOS, Android and Windows 8 platforms.
- Applications, platforms and technology for presenting e-books and e-magazines across handheld computing devices.
- Apps for iOS Android, Windows and HTML 5 platforms.
- Open source Tamil software and Tamil localization.
- NLP applications in Tamil: Spellchecker, OCR, Voice recognition, speech synthesis, Search engines, Machine Translation, Datamining, etc.
- Current status of Tamil Internet: Blogging, Micro-blogging, Wikipedia, Podcasting etc.
- Tamil Databases.
- Computer Assisted Tamil Teaching and Learning.
- Tamil Computing glossary.
All
submissions must be in the electronic form. All the abstracts and the
final papers must be submitted in an editable format. This could be in
the form of Plain Text, HTML, Microsoft Word or Open Office formats. PDF
or similar non-editable formats shall not be accepted. The abstracts as
well as the papers may be presented in English, Tamil or bilingual
(Tamil-English) format. For papers with content in Tamil or bilingual,
only Unicode encoding will be accepted. Papers presented in any other
encoding will be summarily rejected.
The
Conference Proceedings will be published in printed paper format and as
an e-book. Only those papers which are accepted and presented in person
at the conference will be included in the Conference Proceedings. It is
assumed that submission of a paper for possible presentation at TI2012
implies attendance at the conference and presentation in person by at
least one author of the paper.
Abstracts of not more than two pages (A4 size) may be sent to the CPC at cpc@infitt.org.
Conference Program Committee will send a confirmation of the receipt of
the abstract. Abstracts can also be submitted through the website
ti2013.infitt.org. The last date for submitting abstracts is 30th May
2013.
Prof. M. Ananda Krishnan Research Paper Awards:
From
among the Research paper presenters, four (4 Nos.) best research papers
will be selected for the Prof. M.Ananda Krishnan Research Paper Award.
GLOBAL TAMIL APP CONTEST:
To
keep pace with the rapid technology development of handheld devices and
with an aim to attract more programmers to Tamil Computing, INFITT is
announcing a Global Tamil App Contest for Apple iOS, Android, Windows 8
and HTML 5 devices. Further details on the contest are available at the
INFITT web site http://ti2013.infitt.org
For further details, please contact: ed@infitt.org and chair@infitt.org
Information about this conference will be updated on a regular basis in our website: http://ti2013.infitt.org. You are also requested to register your participation in the conference using this website.
Sincerely,
C.M.Elanttamil
Chair, INFITT, Malaysia
mobile: 0060-123143910
A.Elangovan
Executive Director, INFITT,
Chennai, India
mobile: 98410-23223
TI2013 Help Desk For all enquiries and clarifications, please send email to helpdesk@infitt.org Help Line : ============================================ Submit your papers through http://ti2013.infitt.org/paper-submission [OR] Send by email with attachment to cpc@infitt.org ================================= To Register for the 12th International Tamil Internet Conference TI2013 please go to "REGISTRATION" menu. ==================== http://ti2013.infitt.org/registration ===================================
ஆய்வுச் சுருக்கங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் - 31 மே 2013
ஆய்வுச் சுருக்கங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் 31 மே 2013
ஆகும். மாநாட்டுக்குழு ஆய்வுச் சுருக்கங்களைப் பரிசீலித்து மாநாட்டில்
சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகளைத் தேர்ந்தெடுக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட
கட்டுரையாளர்களுக்கு 15 ஜூன் 2013-க்குள் தகவல் தெரிவிக்கப்படும்.
Last date for submission of the Abstracts - 31st May 2013
The last date for submission of the abstracts of the conference papers has been extended upto 31st May 2013. Authors whose papers have been selected for presentation for the conference will be informed by 15th June 2013.
|
அருமையான தகவல்! நன்றி ஐயா!
பதிலளிநீக்குWell Compiled. Thanks.
பதிலளிநீக்குMRV Nath